இந்தியாவே இந்த காருக்காக தான் வெயிட்டிங்! அப்படி இதுல என்னதாங்க இருக்குது?
மாருதி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் காரை வரும் செப்டம்பர் மாதம் வெளியிட தயாராகி வருகிறது.இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார்களின் தயாரிப்பை அந்நிறுவனம் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில் இந்த கார் குறித்த சில முக்கியமான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.
உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி மக்கள் நகர துவங்கிவிட்டனர். மாருதி எலெக்ட்ரிக் காருக்குள் வருது இதுவே காலதாமதம் தான். இந்நிறுவனம் அதிகமாக எலெக்ட்ரிக் கார்கள் மீது ஆர்வம் காட்டாமல் இருந்தா நிலையில் மக்கள் மத்தியில் இந்த கார்கள் வரவேற்ப்பை பெறுவதால் தனது நிலைப்பாட்டை மாற்றி முதல் இவி காரை உருவாக்கியுள்ளது.

இந்த காருக்கு இ-விட்டாரா என அந்நிறுவனம் பெயர் வைத்துள்ளது. இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் இந்த கார் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள ஆலையில் இந்த காரின் உற்பத்தியை துவங்கி வைத்தார். இது மட்டுமல்லாமல் இந்நிறுவனம் ஹைபிரிட் கார்களுக்கான பேட்டரியை தயாரிக்கும் ஆலையையும் துவக்கியுள்ளது.
இந்நிலையில் வரும் செப்டம்பர் 3ம் தேதியே இந்த காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் சர்வதேச அளவிலிருந்து குவிந்த ஆர்டர்கள் மற்றும் ரேர் எர்த் எலெமெண்ட் போன்ற மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக இந்த அறிமுகத்தை சற்று தள்ளிப்போட்டிருப்பதாக தெரிகிறது. இது குறித்து மாருதி நிறுவனம் எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த கார் மார்கெட்டில் உள்ள ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக், டாடா கர்வ் இவி, ஹாரியர் இவி, மஹிந்திரா எக்ஸ்இவி 9இ உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ரூ18 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகமாக வாய்ப்புள்ளது. இந்த கார் 2 விதமான பேட்டரி ஆப்ஷன்களுடன் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.
இந்த இ-விட்டாரா கார் 3 விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த கார் டெல்டா, ஸெட்டா, ஆல்ஃபா, ஆகிய வேரியன்ட்களில் கிடைக்கலாம். இந்த காரில் பிஒய்டி நிறுவனம் தயாரித்த எல்எஃப்பி பேட்டரிகள் தான் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி 48.8 கிலோ வாட் ஹவர், 61.1 கிலோ வாட் ஹவர் ஆகிய இடம் பேட்டரிகள் இடம்பெறும். இதில் பெரிய பேட்டரி ஆப்ஷன் 500 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் சர்வதேச மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இருக்கிறது. இந்திய மாடலில் முன்பக்க வீல் டிரைவ் சிஸ்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது 49 கிலோ வாட் ஹவர் பேட்டரியில் 144 பிஎஸ் பவர் மறஅறம் 192.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் இருக்கிறது. இதுவே பெரிய பேட்டரியில் 174 பிஎஸ் பவர் மறஅறம் 192.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் இருக்கிறது.
இந்த பேட்டரியை டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் சார்ஜ் ஏற்றினால் 0-80 சதவீத சார்ஜை வெறும் 50 நிமிடத்திலேயே ஏற்றிவிடும். இந்த கார் 5 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரை டொயோட்டோ உடன் சேர்ந்து மாருதி நிறுவனம் உருவாக்கிய ஹார்ட்டிரெக்ட் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுகிறது. இந்த காரில் லெவல் 2 அடாஸ், 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி மேமா, முன்பக்கமும், பின்பக்கமும் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.1 இன்ச் டிரைவர் டிஸ்பிளே, 10 வழிகளில் பவர் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், வென்டிலேட்டட் முன்பக்க சீட்டுகள்,, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பிரியர்கள் அதிகமாகி வருகிறார்கள். மாருதி நிறுவனத்தின் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் பலர் இந்த காரை வாங்க காத்திருக்கின்றனர். இந்த கார் எதிர்பார்த்தபடி இருந்தால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை அந்நிறுவனம் பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









