சிங்கம் களம் இறங்கிடுச்சு! மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் இந்த தேதியில் தான் வருது!
மாருதி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரான இ-விட்டாரா காரை வெளியிடும் தேதியை அறிவித்துள்ளது. இந்த கார் கடந்த ஜனவரி மாதம் முதன் முறையாக பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த காரின் அறிமுக தேதி குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இந்தியாவின்ம மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. மாருதி நிறுவனம் இந்தியாவில் இ-விட்டாரா என்ற காரை தான் தனது முதல் காராக களம் இறக்கவுள்ளது. இந்த காரை ஏற்கனவே அந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் டில்லியில் வைத்து நடந்த பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் வெளியிட்டிருந்தது.

இந்த கார் வரும் செப்டம்பர் மாதம் 3ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளுது. இந்த கார் இந்தியா மட்டுமல்லாமல் ஐரோப்பிய மார்கெட்களிலும் விற்பனைக்காக அறிமுகமாகிறது. மாருதி நிறுவனம் இந்த இ-விட்டாரா காருக்கு 10 ஆண்டுகள் வர வாண்டியை வழங்கியுள்ளது. இந்த கார் முழு சார்ஜில் 500 கி.மீ வரை பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காருக்க போட்டியாக ஏற்கனவே இந்திய மார்கெட்டில் ஹூண்டாய் கிரெட்டா இவி, எம்ஜி விண்ட்ஸர் இவி, எம்ஜி இசட் எஸ் இவி உள்ளிட்ட கார்கள் விற்பனையாகி வருகிறது. இந்த காருக்கு போட்டியாக தான். மாருதி இ-விட்டாரா காரும் இந்திய மார்கெட்டில் போட்டி போடுகிறது.

இந்த மாருதில் எல்இடி ஹெட்லைட்டுகள், டிஆர்எல், எல்இடி டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளன. இது போக 18 இன்ச் வீல்கள், ஆக்டிவ் ஏர் வென்ட்கள், பானரோமிக் சன்ரூஃப், மல்டி கலர் இன்டீரியர் ஆம்பியன்ஸ் லைட்டின் வயர்லெஸ் சார்ஜர், 10.25 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.2 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன்,வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, இன்ஃபினிட்டி ஹார்மன் சிஸ்டம், சிங்கிள் ஸோன் ஆட்டோடமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பிஎம் 2.5 ஏர்ஃபில்டர்,
10 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், பின்பக்கம் 60:40 என பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் நார்மல், எக்கோ, ஸ்போர்ட் என 3 விதமான ரைடு மோடுகள் உள்ளது. இது போக ஸ்னோ மோடு, சிங்கிள் பெடல் டிரைவிங், ரீஜென் ஆகிய மோடுகளும் உள்ளது. இது ஆப்ஷனை பொருத்து மாறுபடும். மேலும் இதில் லெவல் 2 அடாஸ் தொழிற்நுட்பம் இருக்கிறது. இந்த காரில் லேன் கீப் அசிறா்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், உள்ளிட்ட ஆப்ஷன்கள் லெவல் 2 அடாஸ் சிஸ்டத்தில் உள்ளது. மேலும் இதில் 7 ஏர்பேக்குகள், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டர், டயர் பிரஷர் மானிட்டர், 360 டிகிரி கேமரா, முன்பக்கமும் பின்பக்கமும் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இந்த கார் மொத்தம் 10 விதமான கலர் ஆப்ஷன்களில் வருகிறது. அதில் 6 மேனோ டோன் வெர்ஷன் மற்றும் 4 டுயல் டோன் கலர்கள் உள்ளன. மேனோ டோன் கலர்களில் நெக்ஸான ப்ளூ, ஸ்பிளின்டெட் சில்வர், ஆர்டிக் ஒயிட், கிராடுலர் கிரே, ஃப்ளூயிஷ் பிளாக், மற்றும் ஒப்புலென்ட் ரெட் ஆகிய கலர்களிலும், டுயல் டோரில் ரூஃப் மற்றும் ஏ, பி பில்லர்கள் கருப்பு நிறத்திலும், கலரை பொருத்தவரை ஆர்டிக் ஒயில் லேண்ட் ப்ரீஸ் கிரீன், ஸ்பிளின்டிட் சில்வர் மற்றும் ஒப்புலென்ட் ரெட் ஆகிய கலர் ஆப்ஷன்களிலும் வருகிறது.
இந்த காரின் ஸிக்மா வேரியன்ட் ரூ18 லட்சம் என்ற விலையிலும், டெல்டா வேரியன்ட், 19.50 லட்சம் என்ற விலையிலும் ஸிட்டா வேரியன்ட் ரூ21 லட்சம ்என்ற விலையிலும், ஸீட்டா வேரியன்ட்டில் லாங்க் ரேஞ்ச் ரூ22.50 லட்சம ்என்ற விலையிலும், ஆல்ஃபா வேரியன்ட் ரூ24 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீண்ட ஆண்டுகளாக மாருதியின் எலெக்ட்ரிக் காரை பலர் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது அதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாருதி நிறுவனம் இந்த நாளில் புக்கிங்கை அறிவித்தால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் புக்கிங் நடைபெறும்.


Click it and Unblock the Notifications









