திடீரென முதல் இவியின் தயாரிப்பை குறைத்த மாருதி! சீனாவின் இந்த அறிவிப்பு தான் எல்லாத்துக்கும் காரணம்!

மாருதி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரான இ-விட்டாரா காரின் தயாரிப்பை கணிசமான அளவு குறைத்துள்ளது.இந்த கார் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரும் நிலையில் இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் எடுத்துள்ளது. சீனாவில் ரேர் எர்த் மேக்னட்டின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காராக இ-விட்டாரா என்ற காரை அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்திருந்தது. இந்த காரை அந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் முதன் முறையாக காட்சிப்படுத்தியது. இந்நிலையில் இந்த கார் எப்பொழுது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது.இந்த காரை வாங்க பலர் ஆர்வமாக காத்திருந்தனர்.

Maruti E-Vitara Production

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் அதாவது இந்தியாண்டின் முதல் இரண்டு காலாண்டில் இந்நிறுவனம் மொத்தம் 26,500 இவிட்டாரா கார்களை தயாரிக்க முடிவு செய்தது. அப்பொழுது தான் முன்பதிவுக்கு ஏற்ப காரின் டெலிவரியையும் கொண்டு செல்ல முடியும் என திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் சீனா இந்த முடிவுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் புதிய முடிவை அறிவித்தது.

சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ரேர் எர்த் மேக்னட் என்ற கணிமத்தை ஏற்றுமதி செய்ய கூடாது என அறிவித்தது. உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் கார்களுக்கு ரேர் எர்த் மேக்னட் மிக முக்கியமான பொருளாக இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் மோட்டார்களுக்கு இந்த மேக்னட் மிக அவசியமான பொருளாக இருக்கிறது.இது சீனாவில் தான் அதிக அளவில் கிடைக்கிறது.

Maruti E-Vitara Production

இந்நிலையில் சீனாவிலிருந்து இந்த பொருள் கிடைக்க பிரச்சனை ஏற்பட்டதால் மாருதி நிறுவனம வெளிநாட்டில் உள்ள மற்ற நிறுவனங்களை நாட வேண்டியது உள்ளது. அவர்களது தயாரிப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு அந்த மேக்னட் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இதனால் இந்த காரின் உற்பத்தியை குறைக்க மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது ஒரு தற்காலிக முடிவு தான். மாருதி நிறுவனம் விரைவில் இந்த மேக்னட் கிடைக்கும் எண்ணிக்கையை அதிரிக்கும் வழியை பார்த்து வருகிறது. இந்த மேக்னட் கிடைக்கும் எண்ணிக்கை அதிகரித்து விட்டால் இந்த காரின் தயாரிப்பையும் அதிகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மாருதி இ-விட்டாரா காரை பொருத்தவரை அந்நிறுவனம் இந்த நிதியாண்டில் மட்டும் 67 ஆயிரம் கார்களை தயாரிக்க முடிவு செய்திருந்தது.

Maruti E-Vitara Production

முதல் 6 மாதத்தில் தயாரிப்பு குறைவாக இருந்தாலும் இந்த ரேர் எர்த் மேக்னட் கிடைப்பது அதிகமாகிவிட்டால் உடனடியாக தயாரிப்பை இரு மடங்காக உயர்த்தி எப்படியும் இந்தாண்டு இறுதிக்குள் 67 ஆயிரம் கார்களை உருவாக்க அந்நிறுவனம் முடிவு செய்கள்ளது. மாருதி இ-விட்டாரா எலெக்ட்ரிக் கார் மார்கெட்டில் ஏற்கனவே டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், எம்ஜி மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் விற்பனை செய்யும் கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி இ-விட்டாரா கார் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி மாருதி நிறுவனம் ஜிம்னி காரை இந்தியாவில் தயாரித்து ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்கிறதோ அதே போல இந்த காரையும் ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.முதல்கட்டத்தில் இதில் தொய்வு ஏற்பட்டாலும் அடுத்தாண்டிற்குள் இந்த பிரச்சனைகள் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, June 16, 2025, 10:55 [IST]
English summary
Maruti e vitara production cut to 8200 units in fy25 h1
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X