சென்னை டூ கொடைக்கானல் ஒரே சார்ஜ்ல போகலாம்! மாருதியின் முதல் இவி கார் பற்றி தெரியுமா?
மாருதி நிறுவனம் நேற்று தனது முதல் எலெக்ட்ரிக் காரான இ-விட்டாரா காரை நேற்று வெளியிட்டது. அறிமுகமாகும் என மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் நேற்று வெளியீடு மட்டுமே செய்யப்ப்டடுள்ளது. விற்பனைக்கு விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். ஆனால் நேற்று வெளியீட்டின் போது இந்த காரின் ரேஞ்ச் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 543 கி.மீ பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரேஞ்ச் அதிகம் ஆகும். இன்று எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள சிக்கல் என்றால் எது ரேஞ்ச் தான் நீண்ட தூரம் பயணிக்க முடியாது. பெட்ரோல், டீசல் போல ஆங்காங்க நிறுத்தி உடனடியாக நிரப்பி மீண்டும் பயணத்தை தொடர முடியாது. இதனால் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதை தவிர்த்து வந்த நிலையில் இந்த கார் 543 கி.மீ பயணிக்கும் என அராய் சான்று வழங்கியதாக தெரிவித்துள்ளது. இதனால் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றது.

இந்த இ-விட்டாரா கார் 2 விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. இதன்படி இந்த கார் 49 kWh மற்றும் 61 kWh ஆகிய ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த பேட்டரி ஆப்ஷன்களில் மொத்தம் 3 வேரயின்ட்களில் இந்த காரை வாங்க முடியும். ஆனால் வேரியன்ட் குறித்த விபரங்களை அந்நிறுவனம் வெளியிட்டவில்லை. பெரிய பேட்டரிபேக் ஸெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா வேரியன்டில் 49kWh பேட்டரி பேக் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது.
இதில் பெரிய பேட்டரி பொருத்தப்பட்ட கார் 543 கி.மீ பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்கெட்டில் உள்ள மற்ற போட்டி நிறுவனங்களின் தயாரிப்பை விட இது அதிகமாக இருக்கிறது. மேலும் மாருதி நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள் சார்ஜ் செய்ய தேவையான கட்டமைப்பை செய்து வருகிறது. இந்நிறவனம் மொத்தம் 1100 நகரங்களில் 2000த்திற்கும் அதிகமான ஃபாஸ்ட் சார்ஜர்களை நிறுவியுள்ளது. இதற்காக 13 சார்ஜிங் ஆப்ரேட்டர்கள் கொண்டு இயங்கி வருகிறது.

இதை வரும் 2030ம் ஆண்டிற்கும் 1 லட்சம் சார்ஜர்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த சார்ஜர்களை கண்டறிய அந்நிறவமன் "e For Me " என்ற ஆப்பை பயன்படுத்துகிறது. ஒவ்வொரு 5-10 கி.மீ இடைவெளியில் ஒரு சார்ஜர்களை நிரூ திட்டமிட்டுள்ளது. மேலும் இவி களுக்கான 1500 ஒர்க் ஷாப்களும், இவி வாடிக்கையாளர்களுக்கு வீட்டிற்கே சென்று சர்வீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக இதில் 7 ஏர்பேக்குகள், அதிக பலம் கொண்ட கட்டமைப்பு, அடாஸ் தொழிற்நுட்பம், ஆக்டிவ் சேஃப்டி சிஸ்டம் உள்ளிட்ட நீளமான பட்டியல் அதிகம் உள்ளது. இதனால் eாருதி நிறுவனம் இந்த காரை பாதுகாப்பு நிறைந்த காராக உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங் பெறும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் இருந்து கிளம்பி சிங்கிள் சார்ஜில் கொடைக்கானல் வரை செல்லும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு ஏற்றதாக இந்த கார் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








