நல்லா இருந்த பெயரை வாயில நுழையாதபடி மாற்றிய மாருதி! செப்-3ம் தேதி குறிச்சி வச்சிக்கோங்க!

மாருதி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காராக இவிட்டாரா காரை அறிமுகப்படுத்தவிருந்த நிலையில் திடீரென அந்த காரின் பெயரை மாற்றியுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் இனி இந்த கார் இ-விட்டாராவிற்கு பதில் புதிய பெயரில் அழைக்கப்படும் என தெரிகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்கள் டிரெண்ட் அதிகரித்து வரும் நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த துவங்கிவிட்டன. இந்நிலையில் கடந்தாண்டே சுஸூகி நிறுனவம் சர்வதேச அளவில் 2024ம் ஆண்டு நம்பவர் மாதம் நடந்த EICMA கண்காட்சியில் தனது இவிஎக்ஸ் என்ற காரை காட்சிப்படுத்தியது. அதன் பின்னர் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த குளோபல் மொபிலிட்டி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் வெளியிடப்பட்டது.

Maruti e Vitara Rename

இந்நிலையில் இந்த காரின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்காக காத்திருந்த நிலையில் ஊடகங்களுக்க வரும் செப்டம்பர் மாதம் 3ம் தேதி மாருதி நிறுவனத்தின் நிகழ்வு ஒன்று இருப்பதாக அழைப்பு வந்தது. இந்நிலையில் மாருதி நிறுவனம் தனது முதல் இவி காரை அறிமுகப்படுத்தப்போகிறது என்ற பேச்சு எழுந்தது. இந்நிலையில் இவிஎக்ஸ் என்ற கோடு பெயரில் இருந்த காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் போது இ-விட்டாரா என்ற பெயரில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்த பெயரில் தான் மாருதியின் முதல் இவி கார் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மாருதி நிறுவனம் இந்த காரின் பெயரை மாற்றப்போவதாக தற்போது செய்திகள் வெளியாகியிருந்தன. மாருதி நிறுவனம் ஏற்கனவே எஸ்குடோ என்ற பெயரை பதிவு செய்து வைத்திருந்தது. இந்நிலையில் தனது முதல் எலெக்ட்ரிக் காருக்கு இ-விட்டாரா என்ற பெயருக்கு பதிலாக எஸ்குடோ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Maruti e Vitara Rename

இந்த காரை இந்திய சாலைகளில் சோதனை செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகின. அதில் கூட இ-எஸ்குடோ என்ற பெயர் இரந்தது தெளிவாக காண முடிந்தது. இந்த காரில் இ- என்ற எழுத்து மட்டும் நீல நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

இந்த காரில் அதிக தொழிற்நுட்பம் மற்றும் அட்வெஞ்சர் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒய் வடிவ எல்இடி டிஆர்எல், ஹெட்லைட் கிளஸ்டர், நீட்டிக்கப்பட்ட எல்இடி லைட்டுகள், போல்டான பம்பர்கள், சதுரமான வீல் ஆர்ச், கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங், ஷார்ப்பான கிரீஸ் ஆகிய அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maruti e Vitara Rename

இந்த காரின் பின்பக்க கதவின் ஹேண்டில்கள் சி பில்லர் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இதில் 18 இன்ச் ஏரோடைனமிக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த காிரன் உள்ளே 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.1 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வென்டிலேட் செய்யப்பட்ட சீட்டுகள், 10 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கதுடிய டிரைவர் சீட், லெவல் 2 அடாஸ் தொழிற்நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இந்த கார் 49kwh மற்றும் 61 Kwh ஆகிய 2 விதமான பேட்டரி பேக் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் 2 வீல் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் மற்றும் சிங்கிள் மற்றும் டுயல் மோட்டார் ஆப்ஷன் உடனும் கிடைக்கிறது. 2 வீல் டிரைவில் 142 பிஎச்பி பவர் மற்றும் 189 என்எம் டார்க் திறனையும், ஆல் வீல் டிரைவ் டுயல் மோட்டார் செட்டப்பில் 181 பிஎச்பி பவரம், 300 என்எம் டார்க் திறனும் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலெகட்ரிக் காரை வரிசையாக அறிமுகப்படுத்தி வரும் நிலையில் மாருதி நிறுவனம் தனது முதல் காலடியை இதில் எடுத்து வைக்க திட்டமிட்டுள்ளது. இந்த காரின் பெயர் மாற்றத்திற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும் இந்த காரின் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 24, 2025, 12:15 [IST]
English summary
Maruti e vitara rename e escudo know full details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X