ஸ்கூல் பசங்க மாதிரி டெஸ்ட்டிற்கு கிளம்பிய மாருதி கார்! சாதாரண டெஸ்ட் இல்ல இதுலதான் அதோட வாழ்க்கையே இருக்கு!

மாணவர்கள் பரீட்சைக்கு கிளம்பிப் போவதைப் போல மாருதி சுஸுகி (Maruti Suzuki) கார் மாடல் ஒன்று பலபரீட்சைக்கு புறப்பட்டு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. 'இ விட்டாரா' (e Vitara) இதுவே அந்த கார் மாடல் ஆகும். இது விற்பனைக்கு வர இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே அது பலபரீட்சைக்கு புறப்பட்டு சென்றிருக்கின்றது. வேற ஒன்னும் இல்லைங்க மோதால் ஆய்விற்கு உட்படுத்தவே இந்த கார் மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் அனுப்பி வைத்து இருக்கின்றது. பாதுகாப்பு தரத்தை ஆராயும் பொருட்டே இ விட்டாரா மோதல் ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

Maruti e vitara crash test

எனவே விரைவில் இந்த காரில் பயணிகளுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு கிடைக்கும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவே அந்த காரின் வாழ்க்கையையே நிர்ணயம் செய்ய இருக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் இந்த கார் மாடலை முதன் முதலில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 வாயிலாகவே அறிமுகப்படுத்தியது.

இங்கேயே இ விட்டாரா முதல் முறையாக முழுமையாக காட்சி தந்தது. சென்ற ஜனவரி மாதத்திலேயே இந்த வாகன எக்ஸ்போ இந்தியாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இ-விட்டாரா, இந்தியாவிற்கான பாரத் என்சிஏபி (Bharat NCAP) அல்லது குளோபல் என்சிஏபி (Global NCAP)-க்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்றும், நிறுவனமே அதன் சார்பில் இந்த காரை மோதல் ஆய்விற்கு உட்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

Maruti e vitara crash test pic

Source: Carwale ஆனால், இதுபற்றிய உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. விரைவில் இதுபற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிகவும் குறைவான விலையில் சந்தையை இ விட்டாரா களம் காண இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், எவ்வளவு விலை நிர்ணயம் செய்யப்படும் என்பது தெரியவில்லை.

இந்த மாதிரியான சூழலிலேயே இந்த மின்சார காரின் பக்கம் இந்திய வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கான பணியில் மாருதி சுஸுகி நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே அந்த காரை மோதல் ஆய்விற்கு உட்படுத்தி இருக்கின்றது. மேலும், மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்களையும் அவர்கள் வெளியிட்டு இருக்கின்றனர்.

இந்த படங்கள் வாயிலாக மாருதி சுஸுகி இ விட்டாரா அதிக தரம்மிக்க காராக உருவாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. நேருக்கு நேர் மற்றும் பக்கவாட்டு பகுதி என அனைத்து நிலைகளிலும் இந்த காரை அவர்கள் மோதல் ஆய்விற்கு உட்படுத்தி இருக்கின்றனர். இந்த படங்களையே அவர்கள் தற்போது வெளியிட்டும் இருக்கின்றனர்.

விரைவில் இந்த மோதல் ஆய்வில் இ விட்டாரா என்ன மாதிரியான மதிப்பெண்களைப் பெற்றது என்பது பற்றிய விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் இ விட்டாரா காரில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக 7 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமட்டுமல்ல, டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், ஏபிஎஸ், அவாஸ், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் முன்-பின் பக்கங்களில் பார்க்கிங் சென்சார்ல் உள்ளிட்டவற்றை வழங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுதவிர லெவல் 2 வகை அடாஸ் தொழில்நுட்பத்தை வழங்கி இருக்கின்றது. இந்த அம்சத்தை தாங்கிய முதல் மாருதி சுஸுகி கார் மாடல் இதுவே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி இ விட்டாரா காருக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதற்கு சான்றாக விண்ட்ஸர் இவி உள்ளது. இதை வைத்தே மாருதி சுஸுகி இ விட்டாராவிற்கு சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 26, 2025, 19:13 [IST]
English summary
Maruti e vitara successfully completes crash test ahead of upcoming launch
மேலும்... #maruti suzuki #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+