வெறும் ரூ4000தான் செலவு, இதை மாட்டுனா மைலேஜ் அதிகமாகுமா? மாருதி கொண்டு வரும் இ20 கிட்!
இந்தியாவில் தற்போது பெட்ரோல் விற்பனையில் 20 சதவீத எத்தனால் கலப்பு என்பது உறுதியாகிவிட்டது.இது தற்போது இந்தியா முழுவதும் பெரும் விவாதத்தை கிளம்பியுள்ளது. மக்கள் பலர் இதனால் வாகனத்தின் மைலேஜ் குறைவதாக புகார் அளித்து வரும் சூழ்நிலையில் மாருதி நிறுவனம் தனது பழைய கார்களுக்கு இ20 கிட்டை விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறது. இது என்ன கிட்? இதை பொருத்தினால் மைலேஜ் அதிகமாகுமா? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா கச்சா எண்ணெயில் மற்ற நாடுகளை சார்ந்திருக்கிறது. இந்த சார்பு தன்மை குறைப்பதற்காக பெட்ரோல், டீசல் தேவையை குறைக்க அதில் எத்தனாலை கலக்கும் திட்டத்தை உருவாக்கியது. இந்தியாவில் விவசாயிகள் தங்கள் கழிவு பொருட்களிலிருந்து எத்தனாலை பிரித்தெடுக்க முடியும். இந்த எத்தனாலை பெட்ரோலுக்கு மாற்றாக பயன்படுத்த முடியும். இந்தியாவின் ஒட்டு மொத்த தேவைக்கான எத்தனால் தயாரிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

இதனால் இந்திய அரசு படிப்படியாக பெட்ரோலில் எத்தனால் கலப்பை செய்து வருகிறது. தற்போது விற்பனையாகி வரும் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை மத்திய அரசு கலந்து வருகிறது. இந்நிலையில் தற்போது விற்பனையாகும் பெட்ரோலை பயன்படுத்துவதால் மைலேஜ் குறைவதாக மக்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது. அரசும், எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களும் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளன.
இந்நிலையில் மாருதி நிறுவனம் தனது பழைய இ20 பெட்ரோல் வகையில் செயல்படும் வகையில் தயாரிக்கப்படாத வாகனங்களுக்கான இ20 கிட் ஒன்றை விற்பனைக்கு கொண்டு வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவும் 15 ஆண்டுகளுக்கு பழமையாகாத வாகனங்களுக்காக மட்டுமே இந்த கிட் விற்பனைக்கு வருகிறது. இந்த கிட்டை பொருத்தினால் மைலேஜ் அதிகரிக்குமா என கேள்வி எழுப்பின வருகின்றனர்.

ஆனால் நமக்கு கிடைத்த தகவலின்படி மாருதி நிறுவனம் இந்த கிட்டில் ஃப்யூயல் லைன், பைப்புகள், வால்வு, சீல், கேஸ்கேட் போன்ற விஷயங்களை தான் தருகிறது. ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் மெட்டல் பாகங்கள் தான் இதில் வருகிறது. இ20 பெட்ரோலில் எத்தனால் அதிகம் இருப்பதால் அப்பொழுது விற்பனையாகன இந்த பாகங்களை அந்த எத்தனால் எளிதில் அரிக்கும் தன்மையால் சேதமாக வாய்ப்புள்ளது.
தற்போது உள்ள கிட் எத்தனாலால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும். இதனால் பழைய வாகனங்களில் இதை பொருத்தினால் அந்த வாகனங்கள் இ20 பெட்ரோலை பாதிப்பில்லாமல் இன்ஜினிற்கு எடுத்து செல்லும் இதனால் மைலேஜ் அதிகரிக்குமா என்றால் பெரிய அளவில் வாய்ப்பில்லை. இந்த கிட்டில் இன்ஜினில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

இதனால் மைலேஜ் அதிகரிக்குமா என்றால் அதற்கான வாய்ப்புகள் குறைவு தான். அதே நேரம் மாருதி நிறுவனம் பழைய இன்ஜின்களை இ20 பெட்ரோலுக்கு ஏற்றவாறு ரி-டியூன் செய்யவும் திட்டமிட்டு வருகிறது. அது சோதனையில் சிறப்பாக வெற்றி பெற்றால் அதையும் மாருதி நிறுவனம் தொடர்ந்து செய்யும் என எதிர்பார்க்கலாம்.
தற்போது உள்ள கிட் விற்பனை செய்ய அங்கீகாரம் கிடைத்துவிட்டால் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கிட் ரூ4000-6000 என்ற விலையில் விற்பனைக்கு வரும் மாடலுக்கு ஏற்றவாறு விற்பனை விலை மாறுபடும் என தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 20 பெட்ரோல் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அரசு இதை விரைவில் 27 சதவீதமாக அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. பழைய மாருதி வாகனங்களில் இதை செய்தால் நிச்சயம் நீண்ட காலம் உழைக்கும் பாராமரிப்பு செலவும் குறையும்.


Click it and Unblock the Notifications









