நல்லா வித்தும் டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறிய 2 கார்கள்! காரணம் இது தான்!

இந்தியாவில் மாருதி நிறுவனத்தின் ஈக்கோ மற்றம் பிரெஸ்ஸா ஆகிய கார்கள் நீண்ட காலமாக டாப் 10 கார் பட்டியலில் இருந்தது. இந்த கார்கள் மக்கள் மத்தியில் நீண்ட காலமாக நல்ல விற்பவனையில் இருந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் விற்பனை விபரங்களில் இந்த இரண்டு கார்களும் டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த அக்டோபர் மாத விற்பனை விபரங்களை மாருதி நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் அந்நிறுவனம் ஈக்கோ காரை பொருத்தவரை 13537 கார்களை விற்பனை செய்துள்ளது. அதே நேரம் 12,072 பிரெஸ்ஸா கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த கார்கள் டாப் 10 கார் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது.

Maruti Eeco Brezza Sales

கடந்தாண்டு இதே அக்டோபர் மாதம் மாருதி ஈக்கோ கார் 11653 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 16 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது. அதேநேரம் பிரெஸ்ஸா காரை பொருத்தவரை 16,565 கார்கள் கடந்தாண்டு விற்பனையாகியிருந்தது. தஇந்த காரின் விற்பனை சுமார் 27 சதவீதம் குறைந்துள்ளது.

மாருதி ஈக்கோ காரை பொருத்தவரை கே சிரீஸ் 1.2 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 80.76 பிஎஸ் பவரைப, 104.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தகாாரின் டூர் வேரியன்ட் ரூ20.2 கி.மீ மைலேஜை வழங்குகம் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே சிஎன்ஜி வேரியன்ட் என்றால் 27.05 கி.மீ மைலேஜை வழங்குகிறது. பயணிகள் வாகனத்தின் பெட்ரோலில் 19.7 கி.மீ மைலேஜூம், சிஎன்ஜியில் 26.78 கி.மீ மைலேஜூம் கிடைக்கிறது.

Maruti Eeco Brezza Sales

இந்த ஈக்கோ காரில் 11 விதமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது. தற்போது உள்ள விதிமுறையின்படி அனைத்து அம்சங்களும் உள்ளது. முக்கியமாக அனைத்துவேரியன்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், உள்ளது. இது போக ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், இன்ஜின் இம்மொபிலைஸர், சைல்டு டோர் லாக்குகள், சீட் பெல்ட் ரிமைண்டர், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், முன்பக்க ஏர்பேக்குகள், புதிய ஸ்டியரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆகிய அம்சங்கள் உள்ளது. எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் செலிரியோ காரில் உள்ள அதே சிஸ்டம் இதிலும் உள்ளது.

இந்த கார் மொத்தம் 4 விதமான வேரியன்ட்களில் உள்ளது. 5 சீட்டர், 6 சீட்டர், கார்கோ, டூர் மற்றும் ஆம்புலன்ஸ் பாடி டைப்புகளில் இது கிடைக்கிறது. இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 3675 மிமீ நீளம், 1475 மிமீ அகலம், 1825 மிமீ உயரம், அளவில் உள்ளது. ஆம்புலன்ஸ் வெர்ஷன் காரை பொருத்தவரை 1930 மிமீ உயரம் அதிகமாகியுள்ளது. இந்த கார் ரூ5.18 லட்சம்.

Maruti Eeco Brezza Sales

பிரெஸ்ஸா காரின் இன்ஜினை பொருத்தவரை புதிய தலைமுறை கே சிரீஸ் 1.5லி டூயல் ஜெட் டபிள்யூ டி இன்ஜின் ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 103 எச்பி பவரையும், 137என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.இந்த காரின் மேனுவல் வேரியன்ட் 20.15 கி.மீ மைலேஜையும், ஆட்டோமெட்டிக் வேரியன்ட் 19.80 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது.

இந்த காரில் 360 டிகிரி கேமரா சிஸ்டம் வழங்ணகப்பட்டுள்ளுது. இதில் அட்வான்ஸ்டு அம்சங்கள் இருகு்கிறது. இந்தகாரில் 9 இன்ச் ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது சுஸூகி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் சேர்த்து உருவாக்கியது. இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி ஈக்கோ கார் விற்பனை அதிகரித்தாலும் டாப் 10 பட்டியலில் இல்லை. பிரெஸ்ஸா காருக்கு போட்டிக்கு பல கார்கள் வந்துவிட்டதால் விற்பவனை குறைந்துள்ளது. மார்கெட் மொத்தமாக பெரிதாகியுள்ளதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 12, 2025, 9:50 [IST]
English summary
Maruti eeco brezza sales drop out of top 10 cars oct 2025
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X