27 கிமீ மைலேஜ் வழங்கும் 7 சீட்டர் கார் விலை இவ்ளோதானா! டாக்ஸி புக் பண்ணீட்டே இருக்கறதுக்கு பதிலா இத வாங்கலாம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco). மாருதி சுஸுகி ஈக்கோ காருக்கு தற்போது 15 வயதாகி விட்டது. ஆம், மாருதி சுஸுகி ஈக்கோ கார், கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம்தான், இந்திய சந்தையில் முதல் முறையாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இடைப்பட்ட இந்த 15 ஆண்டுகளில், 1.2 மில்லியன் ஈக்கோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. 1.2 மில்லியன் என்றால், 12 லட்சம் கார்கள் ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஈக்கோ கார் வெறும் 5.32 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ வெறும் 6.58 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த குறைவான விலைதான் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் மிகப்பெரிய பலம் ஆகும். மாருதி சுஸுகி ஈக்கோ காரின் மற்றொரு முக்கியமான பலம் என்னவென்றால், அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகும்.
மாருதி சுஸுகி ஈக்கோ கார் 5 சீட்டர் மட்டுமின்றி, 7 சீட்டர் ஆப்ஷனிலும் விற்பனைக்கு கிடைத்து வருகிறது. இந்த வரிசையில் மைலேஜ் (Mileage) இந்த காரின் மற்றொரு முக்கியமான பலமாக கருதப்படுகிறது. மாருதி சுஸுகி ஈக்கோ காரில் பொருத்தப்பட்டிருப்பது, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும்.

அதிகபட்சமாக 81 பிஎஸ் பவர் மற்றும் 104.4 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் இணைக்கப்பட்டிருப்பது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆகும். இதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 19.71 கிலோ மீட்டர் ஆகும்.
மறுபக்கம் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்டிலும் இதே 1.2 லிட்டர் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் வேரியண்ட்டை போல், சிஎன்ஜி வேரியண்ட்டிலும், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஎஸ் பவர் மற்றும் 95 என்எம் டார்க் திறனை மட்டுமே உருவாக்கும்.
இருப்பினும் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது ஒரு கிலோவிற்கு 26.78 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும். இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய மைலேஜ் ஆகும். இது மிகவும் சிறப்பான மைலேஜ் என்பதும், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருவதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஈக்கோ காரில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கிடையாது. அத்துடன் வசதிகளின் எண்ணிக்கையும் கூட குறைவுதான். இருப்பினும் விலை குறைவு, அதிகம் பேர் பயணம் செய்ய முடியும், சிறப்பான மைலேஜ் ஆகிய 3 காரணங்களால், 15 வருடங்களை கடந்த பிறகும், மாருதி சுஸுகி ஈக்கோ சந்தையில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகிறது.
அத்துடன் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஈக்கோ காருக்கு நேரடி போட்டி என எந்த மாடலும் இல்லை. இதுவும் மாருதி சுஸுகி ஈக்கோ தனி சாம்ராஜ்யம் நடத்தி கொண்டிருக்க முக்கியமான காரணங்களில் ஒன்றுதான். இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni) காரின் விற்பனை நிறுத்தப்பட்ட பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை, மாருதி சுஸுகி ஈக்கோ சரியாக நிரப்பியுள்ளது என்பதுதான் எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








