27 கி.மீ மைலேஜ், 6 சீட்டர், வெறும் ரூ5.70 லட்சம் தான் விலை! இந்த காரை இவ்வளவு பேர் வாங்கிட்டாங்களா?

மாருதி சுஸூகி நிறுவனம் வேன் செக்மெண்டில் ஈக்கோ என்ற வாகனத்தை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இந்த வாகனம் விற்பனையில் சிறப்பாக இருந்து வருகிறது. கடந்த மே மாதம் 9340 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. மக்கள் இந்த வாகனத்தை அதிகம் விரும்பி வாங்குவதற்கான காரணம் என்ன? அப்படி இந்த காரில் என்னஸ்பெஷல் இருக்கிறது? விரிவான விபரங்களை காணலாமம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் விற்பனை செய்து வரும் ஈக்கோ கார் விற்பனையில் ஒரு மேஜிக்கை செய்து வருகிறது என்றே சொல்லலாம். இந்த காரை மக்கள் நீண்ட காலமாக விரும்பி வாங்கி வருகின்றனர். முன்னே சொன்னதுபடி கடந்த மே மாதம் மட்டும் 9340 பேர் இந்த காரை வாங்கியுள்ளனர். இது கடந்த மே மாதம் மற்றும் கடந்தாண்டு ஜூன் மாத விற்பனையை ஒப்பிடும் போது விற்பனை வீழ்ச்சி தான் என்றாலும் பெரிய அளவில் வீழ்ச்சி பெறவில்லை.

Maruti Eeco Sales June 2025

கடந்தாண்டு ஜூன் மாதம் மொத்தம், 10,771 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த மே மாதம் 12,327 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இந்த ஈக்கோ கார் குடும்பத்துடன் பயணிக்கும் ரக குறைந்த விலை காராக விற்பனையாவதால் மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் இதன் விற்பனை குறைந்தாலும் அடுத்தமாதங்களில் இது அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.

இந்த ஈக்கோ காரை பொருத்தரை இந்த காரில் 5 மற்றும் 6 சீட்டர் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார் ரூ5.70 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் நீண்ட ஆண்டுகளாக சிறப்பாக விற்பவனையாகி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 10,589 வாகனங்களும், டிசம்பர் மாதம் 11,678 வாகனங்களும், ஜனவரி மாதம் 11,250 வாகனங்களும், பிப்ரவரி மாதம் 11,493 வாகனங்களும், மார்ச் மாதம் 10,409 வாகனங்களும், ஏப்ரல் மாதம் 11,438 வானங்களும், மே மாதம் 12,327 வாகனங்களும் விற்பனையாகியுள்ளது. கடந்த 6 மாத்தில் கடந்த ஜூன் மாத விற்பனை தான் குறைவாகும்.

Maruti Eeco Sales June 2025

மாருதி ஈக்கோ காரில் கே-சிரீஸ் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பொருத்தியுள்ளனர். இந்த காரில் 80.76 பிஎஸ் பவரையும், 104.5 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இது சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் உள்ளது. இது 71.65 பிஎஸ் பவரையும், 95 என்எம் டார்க்திறனையும் வழங்குகிறது.

இந்த காரின் டூர் வேரியன்ட் 20.2கி.மீ மைலேஜை பெட்ரோலிலும், 27.05 கி.மீ மைலேஜை சிஎன்ஜியிலும் வழங்குகிறது. பயணிகள் வாகனத்தில் பெட்ரோலில் 19.7 கி.மீ மைலேஜையும், சிஎன்ஜியில் 26.75 கி.மீ மைலஜையும் வழங்குகிறது. டூர் வேரியன்டை விட தனி நபர் வேரியன்டின் காரின் மைலேஜ் சற்று குறைவாக தான் இருக்கிறது.

Maruti Eeco Sales June 2025

இந்த ஈக்கோ காரில் 11 விதமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. முக்கியமாக ரிவர்ஸ் பார்க்கி்ங சென்சார், இன்ஜின் இம்மொபிலைஸர், குழந்தைகளுக்கான டோர் லாக், சீட் பெல்ட் ரிமைன்டர், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், 6 ஏர்பேக்குகள், புதிய ஸ்டியரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறைந்த விலையில் அதிக நபர்கள் பயணிக்கும் ரக வாகனங்கள் சிறப்பாக விற்பனையாகிறது. அதுவும் இந்த கார் நல்ல மைலேஜை தருவதால் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த கார் எதிர்காலத்தில் அப்டேட் செய்யப்பட்டு நவீனப்படுத்தப்பட்டால் மிகச்சிறப்பாக விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 2, 2025, 13:03 [IST]
English summary
Maruti eeco sales june 2025 9340 units sold overall performance
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X