ரூ 5.25 லட்சத்திற்கு 6 சீட்டர் கார், 30 நாளில் இவ்வளவு பேர் இந்த காரை வாங்கிட்டாங்க!
இந்தியாவில் 7 சீட்டர் கொண கார்கள் மக்கள் மத்தியில் தற்போது பிரபலமாக இருந்து வருகிறது. குடும்பத்துடன் பயணிக்க இந்த ரக கார் ஏற்றதாக இருப்பதால் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மே மாதம் அதிக எண்ணிக்கையில் விற்பனையான குறைந்த விலை கார் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது. எந்த கார் இது? எவ்வளவு விற்பனையாகியுள்ளது? இந்த காரை எவ்வளவு பேர் வாங்கியுள்ளனர்? இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் கடந்த மே மாதம் மட்டும் மொத்தம் 18077 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 174551 வாகனங்கள் விற்பனையாகியள்ளது. தற்போது அந்நிறுவனத்தின் விற்பனை 3 சதவீதம் அளவிற்கு விற்பனை வளர்ச்சியுள்ளது. இந்நிறுவனம் வேன் செக்மெண்டில் எக்கோ என்ற வாகனத்தை விற்பனையை செய்து வருகிறது.

இந்த கார் குறைந்த விலை 6 சீட்டர் காராக இருக்கிறது. கடந்த மே மாதம் மட்டும் மொத்தம் 12,327 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 10960 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த கார் 5 சீட்டர், 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆகிய வெர்ஷன்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் ரூ5.70 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இந்த காரின் கடந்த 6 மாத விற்பனை விபரங்களை பார்க்கும் போது கடந்த 2024 நவம்பர் மாதத்தில் 10,589 கார்கள் விற்பனையாகியுள்ளது. டிசம்பரில் 11,678 கார்கள் விற்பனையாகியுள்ளது. 11,250 கார்கள் கடந்த ஜனவரி மாதம் விற்பனையாகியுள்ளது. பிப்ரவரி மாதம் 11493 கார்கள் விற்பனையாகியுள்ளது. மார்ச் மாதம் 10409 கார்கள் விற்பனையாகியுள்ளது. ஏப்ரல் மாதம் 11438 கார்கள் விற்பனையாகியுள்ளது. மே மாதம் தான் அதிகபட்சமாக 12327 கார்கள் விற்பனையாகியுள்ளது.

மாருதி நிறுவனத்தின் ஈக்கோ கார் கே சிரீஸ் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இந்த கார் 80.76 பிஎஸ் பவரையும், 104.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சிஎன்ஜி வேரியன்ட் 71.65 பிஎஸ் பவரையும் 95 என்எம் டா்ரக் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இ
இந்த காரின் மைலேஜை பொருத்தவரை பெட்ரோல் வேரியன்டில் 20.2 கி.மீ வேரியன்டையும், 27.05 கி.மீ மைலேஜ் சிஎன்ஜி வேரியன்டிலும், வழங்குகிறது. இது இந்த காரின் டூர் வேரியன்டின் மைலேஜ் தான். இதுவே பயணிகள் வாகன வேரியன்டில் 19.7 கி.மீ மைலேஜை பெட்ரோல் வேரயின்டில் வழங்குகிறது சிஎன்ஜி வேரியன்டில் 26.78 கி.மீ மைலேஜை வழங்குகிறது.

இந்த காரில் 11 விதமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. இந்த காரில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், இன்ஜின் மொபிலைஸர், சைல்டு லாக் டோர்கள், சீட் பெல்ட் ரிமைன்டர், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், 6 ஏர்பேக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக மைலேஜ் தரும் அதிக சீட்டர் கொண்ட கார் என்றால் யார் தான் வாங்க மாட்டார்கள். அதனால் இந்த காரின் விற்பனை அதிகமாக இருக்கிறது. இந்த கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. இந்த கார் தொடர்ந்து விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









