6 பேர் போகலாம் 26.78 கி.மீ மைலேஜ்! இந்த காரை ஒரே மாசத்துல இவ்வளவு பேர் வாங்கிடாங்களா?
மாருதி நிறுவனம் வேன் செக்மெண்டில் ஒரே ஒரு வாகனத்தை மட்டும் தான் விற்பனவை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஈக்கோ என்ற வாகனத்தை இதில் விற்பனை செய்து வரும் நிலையில் ஒரே மாதத்தில் 10,035 பேர் இந்த வாகனத்தை வாங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி 2.0க்கு பிறகு இந்த காரின் விலை கணிசமாக குறைந்துள்ளது.இ்நத காரின் விற்பனை மற்றும் மற்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் குறைந்த விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக வாகனமாக ஈக்கோ என்ற வாகனத்தை மாருதி நிறுவனம் விற்பவனை செய்து வருகிறது. இந்த வாகனத்தில் சில காலம் முன்பு வரை 7 சீட்டர் வேரயின்ட் விற்பவனையாகி வந்தது. தற்போது அதை அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது. தற்போது 5 சீட்டர் மற்றும் 6 சீட்டர் ஆப்ஷன் மட்டுமே விற்பனையாகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் ஜிஎஸ்டி 2.0 அமலுக்கு வந்தது. இதன் மூலம் ரூ5.66 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வந்த இந்த கார் தற்போது ரூ5.18 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. சுார் 48,400 வரை விலை குறைந்துள்ளது. இந்த கார் 8.54 சதவீதம் அளவிற்கு விற்பனை சரீவு ஏற்பட்டுள்ளது.
இந்த காரில் கே சிரீஸ் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 80.76 பிஎஸ் பவரையும், 104.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த காரில் சிஎன்ஜி ஆப்ஷனும் உள்ளது. இது 71.65 பிஎஸ் பவரையும், 95 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் பெட்ரோலில் 19.7 கி.மீ மைலேஜையும், சிஎன்ஜியில் 26.78 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது.

ஈக்கோ காரை பொருத்தவரை 11 விதமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது. தற்போது உள்ள பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் எல்லாம் இந்த காரில் உள்ளன. முக்கியமாக ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், இன்ஜின் இம்மெபிலைஸர், சைல்டு டோர் லாக்குகள், சீட்பெல்ட் ரிமைண்டர், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், 6 ஏர்பேக்குகள், புதிய ஸ்டிரீங் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
இதில் உள்ள ஸ்டியரிங் வீல் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் எஸ்-பிரஸ்ஸோ மற்றும் செலிரியோ ஆகிய கார்களின் உள்ள அதே அம்சம் இதில் வழங்கப்பட்டுள்ளது. இது போக பழைய ஸ்லைனிங் ஏசிக்கு பதிலாக புதிய ரோட்டரி யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் 5 சீட்டர், 6 சீட்டர், கார்கோ, டூர், மற்றும் ஆம்புலன்ஸ் பாடி ஸ்டைலில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் 3675 மிமீ நீளம், 1475 மிமீ அலகம், 1825 மிமீ உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பள்ளி வாகனம், மருத்துவமனை வாககனம், மற்றும் கமர்ஷியல் வாகனங்களுக்காகவும் பயன்படுத்த முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குடும்பத்துடனய பயணிக்கும் கார்களை விற்பனை செய்வதில் தற்போது வளர்ச்சியை கண்ட வருகின்றனர். இந்த கார் விலை குறைவாக இருப்பதால் நீண்ட ஆண்டுகளாக நல்ல விற்பனையை பெற்று வருகிறது. தொடர்ந்து இந்த கார் நல்ல விற்பனவை வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









