பேங்க்ல இருக்குற பணத்தை இப்பவே எடுத்து வச்சிக்கோங்க! இந்த காரை மாருதி சேல்ஸ்க்கு ரெடி பண்ணிட்டாங்க!

மாருதி நிறுவனம் எஸ்குடோ என்ற பெயரில் புதிய காரை வரும் செப்டம்பர் மாதம் 3ம் தேதி அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் மைல்டு ஹைபிரிட் மற்றும் ஸ்டிராங்க் ஹைபிரிட் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்களில் வருகிறது.இந்த கார் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் இந்தியாவில் தனது எஸ்குடோ என்ற காரை விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த கார் மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா காரை விட மேல் உள்ள பொசிஷனிலும், கிராண்ட் விட்டாரா காரை விட கீழேயும் பொசிஷன் செய்யப்படுகிறது. இந்த காரின் அந்நிறுவனம் அரேனா டீலர்ஷிப் வழியாக விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வரும் செப்டம்பர் 3ம் தேதி இந்த கார் அறிமுகமாகிறது.

Maruti Escudo Teased

Img: Interior of Grand Vittara (Similar To Escudo)

இந்த காரின் ஸ்பை புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பல இடங்களில் இந்த கார் சோதனை செய்யப்படுகிறது. இது குறித்த டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் எல்இடி டெயில் லைட், டர்ன் இன்டிகேட்டர் ஆகியவை உள்ளன. இது எல்லாம் சோதனை செய்யப்படும் காரிலும் தென்பட்டது.

இந்த காரின் டெயில் லைட்டு பின்பக்கம் நீள வாக்கில் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் ஸ்பாய்லர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஸ்டாப் லைட்டுகளும் உள்ளன. மேலே ஷார்க் ஃபின் ஆண்டனா வழங்கப்பட்டுள்ளது. இதில் கிராண்ட் விட்டாரா காரில் உள்ள அதே இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.இதில் 1.5 லி மைல்டு ஹைபிரிட் மற்றும் 1.5 லி ஸ்டிராங் ஹைபிரிட் ஆகிய ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.

Maruti Escudo Teased

இந்த காரில் சிஎன்ஜி ஆப்ஷன் தற்போது வழங்கப்படாது. ஆனால் எதிர்காலத்தில் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்த காரில் நீளம் கிராண்ட் விட்டாரா காரை விட சற்று அதிகராக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த காரின் அளவை பொருத்தவரை கிராண்ட் விட்டாரா காரைவிட சற்று நீளம் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு மிட்-சைஸ் எஸ்யூவி காராக தயாரிக்கப்படுகிறது.

இந்த காரின்விலையை பொருத்தவரை ரூ10-16 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த மிட் சைஸ் எஸ்யூவி செக்மெண்ட் அதிக போட்டி நிறைந்த செக்மெண்டாக உள்ளது. இதனால் இந்த கார் மார்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மஹிந்தரிா ஸ்கார்பியோ என், டொயோட்டா ஹைரைடர், ஹோண்டா எலவேட் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது. ஸ்பை புகைப்படங்களின்படி இந்த கார் இ-விட்டாரா மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களின் வடிவமைப்பை ஒத்து இருக்கிறது.

இந்த காாின் உட்புறம் 9 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய அம்சங்களுடன் உருவாக்கப்ட்டுள்ளது. வழக்கமான பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் இடம் பெறும் 6 ஏர்பேக்குகள் நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிஸ்டரும் இருக்கும். மேலும் இந்த காரில் ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் செலக்டபிள் டிரைவ் மோடுகள், உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிட் சைஸ் செக்மெண்டில் மிகப்பெரிய போட்டி இருக்கிறது. ரூ10-15 லட்சம் விலையுள்ள கார்கள் மக்களால் அதிகம் விரும்பப்படும் நிலையில் இந்த கார் மக்கள் மத்தியில் நல்லவரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த காரை அந்நிறுவனம் களம் இறக்குவது மார்கெட்டில் போட்டியை ஏற்படுத்தும் விரைவில் இதன் சிஎன்ஜி வெர்ஷன் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன் கார்களும் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 30, 2025, 13:03 [IST]
English summary
Maruti escudo teased ahead of suv launch next week
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X