இந்திய தயாரிப்பு தான் வேணும்னு அடம்பிடித்து 1 லட்சம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்க!
மாருதி நிறுவனம் தனது ஃபிராங்க்ஸ் காரின் ஏற்றுமதியில் புதிய சாதனை மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த கார் உற்பத்தி துவங்கப்பட்டு சுமார் 25 மாதங்களே ஆகும் நிலையில் 1 லட்சம் கார்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தனது ஃபிராங்க்ஸ் என்ற புதிய கூபே ஸ்டைல் காரை காட்சிப்படுத்தியது. இந்த கார் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதமே விற்பனைக்கு வந்தது. தொடர்ந்து மக்கள் மத்தியில் இந்த கார் நல்ல ஆதரவையும் பெற்று வந்தது. இந்த கார் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.

இந்த கார் தயாரிப்பு துவங்கிய மாதமே வெளிநாட்டிற்கு இந்த காரை ஏற்றுமதி செய்ய துவங்கியது. இந்நிலையில் 25 மாதங்கள் ஆகும் நிலையில் சுமார் 1 லட்சம் ஃபிராங்க்ஸ் கார்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த கார் அந்நிறுவனத்திற்கு குஜராத் மாநிலத்தில் சொந்தமாக உள்ள ஆலையில் தான் தயாரிக்கப்படுகிறது. இந்த கார் சுமார் 80 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த கார் லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த கார் கடந்த 2024-25ம் நிதியாண்டில் மட்டும் மொத்தம் 69 ஆயிரம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் அதிகம் ஏற்றுமதியான பயணிகள் வாகனம் என்ற பெயரையும் இந்த கார் தான் பெற்றது. நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் மட்டும் மொத்தம் 96 ஆயிரம் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் இந்தியாவில் இருந்து மொத்தம் விற்பனையாகும் பயணிகள் வாகனங்களில் 47 சதவீத பங்கை மாருதி நிறுவனம் தான் வைத்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 17 மாடல் கார்களை 100க்கும் மேற்பட்ட நாடுகக்கு ஏற்றுமதி செய்கிறது. கடந்த நிதியாண்டில் மாருதி நிறுவனம் மொத்தம் 3.3 லட்சம் வாகனங்களை தயாரித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் 17.5 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. இதற்கு ஜிம்னி, பலேனோ, ஸ்விஃப்ட், டிசையர் ஆகிய கார்களின் தயாரிப்பும் முக்கிய இடம் பிடிக்கின்றன.
சுஸூகி நிறுவனம் தனது தயாரிப்புகளை உலகில் பல நாடுகளுக்கு கொண்டு செல்ல இந்த மாருதி நிறுவனத்தின் உதவி மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் பல தயாரிப்புகள் வெளிநாட்டில் விரும்பி வாங்கப்படுகிறது. குறிப்பாக ஜிம்னி கார் இந்தியாவில் பெரிய அளவில் விற்பனையாகவில்லை என்றாலும் ஜப்பானில் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர்.

இந்தியா தற்போது உலகளவில் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் மையமாக மாறி வருகிறது. பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவிலான வாகனங்களை தயாரித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்கின்றனர். வெளிநாட்டு நிறுவனங்கள் கூட இந்தியாவில் ஆலை அமைத்து வாகனங்களை தயாரிக்கின்றனர். இதனால் இந்தியா ஆட்டோமொபைல் துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளிநாட்டு கார்களை உற்பத்தி செய்வது இந்தியாவிற்கு வளர்ச்சியை கொண்டு வரும். தற்போது 1 லட்சம் ஃபிராங்க்ஸ் கார்கள் ஏற்றுமதி என்பது மிகப்பெரிய சாதனை தான் நிச்சயம் இது எதிர்காலத்தில் அதிகம் ஏற்றுமதியாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









