பெட்ரோலே இல்லாமல் அதிக மைலேஜ் தரும் கார்! எத்தானிலேயே ஓடும்!

மாருதி நிறுவனம் இந்தியாவில் வாகன தயாரிப்பை அடுத்த முக்கியமான கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. இந்நிறுவனம் ஜப்பானில் நடந்த மொபிலிட்டி எக்ஸ்போ 2025ல் பெட்ரோல் இல்லாமல் முழுமையாக எத்தனாலில் இயங்கும் ஃபிராங்க்ஸ் காரை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் வரும் 2026ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் தனது ஃபிராங்க்ஸ் காரின் ஃபிளக்ஸ் ஃப்யூயல் காரை புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இது ஃபிராங்க்ஸ் காரை தான் முதல் மாற்று எரிபொருள் காராக அந்நிறுவனம் வெளியிட போகிறது என்பதை நமக்குதெளிவாக காட்டுகிறது. இந்த காரினல் 1.2 லிட்டர் மற்றம் 1.5 லிட்டர் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளது.

Maruti Fronx Flex Fuel

இந்த இரண்டு இன்ஜின்களிலும் முழுமையாக ஃபிளக்ஸ் ஃப்யூயலில் இயங்கும் திறன் கொண்டுள்ளது. இதில் 1.2 லிட்டர் இன்ஜின் தற்போது எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது இந்தியாவில் விற்பனவையில் உள்ள இ20 பெட்ரோல் மட்டுமல்ல இனி பெட்ரோலில் அதிக எத்தனாலை கலந்தாலும் அதிலும் சிறப்பாக இயங்கும் வகையில் .ரவாநக்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் இன்ஜின் முழுமையாக பெட்ரோலே கலக்கப்படாத எத்தனாலில் கூட இயங்கும்.

மாருதி நிறுவனம் குஜராத்தில் உள்ள தங்களது ஆலையில் தான். ஃபிராங்க்ஸ் காரை தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கின்றனர். இதனால் இந்த கார் ஜப்பானில் காட்சிப்படுத்தப்பட்டாலும் இந்தியாவில் அதிக தாமதம் இன்றி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். மாருதி நிறுவனம் இந்த நிதியாண்டிலேயே ஃபிளக்ஸ் ஃப்யூயல் வாகனங்களின் தயாரிப்பை துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படகிறது.

Maruti Fronx Flex Fuel

இதுமட்டுமல்ல மாரதி நிறுவனம் தற்போது பால் கூட்டுறவு சங்கங்களில் மூலம் பாயோ கேஸ் தயாரிப்பு ஆலையை அமைக்கும் முயற்சியை செய்து வருகிறது. இங்கு சிஎன்ஜி கேஸ்களை தயாரிக்க முடியும். இதற்கிடையில் ஃபிளக்ஸ் ஃப்யூயல் வாகனங்களை ஒன்றன்பின் ஒன்றாக அமுிப்படுத்தும். அதே நேரம் அதற்கான எரிபொருள் கிடைப்பதையும் இந்நிறுவனம் உறுதி செய்யும்.

இந்தியாவில் இ20 பெட்ரோல் தற்போது பயன்பாட்டில் உள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுவதை அதிகப்படுத்தும் அதிகபட்சம் 85 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்பட வாய்ப்புள்ளது. இப்படி கலக்கப்பட்டாலும் இந்த வாகனம் அதிலும் சிறப்பாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது எத்தனால் கலக்கப்படுவதால் பலர் மைலேஜ் பாதிக்கப்படுவதாக உணருகிறார்கள் இது பெரும் விவாதமாக மாறியுள்ளது. சில நிறுவனங்களும் இ20 பெட்ரோலால் சில வாகனங்களின் ஃபெர்பார்மென்ஸ் பாதிக்கப்பட வாய்பபுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதை தான் மாருதி நிறுவனம் மாற்றியோசித்து ஃபிராங்க்ஸ் ஃபிளக்ஸ் ஃப்யூயல் வாகனத்தை கொண்டு வருகின்றனர்.

தற்போது உள்ள பெட்ரோல் இன்ஜினில் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை பயன்படுத்தினால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எத்தனால் சுற்றியுள்ள காரில் உள்ள ஈரபத்தத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. இதனால் வாகனங்களில் இதை நேரடியாக பயன்படுத்தினால் இது பெட்ரோல் செல்லக்கூடிய லைனில் அறிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. முக்கியமாக ரப்பர் பகுதி எல்லாம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.இதனால் எத்தனாலை தாங்கும் தன்மை கொண்ட உலோகங்களால் இந்த பம்ப் லைன் செய்யப்பட்டால் இந்த பிரச்சனையை தடுக்க முடியும். இன்ஜினிற்காக பயன்படுத்தப்படும் உலோகத்திலும் இந்த பிரச்சனை தான் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஃபிளக்ஸ் ஃப்யூயல் எதிர்கால தேவையாக உள்ளது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வரிசையா மாற்ற எரிசக்தியை நோக்கி நகர்ந்து வருகின்றனர். ஃபிளக்ஸ் ஃப்யூயல் நிச்சயம் மிகப்பெரிய எதிர்காலத்தை உருவாக்கும். இதனால் இந்தியா வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய தேவை குறையும்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 9, 2025, 8:00 [IST]
English summary
Maruti fronx flex fuel unveil soon india launch in 2026
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+