40 கி.மீ மைலேஜ் தரும் மாருதி கார் கிட்டத்தட்ட ரெடி! எப்ப வருது தெரியுமா?

மாருதி நிறுவனம் தனது சிறிய ஹைபிரிட் காரை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதன்படி 2027ம் நிதியாண்டில் 2ம் காலாண்டில் இந்த கார் விற்பனைக்க வருவதற்கா சாத்தியம் உள்ளது. அந்நிறுவனம் விற்பனை செய்துவரும் ஃபிராங்க்ஸ் காரின் காம்பேக்ட் எஸ்யூவி காரை ஹைபிரிட் தொழிற்நுட்பத்துடன் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஃபிராங்க்ஸ் இந்நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை தயாரித்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்துவருகிறது. ஆனால் இந்நிறுவனத்திடம் சொந்தமாக ஸ்டிராங்க் ஹைபிரிட் சிஸ்டம் இல்லை. இந்நிறுவனம் டொடயோட்டா நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸ்டிராங்க் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தை தனது கார்களில் பயன்படுத்தி வருகிறது. இதன் படி மாருதிபிராண்டில் தற்போது கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விக்டோரிஸ் ஆகிய கார்கள் விற்பனையாகி வருகிறது.

Maruti Fronx

ஆனால் ஃபிராங்க்ஸ் ஹைபிரிட் கார் தற்போது உடனடியாக விற்பவனைக்கு வர வாய்ப்பில்லை அரசு கார்பரேட் ஃப்யூயல் பயன்பாட்டு விதிமுறையின் 2ம் கட்டத்தை வரும் 2027ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்க கொண்டு வருகிறது. இதன்படி ஒரு வாகன தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் வாகனங்களின் சராசரி மைலேஜ் அதிகமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கார்பன் வெளியீடு குறைந்து மாசு குறையும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டிராங்க் ஹைபிரிட் என்பது பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரை இணைத்து உருவாக்கப்படுகிறது.இந்த தொழிற்நுட்பம் பொருத்தப்பட்ட கார் குறைந்த வேகத்தில் பயணிக்கும் போதுபெட்ரோல் இல்லாமல் எலெக்ட்ரிக் பவரில் மட்டுமே பயணிக்கும். குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்லும் போது மட்டுமே பெட்ரோல் இன்ஜின் ஸ்டார்ட் ஆகி பவரை வழங்கும். இதனால் ஒரே நேரத்தில் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் இரண்டிலும் இயங்குவதால் குறைவான பெட்ரோல் செலவில் நீண்ட தூரம் பயணிக்க முடியும்.

Maruti Fronx

நமக்கு கிடைத்த தகவலின்படி மாருதி நிறுவனம் தற்போது சொந்தமாக இந்த தொழிற்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. இந்த இன்ஜின் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தனது இசட் சிரீஸ் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினில் தான் இதற்கு பயன்படுத்தும் என எதிர்பார்க்லாம். இதே இன்ஜின் தான் ஸ்விஃப்ட், டிசையர் கார்களிலும் பொருத்தப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் அந்த காரிலும் ஸ்டிராங் ஹைபிரிட்டை எதிர்பார்க்கலாம்.

இது வந்துவிட்டால் டொயோட்டா நிறுவனத்திடமிருந்து ஸ்டிராங்க் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தை வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. மாறாக தனது தொழிற்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுக்கு மாருதி விற்பனை செய்யக்கூட வாய்ப்புள்ளது. இந்தியாவில் ஸ்டிராங்க் ஹைபிரிட் கார்கள் மெல்ல வளர்ந்து வருகிறது.

Maruti Fronx

இந்தியா முழுவதும் கடந்த 2023ம் நிதியாண்டில் 41,477 ஸ்டிராங்க் ஹைபிரிட் கார்கள் விற்பனையானது. 2024ம் ஆண்டு 90,460 கார்கள் விற்பனையானது. 2025ம் நிதியாண்டில் 1,04,800 கார்கள் விற்பவனையாகியள்ளது. இந்த நிதியாண்டில் இது மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தி்ல இந்த இன்ஜின் கொண்ட கார்கள் அதிகம் விற்பனையாக வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன. ஸ்டிராங்க் ஹைபிரிட் கார்கள் வந்தால் அதுவும் சிறிய கார்களில் இ்நத தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டால் லிட்டருக்கு 40 கி.மீ மைலேஜ் தரும் கார் வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Friday, October 31, 2025, 14:10 [IST]
English summary
Maruti fronx hybrid first in house strong hybrid model
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X