22.89 கிமீ மைலேஜ் போதலையா!.. சீக்கிரமே 30 கிமீ-க்கும் அதிகம் மைலேஜ் தர வசதியில இந்த எஸ்யூவி கார் வர போகுது!!

புதிய கார் விற்பனையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ஓர் கார் மாடாலே மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) ஆகும். இந்த கார் கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் 21,461 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இந்தியாவின் நம்பர் 1 விற்பனையாகும் கார் என்கிற இடத்தை அந்த மாதத்தில் பிடித்தது. இது சென்ற 2024 பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் 51.48 சதவீதம் அதிகம் விற்பனையாகும். அதாவது, 14,168 யூனிட்டுகள் வரை மட்டுமே 2024 பிப்ரவரியில் ஃப்ரான்க்ஸ் விற்பனையாகி இருந்தது.

இத்தகைய அதீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடலையே மேலும் சிறப்பு வாய்ந்ததாக மாற்றும் முயற்சியில் மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது களமிறங்கி இருப்பதாக தெரிய வந்திருக்கின்றது. அதாவது, இந்த கார் மாடலின் ஹைபிரிட் வெர்ஷனே அது விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

Maruti fronx hybrid launch details

இந்த கார் மாடலை இந்த ஆண்டு முடிவடைவதற்குள் எதிர்பார்க்கலாம். இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன. அதாவது, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மாருதி சுஸகி ஃப்ரான்க்ஸ் ஹைபிரிட் விற்பனைக்கு வந்துவிடும் என்றே தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஃப்ரான்க்ஸ் கார் காதலர்களை மட்டுமல்ல அதிக மைலேஜை விரும்பும் கார் காதலர்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ பூஸ்டர்ஜெட் பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் என இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகளில் ஃப்ரான்க்ஸ் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த மோட்டார்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன.

Maruti fronx airbag

இதில், முதல் மோட்டார் தேர்வு லிட்டர் ஒன்றிற்கு 20.01 கிமீ - 21.5 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதேபோல், இரண்டாவது மோட்டார் அதிகபட்சமாக லிட்டர் ஒன்றுக்கு 21.79 கிமீ வரையிலும், 22.89 கிமீ வரையிலும் மைலேஜை வழங்கும்.

இது மிக சிறப்பான மைலேஜ் திறன் ஆகும். இதைவிட அதிக மைலேஜையே விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஃப்ரான்க்ஸ் கார் மாடலின் ஹைபிரிட் வெர்ஷன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. லிட்டர் ஒன்றிற்கே ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட ஃப்ரான்க்ஸ் 28 கிமீ முதல் 30 கிமீ வரையில் மைலேஜை தரும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

Maruti fronx interior design

இத்தகைய மைலேஜை ஃப்ரான்க்ஸ் தரும் எனில் கட்டாயம் இப்போது விற்பனையாகிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் இரட்டிப்பான விற்பனை வரவேற்பைப் பெறக் கூடும். ஆகையால், வரலாற்றை மிரட்டும் அளவிற்கு அது விற்பனையில் சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது விற்பனையில் இருக்கும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் மைலேஜை தருவதில் மட்டுமல்ல பிரீமியம் அம்சங்களைத் தாங்கியிருப்பதிலும் மிக சிறந்த கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், இந்த காம்பேக்ட் கிராஸோவர் எஸ்யூவி காரில் ஃபிங்கர் பிரிண்ட் வசதிக் கொண்ட 9 அங்குல எச்டி இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ பிளஸ் அம்சத்துடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமல்ல, வயர்லெஸ் சார்ஜர், ஹெட்ஸ் அப் திரை, செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்சை இணைக்கும் வசதி உள்ளிட்டவற்றையும் ஃப்ரான்க்ஸ் காரில் மாருதி சுஸுகி வழங்கியுள்ளது. இதுமாதிரியான ஏராளமான பிரீமியம் அம்சங்களைத் தாங்கியிருக்கின்ற காரணத்தினாலும், மைலேஜை வாரி வழங்குகின்ற காரணத்தினாலுமே இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Maruti fronx front view

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஹைபிரிட் வேரியண்டின் துள்ளியமான அறிமுக நாள் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், வரும் பண்டிகை நாள் ஏதேனும் ஒன்றில் இது விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், ஆகஸ்டு 15 ஆம் தேதி அன்றுகூட இந்த காரை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம் என்கின்றனர் ஆட்டோத்துறை சார்ந்த வல்லுநர்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, April 6, 2025, 5:29 [IST]
English summary
Maruti fronx is set to launch with new hybrid technology aiming to boost sales
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X