கோழி குஞ்சு மாதிரி கலர் கலரா இறக்கிவிட்டாங்க! இனி இந்த காரை இந்த கலரில் கூட வாங்கலாம்
மாருதி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா பிளாக் எடிசனை சமீபத்தில் அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது தனது ஸிக்மா, டெல்டா, மற்றும் டெல்டா + வேரியன்ட்களில் புதிய கலர் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்கள் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் இந்த கலர் ஆப்ஷன்கள் அறிமுகமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணாலாம் வாருங்கள்.
மாருதி கிராண்ட் விட்டாரா ஸிக்மா வேரியன்டில 3 மேனோடோல் கலர் ஆப்ஷன்கள் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி நெக்ஸா ப்ளூ, கிராடுலர் கிரே, பியர்ல் பிளாக்நைட் பிளாக், இதற்கு முன்னர் இந்த வேரியன்டில் அக்ரலிக் ஒயிட் கலர் மட்டுமே ஒரே ஆப்ஷனாக இருந்தது. தற்போது 4 கலர் ஆப்ஷன்கள் வந்துள்ளது.

இதே போல டெல்டா மற்றும் டெல்டா + வேரியன்ட்களில் பியர்ல் பிளாக் நைட் பிளாக் வெர்ஷன் புதிய கலர் ஆப்ஷனாக சேர்ந்துள்ளது. இத்துடன் சேர்த்து இந்த வேரியன்ட்களில் மொத்தம் 7 விதமான கலர் ஆப்ஷன்கள் உள்ளன. முன்னர் நெக்ஸா ப்ளூ, ஸ்பிளென்டிட் சில்வர், ஒப்புலென்ட் ரெட், கிராடுலர் கிரே, ஆர்டிக் ஒய்ட் மற்றும் செஸ்ட்நெட் பிரெளன் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன.
இந்த புதிய கலர் ஆப்ஷன்கள் எப்பொழுது முதல் கிடைக்கும் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி டெல்டா வேரியன்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கலர் ஆப்ஷன் ஆகஸ்ட் மாதம் இறுதியில்கிடைக்கம். ஸிக்மா வேரியன்டில் உள்ள கலர் ஆப்ஷன்கள் செப்டம்பர் மத்தியில்கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் விலையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஸிக்மா மேனுவல் வேரியன்ட் விலை ரூ11.42 லட்சம் என்ற விலையிலும், டெல்டா மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்கள் முறையே ரூ12.53 லட்சம் மற்றும் ரூ13.93 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. டெல்டா+ வேரியன்ட் ஸ்டிராங்க் ஹைபிரிட் ஆப்ஷன் உடன் வரகிறது. இந்த கார் ரூ16.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
மாருதி கிராண்ட் விட்டாரா காரில் இந்த கலர் ஆப்ஷன்கள் போட்டி தயாரிப்புகளுக்கு போட்டியைதளரும் வகையில் வந்துள்ளுது. இதன் போட்டியாளரான கியா செல்டோஸ் காரில் பேஸ் வேரியன்டில் மொத்தம் 7 விதமான கலர் ஆப்ஷன்கள் உள்ளன. இம்பரியல் ப்ளூ, பவ்டெர் ஆலிவ், இன்டென்ஸ் ரெட், கிராவிட்டி கிரே, ஆரா பிளாக் பியர்ல், ஸ்பார்க்கிலிங் சில்வர், கிளியர் ஒயிட் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்கள் உள்ளன.

அதே போல ஹூண்டாய் கிரெட்டா காரில் 6 மேனோடோன் மற்றும் 1 டுயல் டோன் கலர் ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் பேஸ் வேரியன்டில் குறைவான கலர் ஆப்ஷன்கள் மட்டுமே இருக்கிறது குிறப்பிடத்தக்கது. மாருதி கிராண்ட் விட்டாரா காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட டொயோட்டா ஹைரைடர் காரிலும் கிட்டத்தட்ட அதே கலர் ஆப்ஷன்கள் தான் உள்ளன. ஆனால் ஒவ்வொரு கலர் ஷேடுகளும் லேனசான வித்தியாசத்தை பெற்றுள்ளன.
ஹைரைடர் காரில் உள்ள கலர் ஆப்ஷன்களை பொருத்தவரை கஃபே ஒயிட், என்டிச்சிங் சில்வர், கேமிங் கிரே, ஸ்பார்ட்டின் ரெட், மிட் நைட் பிளாக், கேவ் பிளாக், ஸ்பீடி ப்ளூ, ஆகிய மேனோடோன் கலர் ஆப்ஷன்களும், டுயல் டோன் ஆப்ஷனில் கஃபே ஒயிட் மற்றும் மிட் நைட் பிளாக், ஸ்பார்டின் ரெட் மற்றும் மிட்நைட் பிளாக், என்ட்ச்சிங் சில்வர் மற்றும் மிட்நைட் பிளாக், ஸ்பீடி ப்ளூ மற்றும் மிட் நைட் பிளாக் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஸ்போர்ட்டியர் லுக்கிற்காக டுயல் டோன் கலர் ஆப்ஷன்கள் பிரபலமாக உள்ளது. பெரும்பாலான காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் டாப் வேரியன்டில் மட்டுமே டுயல் டோன் கலர் ஆப்ஷன்கள் உள்ளன. தற்போது புதிய கலர் ஆப்ஷன்கள் கிராண்ட் விட்டாரா காரில் சேர்ந்திருப்பது அந்த காரின் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









