28+ கி.மீ மைலேஜ் தரும் பழைய ஸ்டாக் காருக்கு ரூ1.18 லட்சம் தள்ளுபடியை அள்ளி வீசிய மாருதி!
மாருதி நிறுவனத்தின் பிரீமியம் கிராண்ட் விட்டாரா எஸ்யூவியை வாங்கப் பரிசீலித்து வருகிறீர்களா? பிப்ரவரி மாதம் இந்த காருக்கு பல சலுகைகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தள்ளுபடிகள், இலவச நீட்டிக்கப்பட்ட வாரடிண்டி மற்றும் டொமினியன் கிட் ஆகியவற்றைப் பெறலாம். இந்த சலுகைகள் 2024 மற்றும் 2025 மாடல்களுக்குப் பொருந்தும். ஸ்டிராங்க் ஹைப்ரிட் வேரியண்ட் மிகப்பெரிய சேமிப்பை வழங்குகிறது. ஆல் வீல் டிரைவ் (AWD) மற்றும் ஸிக்மா, டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா வேரியண்ட்களிலும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
கிராண்ட் விட்டாராவின் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 11.19 லட்சம் ஆகும். 2024 மாடல் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஸ்டிராங்க் ஹைப்ரிட், ஐந்து ஆண்டு நீட்டிக்கப்பட்ட வாரண்டியுடன் ரூ. 1.18 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. 2025 மாடல் அதே வாரண்டியுடன் ரூ. 93,100 வரை தள்ளுபடி வழங்குகிறது. 2024ம் ஆண்டு மாடலின் மைல்டு ஹைப்ரிட்கள் ரூ. 1.13 லட்சம் வரை தள்ளுபடியுடன் அல்லது ஒரு டொமினியன் கிட் பிளஸ் ரூ. 80,200 வரை தள்ளுபடி ஆகியவற்றுடன் வருகின்றன.

மாருதி சுஸூகி, கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் மாடல்களை உருவாக்க டொயோட்டாவுடன் இணைந்து செயல்பட்டது. கிராண்ட் விட்டாரா, 6,000 RPM இல் சுமார் 100 bhp பவர் மற்றும் 4400 RPM இல் 135 Nm டார்க் திறனை உற்பத்தி செய்யும் 1462cc K15 இன்ஜினுடன் கூடிய மிதமான ஹைப்ரிட் பவர் டிரெய்னை கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கிராண்ட் விட்டாராவில் உள்ள ஹைப்ரிட் சிஸ்டம் இரண்டு மோட்டார்களைப் பயன்படுத்துகிறது. பெட்ரோல் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் ஆகியவை உள்ளன. பெட்ரோல் இன்ஜின் டிரைவ் செய்யும் போது பேட்டரியை சார்ஜ் செய்கிறது. தேவைப்படும் போது கூடுதல் பவரை வழங்குகிறது. EV மோடில், கார் எந்த சத்தமும் இல்லாமல் எலெக்ட்ரிக் பவரில் மட்டுமே இயங்குகிறது. ஹைப்ரிட் மோட் இன்ஜினை எலெக்ட்ரிக் ஜெனரேட்டராக செயல்பட அனுமதிக்கிறது.

கிராண்ட் விட்டாரா, டயர் பிரஷர் மானிட்டர் போன்ற மேம்பட்ட அம்சங்களை கொண்டுள்ளது, இது டிரைவர்களுக்கு டயர் காற்று அளவை சரிபார்க்க அல்லது அழுத்தம் குறைவாக இருந்தால் தானாகவே எச்சரிக்கைகளைப் பெற அனுமதிக்கிறது. பனோரமிக் சன்ரூஃப் லக்ஸரி அம்சத்தை சேர்க்கிறது, அதே நேரத்தில் 360-டிகிரி கேமரா ஸ்கிரீனில் சுற்றுப்புறங்களை காண்பிப்பதன் மூலம் பார்க்க முடியாத இடங்களை கண்காணித்து செல்லவும் உதவுகிறது.
புதிய விட்டாரா மாடலில் வயர்லெஸ் சார்ஜிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட் செய்யப்பட்ட முன் பக்க சீட்டுகள், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் மற்றும் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் போன்ற நிலையான அம்சங்களுடன் பாதுகாப்பு முக்கிய அம்சமாக உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளில் மல்டி ஏர்பேக்குகள், ABS with EBD, ESE, ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், சீட் பெல்ட்கள், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360-டிகிரி கேமரா ஆகியவை உள்ளன.

நீங்கள் உங்கள் வாகனத்தை வாங்குவதற்கு முன், உள்ளது இருப்பிடத்திற்கு ஏற்ப அல்லது டீலர்களுக்கு ஏற்ப தள்ளுபடி விவரங்கள் மாறுபடலாம் என்பதால் அனைத்து தள்ளுபடி விவரங்களையும் சரிபார்க்கவும். வாகனம் வாங்கும் முடிவை எடுக்கும் முன்னர் இந்த தள்ளுபடிகள் எல்லாம் இருக்கிறதா அல்லது மாற்றம் இருக்கிறதா என செக் செய்து கொள்ளவும்
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2024ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்கள் ஸ்டாக் இருக்கும் இடங்களில் மட்டுமே இந்த தள்ளுபடிகள் செல்லுபடியாகும். ஸ்டாக் காலியாவிட்டால் இந்த தள்ளுபடி விலையில் காரை வாங்க முடியாது. அதனால் விரைவாக உங்கள் காரை புக்கிங் செய்து கொள்ளுங்கள். முழு விபரங்களை அருகில் உள்ள அதிகாரப்பூர்வமான ஷோரூம்க்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









