ஏழை பாழைகளும் இனி கார் வாங்கலாம்! மாருதி கார்களின் விலை இவ்வளவு தானா?

மாருதி நிறுவனம் இந்தியாவில் வரும் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வரவுள்ள நிலையில் எந்தெந்த வாகனங்கள் எவ்வளவு விலை குறைப்பு வருகிறது என்ற தகவலை தற்போது அதிகாரப்பூர்வாக வெளியிட்டுள்ளது. இதன்படி மாருதி கார்களின் விலை ரூ1.30 லட்சம் வரை குறைகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் இந்தியாவில் நம்பர் 1 வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் வரும் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வருகிறது. இதன்படி மாருதி கார்களில் எந்தெந்த மாடல்கள் எவ்வளவு விலை குறையப்போகிறது என்ற தகவலை வெளியிட்டுள்ளது.

Maruti GST Reduce Price list

இதன்படி மாருதி நிறுவனத்தின் எஸ்- பிரெஸ்ஸோ கார் இனி ரூ 3,49,900 முதல் கிடைக்கும். இந்த காரின் விலை அதிகபட்சம் ரூ1,29,600 வரை குறைகிறது. அடுத்தாக ஆல்டோ கே 10 காரை பொருத்தவரை ரூ3,69,900 முதல் கிடைக்கும். இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ1,07,600 வரை விலை குறைகிறது. அடுத்ததாக செலிரியோ காரை பொருத்தவரை இனி ரூ 4,69,900 வரை கிடைக்கும். இந்த காருக்கு ரூ94,100 வரை விலை குறைகிறது.

வேகன்ஆர் காரை பொருத்தவரை ரூ4,98,900 முதல் இனி கிடைக்கும். இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ79,600 வரை விலை குறைகிறது. இக்னீஷ் காரை பொருத்தவரை இனி ரூ5,35,100 முதல் கிடைக்கும். இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ71,300 வரை விலை குறைகிறது. அடுத்ததாக ஸ்விஃப்ட் காரை பொருத்தவரை ரூ5,78,900 முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த காருக்கு ரூ84,600 வரை விலை குறைகிறது.

Maruti GST Reduce Price list
பலேனோ காரை பொருத்தவரை இனி ரூ5,98,900 முதல் விற்பனைக்கு கிடைக்கும். இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ86,100 விலை குறைகிறது. அடுத்ததாக டிசையர் காரை பொருத்தவரை ரூ6,23,800 முதல் கிடைக்கும். இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ87,700 விலை குறைகிறது. அடுத்தாக ஃபிராங்க்ஸ் காரை பொருத்தவரை இனி ரூ6,84,900 முதல் கிடைக்கும். இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ1,12,600 வரை விலை குறைகிறது. பிரெஸ்ஸா கார் இனி 8,25,900 முதல் கிடைக்கும். இந்த காருக்கு அதிக பட்சம் ரூ1,12,700 வரை விலை குறைகிறது.
Model Now Starts From Price Reduction (Up To)
S-Presso Rs. 3,49,900 Rs. 1,29,600
Alto K10 Rs. 3,69,900 Rs. 1,07,600
Celerio Rs. 4,69,900 Rs. 94,100
WagonR Rs. 4,98,900 Rs. 79,600
Ignis Rs. 5,35,100 Rs. 71,300
Swift Rs. 5,78,900 Rs. 84,600
Baleno Rs. 5,98,900 Rs. 86,100
Dzire Rs. 6,23,800 Rs. 87,700
Fronx Rs. 6,84,900 Rs. 1,12,600
Brezza Rs. 8,25,900 Rs. 1,12,700
Ertiga Rs. 8,80,000 Rs. 46,400
Grand Vitara Rs. 10,76,500 Rs. 1,07,000
Victoris Rs. 10,49,900 New Launch
XL6 Rs. 11,52,300 Rs. 52,000
Jimny Rs. 12,31,500 Rs. 51,900
Invicto Rs. 24,97,400 Rs. 61,700
Eeco Rs.5,18,100 Rs. 68,000

எர்டிகா கார் இனி ரூ8,80,000 முதல் கிடைக்கம் இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ46,400 வரை விலை குறைகிறது. கிராண்ட் விட்டாரா காரை பொருத்தவரை ரூ10,76,500 முதல் கிடைக்கும். இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ1,07,000 வரை விலை குறைகிறது. விக்டோரியஸ் கார் ரூ10,49,900 என்ற விலையில் வருகிறது. இது புதிய அறிமுகம் என்பதால் விலை குறைப்பு இல்லை.

Maruti GST Reduce Price list

எக்ஸ்எல்6 காரை பொருத்தவரை ரூ11,52,300 வரையிலான விலையில் கிடைக்கும். இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ52,000 விலை குறைகிறது. ஜிம்னி காரை பொருத்தவரை ரூ12,31,500 முதல் இனி கிடைக்கம் இந்த காருக்க அதிகபட்சமாக ரூ51900 விலை குறைகிறது. இன்விக்டோ கார் இனி ரூ24,97,400 முதல் இனி கிடைக்கும். இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ61,700 வரை விலை குறைகிறது. மாருதி ஈக்கோ கார் இனி ரூ5,18,100 முதல் கிடைக்கும். இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ68,000 வரை விலை குறைகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விலை குறைப்பை அறிவித்துள்ள நிலையில் தற்போது வெறும் ரூ3.5 லட்சத்திற்கே கார் வாங்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த காரை மக்கள் பலர் விரும்பி வாங்குவார்கள். இதனால் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 18, 2025, 17:20 [IST]
English summary
Maruti gst reduce price list all car prices reduced by up to 1 30 lakh
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X