வெறும் ரூ3.87 லட்சம் தானா? மாருதியின் சிறிய கார்களின் விலை இவ்வளவு குறையுதா?

ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகான விலை விபரங்களை மாருதி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் சிறிய ரக கார்களுக்கு இனி 18 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி என அரசு சொல்லிவிட்டது. இதுவரை 29 முதல் 31 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. இனி மாருதி நிறுவனத்தின் ஆல்டோ, எஸ்பிரெஸ்ஸோ, வேகன் ஆர், செலிரியோ, ஸ்விஃப்ட், இக்னீஷ், பலேனோ ஆகிய கார்களின் விலை குறைகிறது. இதன்படி ரூ36,000 முதல் ரூ1.06 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மாருதி நிறுவனத்தின் ஆல்டோ காரை பொருத்தவரை மொத்தம் 10 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் விலை ரூ36,000 முதல் ரூ51,000 வரை விலை குறைகிறது. முன்பு ரூ4.23 லட்சம் முதல் ரூ6.21ட்சம் வரை விற்பனையாகி வந்த கார் இனி ரூ3.87 லட்சம் முதல் ரூ5.68 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த காரின் விலை சுமார் 9.47 சதவீதம் வரை குறைந்துள்ளது.

ஆல்டோ மாடல் தற்போதைய விலை(ரூபாய் லட்சத்தில் ) புதிய விலை (ரூபாய் லட்சத்தில் )
STD MT 4.23 3.87
LXI MT 5.00 4.57
VXI MT 5.24 4.70
VXI+ MT 5.60 5.12
VXI AMT 5.81 5.31
VXI+ AMT 6.10 5.58
CNG MXT MT 5.90 5.39
CNG VXI MT 6.21 5.68
Tour H1 MT 4.97 4.54
Cng Tour H1MT 5.87 5.36
Maruti Hatchback Price list

மாருதி நிறுவனத்தின் எஸ்பிரெஸ்ஸோ காரை பொருத்தவரை மொத்தம் 8 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் இதற்கு முன்னர் ரூ4.27 லட்சம் முதல் ரூ6.12 லட்சம் வரை விற்பனவையாகி வந்தது. தற்போது ரூ37,000 முதல் ரூ53,000 வரை விலை குறைப்பு செய்யப்ப்டடுள்ளது. இதன் காரணமாக இந்த கார் இனி ரூ3.90 லட்சம் முதல் ரூ5.59 லட்சம் வரை விற்பனைக்கு வருகிறது. இந்த காருக்கு 9.49 சதவீதம் விலை குறைந்துள்ளது.

எஸ்-பிரெஸ்ஸோ மாடல் தற்போதைய விலை புதிய விலை
STD (O) MT 4.27 3.90
LXI(O) MT 5.00 4.57
VXI(O) MT 5.21 4.77
VXI+ (O) MT 5.51 4.77
VXI (O)AMT 5.72 5.23
VXI+ (O) AMT 6.01 5.49
CNG LXI MT 5.92 5.41
CNG VXI MT 6.12 5.59

மாருதி செலிரியோ கார் மொத்தம் 8 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் இது வரை ரூ5.64 லட்சம் முதல் ரூ7.37 லட்சம் வரை விற்பனையாகி வந்தது. இந்த கார் இனி ரூ5.16 லட்சம் முதல் ரூ6.74 லட்சம் வரை விற்பனைக்கு வருகிறது. இந்தகாரின் விலை ரூ48,000 முதல் ரூ59,000 வரை விலை குறைகிறது. அதிகபட்சமாக 9.49 சதவீதம் வரை இந்த காரின் விலை குறைகிறது

செலிரியோ மாடல் தற்போதைய விலை (ரூபாய் லட்சத்தில் ) புதிய விலை
LXI MT 5.64 5.16
VXI MT 6.00 5.48
ZXI MT 6.39 5.85
ZXI+ MT 6.87 6.28
VXI AMT 6.50 5.94
ZXI AMT 6.89 6.30
ZXI + AMT 7.37 6.74
VXI CNG MT 6.90 6.31
Maruti Hatchback Price list

மாருதி வேகன் ஆர் காரை பொருத்தவரை மொத்தம் 11 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் இதுவரை ரூ5.76 லட்சம் முதல் ரூ7.50 லட்சம் வரை விற்பனையாகி வந்தது. இனி இந்த கார் ரூ5.26 லட்சம் முதல் ரூ6.86 லட்சம் வரை விற்பனையாகும். இந்த காருக்கு ரூ50,000 முதல் ரூ60,000 வரை விலை குறைகிறது. இந்த காருக்க அதிகபட்சமாக 9.47 சதவீதம் விலை குறைகிறது.

மாருதி இக்னீஷ் காரை பொருத்தவரை மொத்தம்7 விதமான வேரியன்ட்களில் விற்பனவையாகி வருகிறது. இ்நத கார் தற்போது ரூ5.85 லட்சம் முதல் ரூ8.12 லட்சம் வரை விற்பனையாகி வந்தது. இது ரூ5.35 லட்சம் முதல் ரூ7.43 லட்சமாக விலை குகிறது. இந்த காரின் விலை ரூ50,000 முதல் ரூ69,000 வரை விலை குறைகிறது. இந்த கார் அதிகபட்சமாக 9.37 சதவீதம் வரை விலை குறைகிறது.

Maruti Hatchback Price list

மாருதி ஸ்விஃப்ட் காரை பொருத்தவரை மொத்தம் 12 விதமான வேரியன்ட்களில் விற்பனவையாகி வகிறது. இந்த கார் தற்போது ரூ6.49 லட்சம் முதல் ரூ9.50 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. இனி இந்த கார் ரூ5.94 லட்சம் முதல் ரூ8.14 லட்சம் வரை விற்பனையாகும். இந்த கார் ரூ55,000 முதல் ரூ1,06,000 வரை விற்பனைக்கு வருகிறது. இ்நத கார் அதிகபட்சமாக 13.02 லட்சம் வரை விலை குறைகிறது.

மாருதி பலேனோ காரை பொருத்தவரை மொத்தம் 9 விதமான வேரியன்ட்களில் விற்பனவையாகி வருகிறது. இந்த கார் இது வரை ரூ6.74 லட்சம் முதல் ரூ9.96 லட்சம் வரை விற்பனையாகி வந்தது. இனி இந்த கார் ரூ6.17 லட்சம் முதல் ரூ9.11 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. இந்த கார் ரூ57,000 முதல் ரூ85,000 வரை விலை குறைகிறது. இந்த கார் அதிகபட்சமாக 9.38 சதவீத விலை குறைவை சந்திக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறைந்த விலை கார்கள் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெறுகிறது. இந்த காரை வாங்க நினைப்பவர்கள் நிச்சயம் இந்த பட்டியலை பார்த்து அவர்களுக்கான காரை தேர்வு செய்ய முடியும்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 18, 2025, 21:57 [IST]
English summary
Maruti hatchback price list post gst alto wagonr swift baleno
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X