3 நாளில் 1 லட்சம் கார்கள் டெலிவரியா? தீபாவளிக்கு எல்லாரும் கார் வாங்கிட்டாங்க போல!
பண்டிகை காலங்களில் வழக்கமாக வாகன விற்பனை அதிகமாக இருக்கும். அதன்படி இந்த தீபாவளிக்கு இந்தியா முழுவதும் வாகன விற்பனை மிக அதிகமாக இருந்துள்ளதாக முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தற்போது தகவல்களை வெளியிட்டுள்ளனர். தீபாவளியை குறிவைத்து பலர் புதிதாக வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர்களுக்கான டெலிவரிகள் தற்போது நடந்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ஜிஎஸ்டி வரி குறைப்பால் வாகனங்களின் விலை குறைந்தது தான் என கூறுகிறார்கள். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் வழக்கமாக பண்டிகை காலங்களில் நல்ல நாள் என்பதால் புதிதாக வாகனம் வாங்க பலர் ஆர்வமாக இருப்பார்கள். இதை குறிவைத்து பலர் வாகனங்களை புக்கிங் செய்துவிட்டு பண்டிகை காலங்களில் தங்களுக்கு டெலிவரி வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். இப்படியாக தீபாவளியை ஒட்டி பலர் வாகனங்களை டெலிவரி எடுப்பார்கள் இப்படியாக கடந்த சனிக்கிழமை மற்றும் இன்று அதிக வாகனங்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விவரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி மாருதி, ஹுண்டாய் மற்றும் டாடா ஆகிய நிறுவனங்கள் இந்த பண்டிகை காலத்தில் மிக அதிகமான விற்பனையை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது.

மாருதி நிறுவனம் கடந்த சனிக்கிழமை மட்டும் மொத்தம் 38,500 வாகனங்களை டெலிவரி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று இரவுக்குள் அந்நிறுவனம் 41,000 வாகனங்களை மொத்தம் இந்த தீபாவளிக்காக டெலிவரி செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது. இது மட்டுமல்லாமல் தீபாவளி நாளில் 10,000 வாகனங்கள் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளதால், இந்த தீபாவளிக்கு மற்றும் 51 ஆயிரம் வாகனங்களை அந்நிறுவனம் மூன்று நாட்களில் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது. இது மிகப்பெரிய வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. தற்போது அதிக டெலிவரி இருப்பதால் பல ஷோரூம் உங்கள் அதிக நேரம் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு தினமும் 14ஆயிரம் கார்கள் புக்கிங் வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியை விட தற்போது மாருதி நிறுவனத்தில் அதிக அளவில் விற்பனை நடந்துள்ளது.
அடுத்ததாக ஹூண்டாய் நிறுவனத்தை பொறுத்தவரை இந்த தீபாவளி பண்டிகையில் மட்டும் 14,000 வாகனங்களை டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது. இது கடந்தாண்டு நடந்த விற்பனையை விட 20 சதவீதம் அதிகமாக விற்பனை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மாருதி நிறுவனம் போல இந்த நிறுவனமும் அதிக நேரம் ஷோரூம்களை செயல்பாட்டில் கொண்டு வந்து இந்த டெலிவரிகளை சாத்தியப்படுத்தியுள்ளது. அதிகமான வாடிக்கையாளர்கள் வாகனங்களை வாங்கி வருவதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாடா நிறுவனத்தை பொருத்தவரை இந்த தீபாவளி பண்டிகையில் மொத்தம் 25000 வாகனங்களை டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில் அதிக அளவிலான வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த பண்டிகை காலத்தில் டயர்2 மற்றும் டயர் 3 ஆகிய நகரங்களில் தான் அதிக அளவிலான புக்கிங் வந்துள்ளதாகவும் விற்பனை அந்த பகுதியில் தான் அதிகமாக நடக்கும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் தான் டாடா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பண்டிகை காலங்களில் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் இந்த தருணத்தை பயன்படுத்தி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் வாகனங்களை வழங்கி அதிக அளவிலான விற்பனையை பெற திட்டமிடும். இது மட்டும் இல்லாமல் கடமை செப்டம்பர் மாதம் 24ம் தேதி அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் வாகன விலைகள் கடுமையாக குறைந்துள்ளது. இதன் காரணமாகவும் விற்பனை அதிகமாக மாறி உள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக விற்பனையை இந்த பண்டிகை காலத்தில் இந்நிறுவனங்கள் பெறும் என்பதில் மாற்று கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications









