மாசம் வெறும் 266 கார் தான் விக்குது! மாருதிக்கு இப்படி ஒரு நிலை வரும்னு யாருமே நினைச்சு கூட பார்த்திருக்கல
நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டிற்கான விற்பனை விபரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான விற்பனையில் அனைத்து நிறுவனங்களும் சிறப்பாக விற்பனைகளை பதிவு செய்துள்ள நிலையில் இந்தியாவிலேயே அதிக கார்களை விற்பனை செய்யும் மாருதி நிறுவனத்தின் ஒரு கார் மிக குறைவான விற்பனையையே பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டு விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இதில் அந்நிறுவனம் விற்பனை செய்யும் பல மாடல் கார்கள் அதன் செக்மெண்டில் அதிகம் விற்பனையான மாடல்களாக உள்ளன. இருந்தாலும் சில மாடல்கள் விற்பனையில் பின்தங்கியுள்ளது. இதில் முக்கியமான கார் மாருதி இன்விக்டோ கார் தான்.

மாருதிநிறுவனத்தின் இன்விக்டோ கார் ஒரு எம்பிவி கார் ஆகும். கடந்த 6 மாதத்தில் மொத்தமே 1600 கார்கள் தான் விற்பனையாகியுள்ளது. இது சராசரியாக மாதம் 266 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த காரின் விற்பனை குறைவாக இருப்பதால் இ்நத காருக்கு அந்நிறுவனம் ரூ1.6 லட்சம் வரை தள்ளுபடியை வழங்குகிறது. இருந்தாலும் இந்த கார் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த கார் மார்கெட்டில் ரூ24,97,400 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
மாருதி இன்விக்டோ காரை பொருத்தவரை ஏப்ரல் மாதம் 223 கார்களும், மே மாதம் அதே 223 கார்களும், ஜூன் மாதம் 351 வாகனங்களும், ஜூலை மாதம் 351 வாகனங்களும், ஆகஸ்ட் மாதம் 237 வாகனங்களும், செப்டம்பர் மாதம் 215 வாகனங்களும் விற்பவனையாகியுள்ளன. மொத்தம் 1600 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

மாருதி நிறுவனத்தின் இன்விக்டோ காரை பொருத்தவரை 2.0 லிட்டர் டிஎன்ஜிஏ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஹைபிரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் இசிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.இந்த கார் 183 எச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனை அப்டேட் செய்துள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 9.5 நொடிகளில் பிக்கப் செய்ய முடியும்.
இந்த கார் லிட்டருக்க 23.24 கி.மீ மைலேஜை தருகிறது.இந்த கார் டொயோட்டா இன்னோவா கார் போலவே 7 சீட்டர் காராக விற்பவனையாகி வருகிறது. இந்த காரில் ஸ்லீக்கான எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஆர்எல், குரோம் பொருத்தப்பட்ட ஹேக்ஸகோனல் கிரில், அகலமான ஏர் டிரம், சில்வர் ஸ்கிட் பிளேட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

இந்த காரில் டுயல் டோன் டேஷ் போர்டு, பவர்வு ஓட்டோமேன் சீட்டுகள், லெதர் மூலம் ஃபினிஷ் செய்யப்பட்ட உட்புறம், பானரோமிக் சன்ரூஃப், பானரோமிக் சன்ரூஃப், மல்டி ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், மல்டி ஃபங்சன் ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் பின்பக்க டெயில் கேட் ஒன் டச் பவர் டெயில் கேட்களாக உள்ளது. அதாவது ஒரு பட்டனை தொட்டால் போதும் பின்பக்க கதவு தானாக திறக்கும்.
இந்த காரில் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பவர் வென்டிலேட்டட் சீட்டுகள், முன்பக்க சீட் மற்றும் இரண்டாம் வரிசை சீட்கள் கேப்டன் சீட்களாக வழங்கப்பட்டுள்ளன. இது போக மடக்கி வைக்ககூடிய டேபிள், 3வது வரிசை சீட்டிற்காக ஒன் டச் வாக் இன் சீட்கள், மல்டி ஸோன் டெம்பரேச்சர் கண்ட்ரோல், ஆகிய அம்சங்கள் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி-டொயோட்டா ஆகிய நிறுவனங்களுடன் இருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இன்னோவா காரை அடிப்படையாக கொண்டுஇந்த இன்விக்டோ கார் தயாரிக்கப்படுகிறது. இந்த விலை அதிகமாக இருப்பதால் மக்கள் அதிகம் இந்த வாகனத்தை வாங்க விரும்பவில்லை. இதனால் விற்பனை குறைவாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









