இந்தியாவில் யாருமே வாங்கல! வெளிநாட்டுகாரங்களுக்கு தான் இந்த காரோட மவுசு தெரியுது!

இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டு மத்தியில் மாருதி நிறுவனம் தனது ஜிம்னி காரை விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த கார் விற்பனைக்கு வந்தது. முதல் இந்தியாவில் விற்பனையாகிறதோ இல்லையோ வெளிநாட்டிற்கு அதிக அளவில் ஏற்றுமதியாகி வருகிறது. இந்த ஆஃப்ரோடர் கார் இந்தியாவிலும் அதிக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளிநாட்டில் விற்பனை அதிகரித்துள்ளது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் மஹிந்திரா தார் காருக்கு போட்டியாக மாருதி நிறுவனம் ஜிம்னி என்ற 5 டோர் கொண்ட ஒரு ஆஃப்ரோடு ஸ்டைல் ஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டு வந்தது. இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகும் போது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மஹிந்திராவின் தார் காருக்கு போட்டியாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் இந்த கார் போதுமான அளவு விற்பனையாகவில்லை.

Maruti Jimny Export

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் வெளிநாட்டிற்கு இந்த கார் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் சுமார் 2 ஆண்டுகளில் சமீபத்தில் இந்த கார் 1 லட்சம் கார்கள் ஏற்றுமதி என்ற மைல் கல்லை கடந்துள்ளது. இதை சரியாக கணக்கிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் ஒரு ஜிம்னி கார் விற்பனையானால் 3 ஜிம்னி கார்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகிறது என சொல்லலாம். உள்நாட்டு விற்பனையில் இந்த காரின் விற்பனை 1 லட்சம் என்ற மைல் கல்லை எட்டி பிடிக்கவில்லை.

ஜிம்னி கார் மாருதி நிறுவனம் குர்கான் பகுதியில் நடந்தி வரும் ஆலையில் தான் தாயாரிக்கப்படுகிறது. இந்த கார் உலகம் முழுவதும் உள்ள 100 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. முக்கியமாக லத்தின் அமெரிக்கா, ஆப்ரிக்கா, தென் கிழக்கு ஆசிய நாடுகள் சமீபத்தில் ஜப்பானிற்கும் இந்த கார் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த கார் இந்தியாவில் 5 டோர் வெர்ஷன் காராக விற்பனையாகும் நிலையில் அதற்க முன்னரே 3 டோர் வெர்ஷன் கார் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதில் 5 டோர் வெர்ஷன் அறிமுகமானதும் விற்பனை சிறப்பாக இருக்கிறது.

Maruti Jimny Export
இதுவே இந்தியாவில் பார்த்தால் இந்த கார் விற்பனைக்கு வரும் போது புக்கிங் குவிந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை நடக்கவில்லை. இந்த காரின் அறிமுகமாத்திற்கு பிறகு மக்கள் பலர் இந்த கார் வேண்டாம் என தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டனர். இதற்கு இந்தகாரில் குறை என்று எல்லாம் சொல்லிவிட முடியாது. இந்த காரின் வடிவமைப்பு இந்திய மக்களுக்கு ஏற்றவாறு இல்லை.

மாருதி நிறுவனம் இந்த காரை 4X4 எஸ்யூவி காராக மட்டுமே வடிவமைத்தது. அதற்கான அம்சங்கள் மற்றும் வடிவமைப்பை மட்டுமே செய்தது. இந்தியாவில் வெறும் 4X4 அம்சத்தை மட்டும் தேடும் வாடிக்கையாளர்கள் வெகு குறைவு தான். இந்த விலை செக்மெண்டில் மக்கள் ஒரு ரக்கட் லுக்கில் ஒரு காரை தேடினார்கள். இ்நத கார் சாலைக்கு வரும் போது மக்கள் எதிர்பார்த்த ரக்கட் லுக் இல்லை. மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் ரக்கட் லுக் காரணமாவே சிறப்பாக விற்பனையாகிறது. அந்த இடத்தில் தான் மாருதி இதை தவறவிட்டுவிட்டது என சொல்லலாம்.

Maruti Jimny Export

மாருதி ஜிம்னி காரை பொருத்தவரை 1.5லிட்டர் கே15பி பெட்ரோலன் இன்ஜினை பொருத்தியுள்ளது. இது 4 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் பொருத்தியுள்ளது. இதுவும் சற்று ஏமாற்றத்தை மக்களுக்கு கெடுத்துள்ளது. இந்த கார் ரூ13 முதல் ரூ15 லட்சம் என்ற விலையில் விற்பனையாகும் நிலையில் மார்கெட்டில் இதே விலையில் நல்ல இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொண்ட கார்கள் விற்பனையாகும் நிலையில் மக்கள்அதை தான் நல்ல தேர்வாக பார்க்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் மக்கள் மன நிலை, அந்த காட்டில் உள்ள ஜியோகிரஃபிக் கண்டிஷன்களை வைத்து தான் மக்கள் தேவை உருவாகிறது. இந்த கார் இந்தியாவில் பெரிய அளவில் விற்பனையாகாவிட்டாலும் வெளிநாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் காரின் லுக்கை சற்று ரக்கட் லுக்காக மாற்றினாலே விற்பனை அதிகமாகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 19, 2025, 7:21 [IST]
English summary
Maruti jimny export hits 1 lakh units global demand surges
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X