மாருதி சேல்ஸ் இப்படி படுத்துக்கிச்சே! எல்லாரும் வேற கம்பெனி பார்த்து போக ஆரம்பிச்சுட்டாங்களா?

மாருதி நிறுவனம் கடந்த மே மாத விற்பனையில் மொத்தம் 1,35,962 கார்களை விற்பனை செய்துள்ளது. இது ஒட்டு மொத்த இந்தியாவில் நடந்த விற்பனையாகும். கடந்தாண்டு இதே கால கட்டத்தில் எவ்வளவு வாகனங்கள் விற்பனையானதோ அதை விட தற்போது விற்பனை சரிவடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத விற்பனையை ஒப்பிடும் போது 2 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்துள்ளது. இதில் ஒவ்வாரு மாடலும் எவ்வளவு விற்பனையாகியுள்ளது என்ற விபரங்களை பாரப்போம்.

இந்த பட்டிலயில் முதலிடத்தில் இருப்பது டிசையர் கார் தான் கடந்த மே மாதம் மட்டும் மொத்தம் 18,804 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 16,061 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. அடுத்த இடத்தில் எர்டிகா கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மே மாதம் மொத்தம் 16140 வாகனங்களை விற்பனை செய்துள்ளனர். இதுவே கடந்த 2024ம் ஆண்டு மாதம் 13,893 கார்கள் விற்பனையாகியிருந்தது விற்பனை 16 சதவீதம் உயர்ந்துள்ளது

Maruti May 2025 Sales

இந்த பட்டிலயில் 3வது இடத்தில் பிரெஸ்ஸா கார் இருக்கிறது. கடந்த மே மாதம் 15,566 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 14.186 கார்ள் விற்பனையாகியுள்ளது. இந்த காரின் விற்பனை10 சதவீதம் உயர்த்துள்ளது. 4வது இடத்தில் மாருதி ஸ்விஃப்ட் கார் இருக்கிறது. கட்நத மே மாதம் 14,135 கார்கள் விற்பனையாகியுள்ளன. இவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 19393 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த காரின் விற்பனை 27 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இந்த பட்டியலில் 5வது இடத்தில் வேகன் ஆர் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மே மாதம் 13949 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 14492 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 4 சதவீதம் சரிவடைந்துள்ளது. 6வது இடத்தில் ஃபிராங்க்ஸ் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மே மாதம் 13584 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 12,681 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த கார் 7 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றள்ளது.

Maruti May 2025 Sales

இந்த பட்டியலில் 7வது இடத்தில் ஈக்கோ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மே மாதம் 12,327 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 10,960 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை12 சதவீதம் உயர்ந்துளள்ளது. 8வது இடத்தில் பலேனோ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மே மாதம் 11,618 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 12,681 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த கார் 10 சதவீத விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த பட்டியலில் 9வது இடத்தில் கிராண்ட் விட்டாரா கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மே மாதம் 5197 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 9736 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 47 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 10வது இடத்தில் ஆல்டோ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மே மாதம் 4970 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 7675 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த கார் 35சதவீத விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

Maruti May 2025 Sales

இந்த பட்டியலில் 11வது இடத்தில் எக்ஸ்எல் 6 கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மே மாதம் 3507 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 3241 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 8 சதவீதம் உயர்ந்துள்ளது. 12வது இடத்தில் செலிரியோ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மே மாதம் 1861 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 3314 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த கார் 44 சதவீத விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த பட்டியலில் 13வது இடத்தில் இக்னீஷ் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மே மாதம் 1855 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 2104 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 12 சதவீதம் குறைந்துள்ளது. 14வது இடத்தில் எஸ்-பிரஸ்ஸோ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மே மாதம் 1806 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 2,227 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த கார் 19 சதவீத விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

Maruti May 2025 Sales

இந்த பட்டியலில் 15வது இடத்தில் சியாஸ் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மே மாதம் 458 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 730 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 37 சதவீதம் குறைந்துள்ளது. 16வது இடத்தில் ஜிம்னி கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மே மாதம் 682 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 274 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த கார் 149 சதவீத விற்பனை அதிகரித்துள்ளது.

இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இன்விக்டோ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மே மாதம் 223 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 193 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த கார் விற்பனை ஒட்டுமொத்தமாக ஒரளவிற்கு சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி நிறுவனம் தான் அதிகமான வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனம் விற்பனையில் ஒரளவிற்கு சரிவை சந்தித்திருந்தாலும் அடுத்தடுத்து இந்தியாவில் பண்டிகை காலங்கள் துவங்குவதால் இந்தியாவில் வாகன விற்பனை கணிசமாக அதிகரிக்க துவங்கும் என நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 12, 2025, 13:15 [IST]
English summary
Maruti may 2025 sales analysis dzire ertiga brezza baleno
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X