4 நாளில் 80,000 பேர் இந்த காரை வாங்கிட்டாங்க! விலை கம்மின்னு சொன்னதும் எல்லாரும் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க!

நவராத்திரி முதல் நாளில் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட நிலையில் முதல் 4 நாட்களிலேயே 80,000 கார்களை விற்பனை செய்து மாருதி நிறுவனம் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைந்த நிலையில் வாகன விலை குறைந்தததால் அதற்கு மக்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மத்திய அரசு கடந்த 22ம் தேதி அதாவது நவராத்திரியின் முதல் நாள் முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி வரியில் மாற்றத்தை அமலுக்கு கொண்டு வந்தது.அதன்படி சிறிய கார்கள் எல்லாம் 28 சதவீதத்திற்கு பதிலாக 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இதனால் வாகனங்களின் விலை கணிசமாக குறைந்தது. இதனால் புதிதாக கார் வாங்க நினைத்த பலர் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு கார் வாங்க முடிவு செய்தனர்.

Maruti Navratiri Sale

இந்நிலையில் ஜிஎஸ்டி வரி குறைந்த முதல் நாளே மாருதி நிறுவனம் 30,000 கார்களை விற்பனை செய்ததாக அறிவித்தது. இந்நிலையில் தொடர்ந்து கார்களை வாங்க மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து விற்பனை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் சமீப நாட்களில் புதிய கார்களின் விற்பனை தாறுமாறாக அதிகரித்துள்ளது.

இதுரை 75,000 கார்கள் விற்பனையாகியுள்ள நிலையில் இன்று 80,000 கார்கள் வரை விற்பனவை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 நாட்களில் 80,000 கார்களை மாருதி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. பொதுவாக ஒரு நாளுக்கு 40,000-45,000 பேர் கார்களை வாங்க ஷோரூம்களின் விசாரணை செய்வார்கள் எனவும் தற்போது இது 80 ஆயிரமாக அதிரித்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Maruti Navratiri Sale

இது மட்டுமல்ல தினமும் 18,000 பேர் கார்களை புக் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக என்டரிலெவல் செக்மெண்டில் தான் விற்பனை அதிகமாக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 50 சதவீதம் வரை விற்பனை அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சிறு நகரங்களில் டாப் 100 நகரங்களில் பட்டியிலில் இல்லாத சிறிய நரங்களில் இந்த ரக கார்கள் அதிகம் விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரெஸ்ஸா, டிசையர், பலேனோ ஆகிய கார்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது புக்கிங் வேகமாக அதிரித்துவரும் நிலையில் மாருதி நிறுவனம் சில பிரபலமான வேரியன்ட்களின் ஸ்டாக்குகள் விரைவில் தீர்ந்து போகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Maruti Navratiri Sale

இதனால் மக்கள் பலர் தற்போது கார் வாங்கும் எண்ணத்தில் யோசித்துக்கொண்டிருந்தால் உடனடியாக புக்கிங் செய்ய இதை சொல்லியுள்ளனர். அவர்கள் காலதாமதம் செய்தால் வாகனம் கடைப்பது காலதாமதம் ஆகலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் பலர் தற்போதே புக்கிங் செய்த காரை டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளனர்.

தற்போது மாருதி நிறுவனம் இந்த நவராத்திரிக்கும் முடிந்தளவிற்க வாகனங்களை டெலவரி செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.இதனால் ஃபைனான்ஸ் நிறுவனங்கள், டெலிவரிக்கான தயாரிப்பு டீம் என ஒரு ஷோரூமில் நடக்க வேண்டிய விஷயங்களை எல்லாம் முன்னரே ஏற்பாடு செய்து வைத்திருந்தது. தற்போது டைம் ஸ்லாட் ஷெட்யூட் செய்து டெலிவரியை செய்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மாதம் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்பார்த்ததால் அனைத்திற்கும் தயாராக இருந்தனர். இதனால் தற்போது விற்பனை சீராக நடக்கிறது. இந்தியா ஏற்கனேவ வாகன விற்பனையில் உலகின் மூன்றாவது பெரிய மார்கெட்டாக மாறியுள்ள நிலையில் இந்த நடவடிக்கையால் மார்கெட் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, September 26, 2025, 18:55 [IST]
English summary
Maruti navratri sales cross 80000 units in 4 days
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X