இனி மாருதி கார்களில் பாதுகாப்பு கிடையாதுனு சொல்ல முடியாது.. எல்லா கார்களிலும் ஆறு ஏர்பேக்குகளை வழங்க போறாங்க!

பயணிகளின் பாதுகாப்பு விஷயத்தில் முக்கியத்துவம் காட்டும் பணியில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் தன்னுடைய விலை குறைவான கார் மாடல்கள் சிலவற்றில் 6 ஏர்பேக்குகளை அது கட்டாயமாக்கியது. அந்தவகையில், மாருதி சுஸுகி வேகன்ஆர் (Wagon R), ஈகோ (Eco), ஆல்டோ கே10 (Alto K10) மற்றும் ஸ்விஃப்ட் (Swift) உள்ளிட்ட கார் மாடல்களில் அது ஆறு ஏர்பேக்குகளைக் கட்டாயமாக்கியது.

அதாவது, இந்த அனைத்து கார் மாடல்களின் ஆரம்ப நிலை வேரியண்ட் தொடங்கி உயர்நிலை வேரியண்ட் வரையில் என அனைத்திலும் 6 ஏர்பேக்குகளை அது வழங்கியது. இந்த நிலையிலேயே எஞ்சியுள்ள சில கார் மாடல்களிலும் இதே நடவடிக்கையை எடுக்க மாருதி சுஸுகி நிறுவனம் முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Maruti suzuki introduces six airbags as standard

எனவே விரைவிலேயே நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் ஆறு ஏர்பேக்குகளைக் கொண்டதாக மாறவிருக்கின்றன. இப்போதைய நிலவரப்படி எஸ்-பிரஸ்ஸோ (S-Presso), ஃப்ரான்க்ஸ் (Fronx), பலினோ (Baleno) மற்றும் இக்னிஸ் (Ignis) உள்ளிட்ட கார் மாடல்களிலேயே ஆறு ஏர்பேக்குகள் வழங்கப்படாமல் இருக்கின்றது. இவற்றிலேயே விரைவில் மாருதி சுஸுகி நிறுவனம் ஆறு ஏர்பேக்குகளை அது வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் பாதுகாப்பு விஷயத்தில் சற்றே பின் தங்கிய நிலையில் இருக்கின்றன. சொல்லப்போனால் நிறுவனத்தின் டிசையர் (Dzire) கார் மாடல் மட்டுமே பாதுகாப்பு விஷயத்தில் சிறந்த வாகனமாகக் காட்சியளிக்கின்றது. இது குளோபல் என்சிஏபி (Global NCAP) நடத்திய மோதல் ஆய்வில் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கை அது பெற்றது.

Maruti suzuki eeco

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை. இந்த கார் மாடல் இந்திய சந்தையில் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) ஆகிய ஆப்ஷன்களில் விற்பனைக்குக் ககிடைக்கின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய மற்ற தயாரிப்புகளையும் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு உகந்த வாகனமாக மாற்றும் முயற்சியில் மாருதி சுஸுகி களமிறங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

எனவே, மாருதி சுஸுகியின் குறிப்பிட்ட சில கார் மாடல்களின் விலை சற்றே உயரும் அபாயம் ஏற்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், இது பாதுகாப்பை அதிகப்படுத்தும் முயற்சியின் காரணமாக ஏற்பட இருக்கும் விலை உயர்வு என்பதால் பெரிய அளவில் இந்த விலை உயர்வு மாருதி கார்களின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தாது என நம்பப்படுகின்றது.

விலை உயர்வுகூட சில ஆயிரமாக மட்டுமே இருக்கும் என நம்பப்படுகின்றது. ஆகையால், நிறுவனத்தின் தயாரிப்புகள் 6 ஏர்பேக்குகளைப் பெற்ற பின்னரும் மலிவு விலைக் கொண்டதாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. விரைவிலேயே அதுபற்றிய தகவலும் வெளியாகிவிடும் என நம்பப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி மலிவு விலை மற்றும் அதிக மைலேஜ் ஆகியவற்றிற்கே அதிக முக்கியத்துவத்தை வழங்கி வந்தது. ஆனால், இப்போது அது அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார்களுக்கும் முக்கியத்துவம் வழங்க தொடங்க இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அது தன்னுடைய விலை குறைவான தேர்வுகளிலும் ஆறு ஏர் பேக்குகளை கட்டாயமாக்கி வரும் நிகழ்வு அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, April 28, 2025, 11:55 [IST]
English summary
Maruti plans to equip all its car models with 6 airbags as standard by the end of the financial year
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+