சோப்பு டப்பா, தகர டப்பான்னு மாருதியை கிண்டல் பண்ணவங்களுக்கு பதிலடி! இனி யாரும் அசைக்க முடியாது!
மாருதி நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களை தயாரித்து விற்பனை செய்து வந்தாலும் அந்நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பு அம்சங்கள் குறைவான இருக்கும் என் விமர்சனம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதற்கு பதிலளிக்கும் விதத்தில் மாருதி நிறுவனம் தனது வாகனங்களுக்கான கட்டாய பாதுகாப்பு அம்சங்களை அதிகப்படுத்தியுள்ளது. பிரிமியம் கார்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து கார்களுக்கும் இந்த அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மார்கெட்டில் மாருதி நிறுவனம் தான் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் பாதுகாப்பு விஷயத்தில் இந்நிறுவனம் மிகவும் பின்தங்கியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் குளோபல் என்கேப் மற்றும் பாரத் என்கேப் ஆகிய கிராஷ் டெஸ்ட் சோதனைகளில் அதிக புள்ளிகளை பெற்ற கார்களை விற்பவனை செய்து வருகின்றன.

ஆனால் மாரதி நிறுவனத்திடம் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற ஒரே கார் மாருதி டிசையர் கார் மட்டுமே விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மாருதி நிறுவனம் நெக்ஸா சேஃப்டி ஷீல்டு, அரேனா சேஃப்டி ஷீல்டு ஆகிய முக்கிய முன்னெடுப்புகளை கையில் எடுத்துள்ளது. இதன்மூலம் நெக்ஸா மற்றும் அரேனோ ஷோரூம்கள் வழியாக விற்பனைக்கு வரும் கார்களில் கட்டாயம் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற முடிவு செய்துள்ளது.
இதன்படி நெக்ஸா மற்றும் அரேனா ஆகிய சேஃப்டி ஷீல்டு பேக்கில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ஹில் ஹோல்டு அசிஸ்ட் உடன் கூடிய இஎஸ்பி, ரிவர்ஸ் பார்க்கிங் சிஸ்டம், 3 பாயிண்ட் சீட் பெல்ட் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர், ஐஎஸ்ஓ சைல்டு ஃபிக்ஸ் ஆங்கர்கள், நடந்து செல்பவர்களுக்கான மோதல் தடுப்பு சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதில் பல அம்சங்கள் பல வாகனங்களில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. இனி சில அம்சங்கள் ஏதேனும் கார்களில் இல்லாமல் இருந்தால் அதையும் அடுத்த அப்டேட்டில் கொண்டு வரமுடிவு செய்துள்ளது. சமீப காலமாக பல பாதுகாப்பு அம்சங்களை அப்டேட் செய்துள்ளது. இது நிச்சயம் வாடிக்கையார்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கலாம்.
அதே போல நெக்ஸா ஷோரூம்களில்விற்பனை செய்யப்படும் கார்களில் சில முக்கியமான அம்சங்களை புகுத்துகிறது. அதன்படி 360 டிகிரி கேமர, ஹெட்ஸ்அப் டிஸ்பிளே, ஆட்டோ ஹோல்டு உடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், முன்பக்க பார்க்கிங் அசிஸ்ட், லெவல் 2 அடாஸ் உள்ளிட்ட அம்சங்கள் இதில் பொருத்தப்படுகிறது.

மாருதி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தற்போது இருக்கும் ஒரே கெட்ட பெயர் என்றால் அது பாதுகாப்பு விஷயத்தில் இருக்கும் கெட்ட பெயர் தான் இதையும் போக்க அந்நிறுவனம் தற்போது பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனால் அந்நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பு சோதனையில் இனி நல்ல ரேட்டிங்கை வாங்கும் என எதிர்பார்க்கலாம். இது நிச்சயம் மாருதியின் விற்பனையை மேலும் அதிகரிக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி நிறுவனம் தொடர்ந்து தனது முதலிடத்தை தக்க வைக்க மார்கெட்டில் போட்டி நிறுவனங்கள் தரும் அளவிற்கு தனது தயாரிப்பை இந்நிறுவனமும் வழங்கினால் நிச்சயம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைக்க முடியும். அதே நேரம் விலையும் குறைவாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









