தப்பி பிழைத்து பார்டரை கிராஸ் செய்த மாருதி! உள்நாட்டில் விழுந்த மரண அடி!

மாருதி நிறுவனம் கடந்த ஜூலை மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்நிறுவனம் 1,37,776 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் வருடாந்திரமாகவும், மாதாந்திரமாகவும் விற்பனையை அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த ஜூன் மாதம் மாருதி நிறுவனம் 1,37,776 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு 1,37,464 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. தற்போது 313 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகி 0.23 சதவீத விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுவே கடந்த ஜூன் மாதம் 1,18,906 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. அதை ஒப்பிடும் போது 18,870 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகியிருந்தது.

Maruti Sales July 2025

மாருதிமினி செக்மெண்டில் ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ ஆகிய கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 6822 கார்களை விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 9960 கார்கள் விற்பவனையாகியிருந்தது. தற்போது இந்த செக்மெண்டில் விற்பனை குறைந்துள்ளது.

காம்பேக்ட் செக்மெண்டில் பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னீஷ், ஸ்விஃப்ட், வேகன் ஆர் ஆகிய கார்கள் விற்பனையாகி வருகிறது. இந்த செக்மெண்டில் கடந்த ஜூலை மாதம் 65,667 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் வெறும் 58,682 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இந்த செக்மெண்டில் விற்பனை அதிகரித்துள்ளது.

Maruti Sales July 2025

மிட் சைஸ் செக்மெண்டில் சியாஸ் கார் மட்டுமே விற்பனையாகி வருகிறது. கடந்த ஜூலை மாதம் வெறும் 173 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த2024ம் ஆண்டு ஜூலை மாதம் 603 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. தற்போது விற்பனை மிக அதிக அளவில் குறைந்துள்ளது.

யூட்டிலிட்டி வாகன செக்மெண்டில் பிரெஸ்ஸா, எர்டிகா, ஃபிராங்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, எக்ஸ்எல்6 ஆகிய கார்கள் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜூலை மாதம் 52,773 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 56302 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. தற்போது இதில் லேசான விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.

Maruti Sales July 2025

வேன் செக்மெண்டில் ஈக்கோ என்ற ஒரே ஒரு வாகனத்தை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மொத்தம் 12,341 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 11,916 கார்களை விற்பனை செய்திருந்தது. தற்போது விற்பனை அதிகமாகியுள்ளது.

கமர்ஷியல் வாகன செக்மெண்டில் சூப்பர் கேரி என்ற வாகனத்தை விற்பனை செய்து வருகிறது. இந்த செக்மெண்டில் 2794 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 2891 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை மொத்தம் 1,48,781 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 1,51,056 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. இது விற்பனை சரிவு தான்.

இதுவே ஏற்றுமதியை பொருத்தவரை கடந்த ஜூலை மாதம் 31,745 வாகனங்கள் ஏற்றுமதியாகியிருந்தது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் வெறும் 23985 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதியாகியிருந்தது. தற்போது ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்தமாக பார்த்தால் 1,80,526 வாகனங்கள் கடந்த ஜூலை மாதமும், 1,75,041 வாகனங்கள் கடந்தாண்டு ஜூலை மாதமும் விற்பனையாகியுள்ளது. ஒட்டு மொத்தமாக விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் கடந்த மாதம் விற்பனையில் உள்ளநாட்டில் வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் அதை ஏற்றுமதியில் சமாளித்து கிட்டத்தட்ட 300 கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளது. இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, August 1, 2025, 22:45 [IST]
English summary
Maruti sales july 2025 total sales growth yoy mom
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X