மாருதிக்கு விழுந்த மரண அடி! போன மாச விற்பனை இப்படி டல் ஆகிடுச்சே!

மாருதி நிறுவனம் கடந்த ஜூன் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இதில் இந்நிறுவனம் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது தெரிய வந்துள்ளது. மாருதி நிறுவனம் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்தாலும் கடந்தாண்டு மற்றும் கடந்த மாத விற்பனையை ஒப்பிடும் போது மிக குறைவான எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாரதி நிறுவனம் தான் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமத சேர்த்து மொத்தம் 1,67,993 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்தாண்டு ஜூன் மாதம் மற்றும் கடந்த மே மாத விற்பனையை விட குறைவாக விற்பனையாகியுள்ளது.

Maruti Sales June 2025

மாருதி நிறுவனம் கடந்தாண்டு ஜூன் மாதம் 1,37,160 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த மே மாதம் 1,35,962 வாகனங்கள் விற்பனையாகியள்ளது. கடந்தாண்டு ஜூன் மாத விற்பனையை ஒப்பிடும் போது 18,254 வாகனங்கள் குறைவாகவும், கடந்த மே மாத விற்பனையை ஒப்பிடும் போது 17,056 வாகனங்கள் குறைவாகவும் விற்பனையாகியுள்ளது. இனி ஒவ்வொரு செக்மெண்டிலும் நடந்த விற்பனையை காணலாம்.

மாருதி நிறுவனம் மினி செக்மெண்டில் ஆல்டோ மற்றம் எஸ்-பிரெஸ்ஸோ ஆகியகார்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் மொத்தம் 6414 கார்கள் விற்பனையாகியள்ளன. கடந்தாண்டுஜூன் மாதம் 9395 கார்கள் விற்பனையாகியிருந்தது. முதல் காலாண்டில் 19522 கார்கள் விற்பனையாகியிருந்தன. கடந்தாண்டு முதல் காலாண்டில் 30816 கார்ள் விற்பனையாகியிருந்தது.

Maruti Sales June 2025

காம்பேக்ட் செக்மெண்டில் பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னீஷ் ஸ்விஃப்ட் வேகன் ஆர் ஆகிய கார்கள் விற்பனையாகி வருகின்றன. இந்த செக்மெண்டில் மொத்தம் 54177 கார்கள் கடந்த ஜூன் மாதம் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் 64,049 கார்கள் விற்பனையாகியிருந்தது. கடந்த காலாண்டில் 1,77,270 கார்கள் விற்பனையானது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 1,89,208 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன.

மிட் சைஸ் செக்மெண்டல் சியாஸ் கார் மட்டுமே விற்பனையாகிறது. கடந்த ஜூன் மாதம் மொத்தம் 1028 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு ஜூன் மாதம் 572 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. கடந்த காலாண்டில் 1087 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 2169 கார்கள் விற்பனையாகியிருந்தன.

Maruti Sales June 2025

யூட்டிலிட்டி வாகனங்களை பொருத்தவரை பிரெஸ்ஸா, எர்டிகா, ஃபிராங்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, எக்ஸ்எல்6 ஆகிய வாகனங்கள் விற்பனையாகி வருகின்றன. இந்த கார்கள் கடந்த ஜூன் மாதம் 47947 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூன் மாதம் 52373 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த காலாண்டில் 1,61,868 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 1,63,130 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

வேன் செக்மெணட்டில் மாருதி நிறுவனம் ஈக்கோ என்ற வாகனத்தை மட்டுமே விற்பனை செய்கிறது. இந்த வாகனம் கடந்த ஜூன் மாதம் 9340 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு ஜூன் மாதம் 10,771 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. அதே போல கடந்த காலாண்டில் மொத்தம்33,105 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு முதல் காலாண்டில் 33791 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது.

இலகுரக கமர்ஷியல் வாகனங்களை பொருத்தவரை சூப்பர் கேரி மட்டுமே விற்பனையாகிறது. இந்த வாகனம் கடந்த ஜூன் மாதம் 2,433 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு ஜூன் மாதம் 2758 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த காலாண்டில் 8510 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 7,946 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் இந்தியாவில் அதிக அளவிலான கார்களை விற்பனை செய்து வரும் நிலையில் கடந்த ஜூன் மாதம் மிட் சைஸ் செக்மெண்டில் மட்டுமே வளர்ச்சியை பெற்றுள்ளது. மற்ற செக்மெண்டில் எல்லாம் கடும் வீழ்ச்சி தான் ஏற்பட்டுள்ளது. இது மாருதி நிறுவனத்தின் விற்பனைக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த மாதங்கள் பண்டிகை காலம் என்பதால்இதிலிருந்து மீண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 2, 2025, 11:10 [IST]
English summary
Maruti sales june 2025 yoy drops mom analysis inside
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X