தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை சர்வீஸ் சென்டரா? மாருதியின் சிதம்பர ரகசியம் இது தான்!
மாருதி நிறுவனம் இந்தாண்டு 500 புதிய சர்வீஸ் ஸ்டேஷன்களை திறக்க திட்டமிட்டுள்ளது. விற்பனைக்கு பிறகான சேவையை மேம்படுத்த இந்த சர்வீஸ் சென்டர்களை திறக்க திட்டமிட்டுள்ளது. இந்த சர்வீஸ் சென்டர்கள் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் விற்பனைக்கு பிறகான சேவையை மேம்படுத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக வாகனங்களை தயாரிக்கும் நிறுவனம் இந்த நிதியாண்டில் 500 புதிய சர்வீஸ் சென்டர்களை திறக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் விற்பனைக்கு பிறகான சேவை ஒரு நிறுவனத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை காட்டுகிறது. இந்நிறுவனம் வாடிக்கையாளர்கள் நம்பிக்கைய பெறுவதில் இவ்வளவுமுனைப்பை காட்டுகிறது.

சமீபத்தில் கோவையில் அரீனா ஷோரூமை திறந்தது மூலம் 5000-மாவது அரீனா ஷோரூமை திறந்துள்ளது. அந்த திறப்பு விழாவின் போது தான் இந்த புதிய சர்வீஸ் சென்டர் குறித்த அறிவிப்பும் வெளியானது. இந்தியாவிலேயே அதிக கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்தாலும், உண்மையான சவால் வாடிக்கையார் வாகனத்தை வாங்கிய பின்பு அவருக்கு வழங்கப்படும் சேவை தான். இதுதான் அவருக்கு அந்நிறுவனத்தின் மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தும் அடுத்த காரையும் அதே நிறுவனத்தில் வாங்க நினைப்பார்.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓ ஹிஷாஸி டேக்குஸி கூறும்போது இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு வேகமான சர்வீஸ் கிடைப்பது வானகத்தின் சிறந்த மைலேஜ் மற்றும் சிறந்த அம்சங்கள் இருக்கும் அளவிற்கு முக்கியமானது என இதன் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார். மாருதி நிறுவனம் கடந்த 2024-25ம் நிதியாண்டில் மொத்தம் 2.7 கோடி வாகனங்களை சர்வீஸ் செய்துள்ளது. ஒரே ஆண்டில்இவ்வளவு அதிக சர்வீஸ் செய்தது. இது தான் முதன் முறை.

நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டில் இந்நிறுவனம் இதுவரை இந்நிறுவனம் 1.4 கோடி வாகனங்களை சர்வீஸ் செய்துள்ளது. இந்நிறுவனம் ஆண்டு தோறும் 3 கோடி கார்களை சர்வீஸ் சென்டர்களில் கையாளுகிறது. இந்திய ஆட்டோமொபைல் துறையில் இது மிக அதிக எண்ணிக்கையாகும். இந்நிறுவனம் இந்தியாவில் உள்ள 2818 நகரங்களில் 5640 சர்வீஸ் ஸ்டேஷன்களை வைத்துள்ளது. இது நகர்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒர்க்ஷாப் மற்றும் கிராமப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள டச் பாயிண்ட்களின் எண்ணிக்கையாகும்.
இது போக மாருதி நிறுவனம் ரிமோட்டான இடங்களில் சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மட்டும் 400 சர்வீஸ் சென்டர்களை அந்நிறுவனம் வைத்துள்ளது. தமிழ்நாட்டில் மாருதி கார்களின் விற்பனை அதிக எண்ணிக்கையில் இருக்கிறது. இதனால் தமிழகத்தில் சர்வீஸ் வழங்குவது எவ்வளவு முக்கியமான தேவையான இருக்கிறது என்பதை இதன் மூலம் நாம் தெரிந்த கொள்ள முடிகிறது.

மாருதி நிறுவனம் கட்நத நிதியாண்டில் மட்டும் மொத்தம் 460 டச் பாயிண்ட்களை உருவாக்கியது. இதில் அரேனா மற்றும் நெக்ஸான ஆகிய சேனல்கள் மூலம் உருவாக்கியது பொருந்தும். இந்தாண்டு தற்போது புதிதாக 500 டச்பாயிண்ட்களை இந்த நிதியாணடிற்குள் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது இந்நிறுவனம் விற்பனைக்கு பிறகான சேவையில் எவ்வளவு கவனம் செலுத்துகிறது என்பதை இதன் மூலம் உணர முவிகிறது. புதிய நிறுவனங்களின் வருகிறது. அதிக வாகன விற்பனையை சமாளித்து வாடிக்கையாளர்கள் நம்பிக்கையை பெற இதை அந்நிறுவனம் செய்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் இந்தாண்டு 500 சர்வீஸ் சென்டர்களை திறக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 5000 சென்டர்களுக்கு மேல் உள்ள நிலையில் இதைமேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இது விற்பனைக்கு பிறகான சேவைக்கு இந்நிறுவனம் அளிக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









