60 நொடிகளில் 171 கார்கள் சர்வீஸ் பண்ணிட்டாங்க! மாருதி செய்த மிகப்பெரிய சாதனை!

மாருதி நிறுவனம் கடந்த மே மாதம் சர்வீஸிங்கில் புதிய சாதனை மைல் கல்லை பதித்துள்ளுது. அதன்படி அந்நிறுவனம் 31 நாளில் 24.5 லட்சம் வாகனங்களுக்கு சர்வீஸை வழங்கியுள்ளது. அந்நிறுனம் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் இந்தியாவில் வாகன தயாரிப்பில் நம்பர் 1 நிறுவனமாக இருக்கிறது. மற்ற நிறுவனங்களை காட்டிலும் இந்நிறுவனம் அதிகஅளவிலான வாகனங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் கடந்த மே மாதம் வாகன சர்வீஸ் பிரிவில் முக்கிய மைல் கல்லைபதித்துள்ளது. இந்நிறுவனம் அதிகமான வாகனங்களுக்கு சர்வீஸ் செய்து சாதனை படைத்துள்ளது.

Maruti Service Milestone

மாருத நிறுவனத்திற்கு இந்தியாவில் மிகப்பெரிய அளவில் சர்வீஸ் சென்டர்கள் உள்ளன. மெட்ரோ சிட்டிகள், சிறிய நகரங்கள், கிராமப்புற பகுதிகள் வரை மொத்தம் 5400 சர்வீஸ் சென்டர்களை அந்நிறுவனம் நத்தி வருகிறது. இந்த சென்டர்களில் இலவச சர்வீஸ், பணம் செலுத்து பார்க்கும் சர்வீஸ், ரிப்பேர்கள், ஸ்பேர் பார்ட்ஸ் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அங்கு செய்து வருகிறது.

கடந்த மே மாதத்தில் மட்டும் இந்தியா முழுவதும் செயல்படும் சர்வீஸ் சென்டர்களில் மொத்தமாக 24.5 லட்சம் வாகனங்களுக்கு சர்வீஸ் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு நிமிடத்திற்கு 171 கார்கள் சர்வீஸ் பார்க்கப்பட்டுள்ளது. இது மிக முக்கிமான சாதனையாக பார்க்கப்படுகிறது. இது மாருதி நிறுவனம் எந்த அளவிற்கு வேகமாக சர்வீஸ் செய்கிறது என்பதை மட்டும் காட்டவில்லை. மக்கள் மாருதி நிறுவனத்தின் மீது எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதையும் காட்டுகிறது.

Maruti Service Milestone

மாருதி நிறுவனம் 2031ம் ஆண்டிற்கும் இந்தியாவில் 8000 சர்வீஸ் சென்டர்களை திறக்க மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. மாரத நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ள நிலையில் 1000 நகரகளில் உள்ள 1500 சர்வீஸ் சென்டர்களில் எலெக்ட்ரிக் கார்களை சர்வீஸ் செய்யும் வகையில் அப்டேட் செய்யும் என தெரிவித்துள்ளது.

கார் சர்வீஸ் துறையில் மாருதி நிறுவனம் அந்த துறையிலேயே பல முக்கிய முன்னெடுப்புகளை முதலில் எடுத்த நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் தான் மொபைல் ஒர்க் ஷாக், வாடிக்கையாளர் வீட்டிற்கே சென்று காரை பிக்கப் செய்யும் சேவை, தேசிய அளவில் க்விக் ரெஸ்பான்ஸ் டீம், தேசிய அளவில் சாட்பாட் மற்றும் வாய்ஸ் பாட் மூலம் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவது உள்ளிட்வற்றை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Maruti Service Milestone

மாருதி நிறுவனம் கடந்த மே மாதம் 1.80 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு மே மாத விற்பனையை விட 3.2 சதவீதம் அதிகம் ஆகும். ஏற்றுமதியிலும் இந்நிறுவனம் கடந்த மே மாதம் 31,219 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்தாண்டு ஏற்றுமதியான 17,367 கார்களுடன் ஒப்பிடும் போது 79.8 சதவீதம் அதிகம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் ஒரே மாதத்தில் 24.5 லட்சம் கார்களுக்கு சர்வீஸ் செய்துள்ளது. இது நிச்சயம் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. மாருதி நிறுவனம் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்தற்கு இது சான்றாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 26, 2025, 23:00 [IST]
English summary
Maruti service milestone 24 5 lakh vehicles serviced in may
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X