30கிமீ மைலேஜ் தரும் 7 சீட்டர் காரை கொண்டு வரப்போகும் மாருதி! வேற ஒரு காரும் வருது!
மாருதி சுஸூகி நிறுவனம் 2 புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் மிட்-சைஸ் செக்மெண்டில் தனக்கென மிக பெரிய பங்கு பிரிப்பதற்காக இந்த கார்களை களம் இறங்குகிறது. இதன் மூலம் பல்வேறு விதமான வாடிக்கையாளர்களை கவர முடியும் என அந்நிறுவனம் நம்புகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சி வரும் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை டெல்லி வைத்து நடக்கிறது. இந்த கண்காட்சியில் ஏகப்பட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை வெளியிட தயாராக இருக்கிறார்கள். இந்தியாவின் பல முன்னணி நிறுவனங்கள் எல்லாம் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன. அங்கு வெளியாக போகும் வாகனங்கள் குறித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கண்காட்சியில் மாருதி நிறுவனம் தனது இ-விட்டாரா என்ற முதல் எலெக்ட்ரிக் காரை களம் இறங்குகிறது. இந்த கார் நேரடியாக ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா காருடன் போட்டியிடும் வகையில் களமிறங்குகிறது. இது குறித்த விளம்பரங்களை எல்லாம் அந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்த கார் கடந்த நவம்பர் மாதம் இத்தாலியில் காட்சிப்படுத்தப்பட்டது.
இத்தாலியில் காட்சிப்படுத்தப்பட்ட காரை தான் இந்திய சேவைக்கு ஏற்ப மாற்றி இந்தியாவில் இந்த காரை நிறுவனம் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதில் மக்குலரான முன் பக்க வடிவமைப்பு ஸ்டிராங்கான பக்கவாட்டு வடிவமைப்பு 19 இன்ச் அலாய் வீல் என பல முக்கிய அம்சங்கள் இருக்கிறது. இதுமட்டும் அல்லாமல் இந்த காரின் பின்பக்க கதவு ஹேண்டில்கள் மறைக்கப்பட்டதாக இருக்கிறது. இதுபோக ரேக்டு சீ பில்லர், ஷார்க் ஃபின் ஆண்டனா உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரில் உயரமான சீட்டிங் போஷிசன் இருக்கிறது. காரின் உட்பகுதியில் மாடனான க்ளீனான டேஷ்போர்டு வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோக இரண்டு ஸ்போக் கொண்ட ஸ்டேரிங் வீல் பிரிட்ஜ் வடிவிலான சென்டர் கன்சோல் உள்ளன. சர்வதேச அளவில் காட்சிப்படுத்தப்பட்ட காரில் 10.25 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும் பொருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இ-விட்டாரா கார் முன்பக்க வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆகிய இரண்டு விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு வேரியட்ங்களிலும் 128 கிலோ வாட் அதாவது 172 எச்பி பவரை வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோட்டார் ஓடுவதற்காக 49 கிலோ வாட் ஹவர் எல்எஃப்பி பேட்டரி பேக் பொருத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதுபோக கூடுதல் பேட்டரி பேக்காக 64 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கும் பொருத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஆல்வில் டிரைவரை பொறுத்தவரை கூடுதலாக 64 ஹெச்பி பவர் தரும் வகையில் மோட்டார் செட்டப் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேரியண்டில் 61 கிலோ வாட் ஹவர் தான் பொருத்தப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த காரின் ரேஞ்சை பொருத்தவரை முன்பக்க வீல் டிரைவ் வேரியன்ட் பெரிய பேட்டரி பேக்குடன் 550 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் மட்டும் அல்லாமல் மற்றொரு மிட்-சைஸ் எஸ்யூவி காரையும் மாருதி நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட திட்டமிட்டு வருகிறது. இது தற்போது விற்பனையாகி வரும் பிராண்டு விட்டாரா காரின் பெரிய வெர்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி நிறுவனம் இதை மாருதி ஒய் 17 என்ற பெயரில் அழைத்து வருகிறது. இது குறித்த ஸ்பை புகைப்படங்கள் எல்லாம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
அதன்படி பார்க்கும்போது இதன் வெளிப்புற வடிவமைப்பு தற்போது விற்பனைக்கு வரவுள்ள இ-விட்டாரா காரின் வடிவமைப்பை ஒத்து டிசைன் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இதன் உட்புற கட்டமைப்பும் சற்று மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் முக்கியமாக கூடுதலாக ஒரு வரிசை சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு பயணிகள் வரை அமர்ந்து பயணம் செய்ய முடியும்.
கிராண்ட் விட்டாரா நீட்டிக்கப்பட்ட வெர்சஷனில் தற்போது உள்ள கிராண்ட் விட்டாரா காரில் இருக்கும் அதே மைல்டு ஹை பிரிட் மற்றும் முழு ஹைபிரிட் ஆகிய சிஸ்டம் பொருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மைல்டு ஹைபிரிட் விஷத்தை பொருத்தவரை 102 ஹெச்பி பவர் மற்றும் 136.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் இதில் ஆல்வில் டிரைவ்சிஸ்டமும் இணைக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இதுவே முழு ஹைபிரட் வெர்ஷனை பொருத்தவரை 91 எச்பி பவர் மற்றும் 122 என்எம் தான் திறனை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதில் கூடுதலாக 59 கிலோ வாட் ஹவர் மற்றும் 141 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார்ஸ் பொருத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த கார் மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் ஹூண்டாய் அல்கஸார் காருடன் நேரடியாக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ம் ஆண்டு மத்தியில் இந்த கார் விற்பனைக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனம் அறிமுகப்படுத்துவது குறித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த கார் அறிமுகமான உங்களுடன் எலெக்ட்ரிக் வாகன உலகில் மிகப்பெரிய புரட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அதே நேரம் கிராண்ட் விட்டாரா காரை நீட்டிக்கப்பட்ட வெர்ஷன் முழு ஹைபிரிட் வெர்ஷனில் வரும் போது 30 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என பொருத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









