வெறும் ரூ3.5 லட்சத்திற்கு புது காரா? தீபாவளி பட்டாசு மாதிரி படபடன்னு விக்கப்போகுது?
தீபாவளி நெருங்கும் நிலையில் பலர் வாகனம் வாங்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் மாருதி நிறுவனத்தின் எஸ்பிரெஸ்ஸோ கார் பண்டிகை காலத்தில் குறைவான விலையில் அதே நேரம் கார் வாங்கும் கனவை கொண்டவர்களுக்கு கனவை நினைவாக்கும் வகையில் விற்பவனையாகி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் குறைந்த விலையில் ஆல்டோ கே10, எஸ்-பிரெஸ்ஸோ, வேகன் ஆர் ஆகிய கார்கள் விற்பனையாகி வருகிறது.இந்த கார்கள் எல்லாம் சமீபத்தில் ஜிஎஸ்டி வரி குறைப்பில் வாகன விலை அதிமாக குறைந்தது.இதில் முக்கியமான காரணம் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ கார் தான். இந்த கார் அரேனா ஷோரூம்கள் மூலம் விற்பனையாகி வருகிறது.

இந்த கார் மொத்தம் 8 வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. அதன்படி ஸ்டாண்ட்டர்டு, எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி, விஎக்ஸ் ஏஎம்டி, விஎக்ஸ்பிளஸக் , விஎக்ஸ் சிஎன்ஜி, விஎக்ஸ்ஐ பிளஸ் ஏஎம்டி ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார்களின் விலைகள் கணிசமாக குறைந்துள்ளது.
இதன்படி இந்த கார்கள் ரூ71,000 முதல் ரூ1.30 லட்சம் வரை கார்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஏஎம்டி கார்களின் விலை ரூ76,000 மற்றும் ரூ97,000 வரை விலை குறைந்துள்ளது. மேனுவல் கியர் கார்களின் விலை ரூ71,000- ரூ1.30 லட்சம் வரை குறைந்துள்ளது.

தற்போது மாருதி எஸ்-பிரெஸ்ஸோ கார் ரூ3.50லட்சத்தில் விற்பனையாகி வருகிறது. இது பேஸ் மாடல் விலை தான். இதற்கு முன்னர் பேஸ் மாடல் ரூ 4.27 லட்சத்தில் விற்பனையாகி வந்தது தற்போது விலைகுறைந்துள்ளது. அதே போல டாப் மாடல் விலை. ரூ 6.12 லட்சமாக விற்பனையாகி வந்தது. தற்போது ரூ 5.25 லட்சமாக குறைந்துள்ளது.
இதில் ஸ்டாண்டர்டு வேரியன்ட் ரூ4.27 லட்சத்தில் இருந்து ரூ3.50 லட்சமாக குறைந்துள்ளது. எல்எக்ஸ்ஐ (ஓ) வேரியன்ட் ரூ5 லட்சத்தில் இருந்து ரூ3.80 லட்சமாக குறைந்துள்ளது. விஎக்ஸ்(ஓ)வேரியன்ட் ரூ5.21லட்சத்தில் இருந்து ரூ4.30 லட்சமாக குறைந்துள்ளது. எல்எக்ஓ(ஓ) சிஎன்ஜி வேரியன்ட் ரூ5.92 லட்சத்தில் இருந்து ரூ4.62 லட்சமாக குறைந்துள்ளது. விஎக்ஸ்ஐ(ஓ) ஏஎம்டி வேரியன்ட் ரூ5.72 லட்சத்தில் இருந்து ரூ3.50 லட்சமாக குறைந்துள்ளது. விஎக்ஸ்ஐ பிளஸ்(ஓ) வேரியன்டை பொருத்தவரை ரூ5.51 லட்சமாக விற்பவனையாகி வந்தது தற்போது ரூ4.80 லட்சமாககுறைந்துள்ளது. விஎக்ஸ்ஐ(ஓ) சிஎன்ஜி வேரியன்டை பொருத்தவரை ரூ6.12 லட்சமாக இருந்தது தற்போது ரூ5.12 லட்சமாக குறைந்துள்ளது. விஎக்ஸ்ஐ பிளஸ் (ஓ) ஏஎம்டி வேரியன்ட் ரூ6.01 லட்சமாக இருந்தது. தற்போது ரூ5.25 லட்சமாக குறைந்துள்ளது.

எஸ்பிரெஸ்ஸோ காரை பொருத்தவரை இந்தியாவில் பிரபலமான காராக இருக்கிறது. வழக்கமாக இந்த மார்கெட் பெரிய அளவில் சுருங்கி வருகிறது. இதற்கிடையில் இந்த காரின் விற்பவனை அதிகமாகி வருகுிறது. இதற்கு முக்கியமான காரணம் இதன் வடிவமைப்பு மற்றும் மைலேஜ் தான். இந்தகார் அதிக பிராக்டிக்காலிட்டி அம்சம் கொண்டது.
கம்பேக்ட் சைஸில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இதன் மைலேஜூம் அதிகமாக உள்ளது. இந்த கார் சிறிய அதே நேரம் ரெகுலர் பயன்பாட்டிற்கு காரை விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். அதிக செலவில்லாமல் சிட்டிக்குள் பயணம் செய்ய ஏற்ற கார் இது. இந்த கார் கேப் ஓனர்கள் மத்தியிலும் பிரபலமான காராக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தீபாவளிக்கு பலர் புதிய கார் வாங்கும் எண்ணத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு பட்ஜெட் பிரச்சனை இருக்கும். அதை மனிதில் வைத்தால் மாருதி எஸ்பிரெஸ்ஸோ கார் நிச்சயம் அவர்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற தரமான காராக இருக்கும். இந்த காரை வாங்க ஏராளமான மக்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இந்த தீபாவளிக்கு பட்டாசு போ படபடவென இந்த கார் விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications









