26 கி.மீ மைலேஜ், 7 பேர் வரை போகலாம்! இந்த காரை பார்க்கவே ஷோரூம்ல கூட்டம் குவியப்போகுது!

2025 மாருதி எர்டிகா கார் தற்போது புதிய மாடலில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இந்த கார் தற்போது ஷோரூம்களுக்கு வந்துள்ளதாக புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் பல புதிய அப்டேட்கள் இடம்பெற்றள்ளது இந்த வீடியோ மூலம் தெரிகிறது. இந்த கார் முந்தைய மாடலை விட பெரிய காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படியாக அப்டேட் செய்யப்பட்ட கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த வீடியோவின் படி ரூஃப் பகுதியில் பொருத்தப்பட்ட மாருதி எர்டிகா காரில் புதிய ரூஃப்பில் பின்பக்கம் பொரத்தப்பட்ட ஸ்பாய்லர் இருக்கிறது. இது இந்த காரின் லுக்கை மேம்படுத்தி காட்டகிறது. புதிய எர்டிகா கார் பழைய காரை விட 40 மிமீ நீளம் அதிகமாக உள்ளது. தற்போது 4435 மிமீ அளவில் உள்ளது. இந்த காரில் புதுமையான டெயில் லைட்டுகள், புதிய டெயில் கேட், பின்பக்க குவாட்டர் பேனல் உள்ளிட்ட அம்சங்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது.

Ertiga CNG Mileage

இது போக மற்ற அம்சங்கள் எல்லாம் பழைய காரில் உள்ளதை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. முனபக்க கிரில் டிசைன், லைட்டிங் செட்டப், காரில் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்பக்கம் பாதுகாப்பிற்காக அனைத்து வேரியன்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. பழைய மாடலில் பேஸ் வேரியன்டில் 2 ஏர்பேக்குகளும், டாப் வேரியன்டில் 4 ஏர்போக்குகளும் மட்டுமே இருந்தன. தற்போது இது மேம்படுத்தப்பட்டுள்ளது.

வேரியன்ட்களை பொருத்தவரை பழைய மாடலில் உள்ள அதே எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, இசட் எக்ஸ்ஐ, இசட் எக்ஸ்ஐ+ உள்ளிட் வேரியன்ட்கள் உள்ளன. பாதுகாப்பு அப்டேட்டில் முக்கியமாக டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது. இது டாப் மாடலில் மட்டுமே கிடைக்கிறது. இந்த காரில் அனைத்து சீட்களிலும் 3 பாயிண்ட் சீட் பெல்ட் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது உள்ள மாடலில் 2வரிசை சீட்டில் லேப் பெல்ட் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Ertiga CNG Mileage

புதிய மாடல் காரின் ஏசி வென்ட் பகுதியிலும் மாற்றங்கள் உள்ளது. பழைய மாடல் காரில் 2வது மற்றும் 3 வரிசை சீட்டில் உள்ளவர்களுக்க ஏசி ரூஃப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. புதிய 2025 எர்டிகா காரில் சென்டர் கன்சோல் பின்பகுதியில் 2வரிசை சீட்டிற்கு ஏசி வென்ட் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே டைப் சி சார்ஜிங் போர்ட்களும் வழங்கப்பட்டுள்ளன.

3வது வரிசை சீட்டிற்கு ஏசி வென்ட் பக்கவாட்டில் வழங்கப்பட்டுள்ளது.இதில் ஃபேன் வேகத்தை அட்ஜெஸ்ட் செய்யும் ஆப்ஷனும் இருக்கிறது. இதற்கு கீழே டைப் 3 சார்ஜிங் போர்ட்கள் உள்ளது. ஆனால் இது டாப் வேரியன்ட்களான இசட்எக்ஸ் மறஅறம் இசட் எக்ஸ்ஐ+ ஆகிய வேரியன்ட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது வரிசை சீட்டில் ஹெட் ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.

Ertiga CNG Mileage

மற்ற அம்சங்கள் எல்லாம் பழைய மாடலில் உள்ள அதே அம்சங்கள் தான். இந்த காரின் உள்ள 7 இன்ச் இன்ஃபோடெயின்மெட் ஸ்கிரீன், ஆர்கேம்ஸ் பிரிமியம் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, எம்ஐடி கலர் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஹோல்டு, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், பின்பக்க பார்க்கிங் சென்சார், பின்பக்க பார்க்கிங் கேமரா, சென்ட்ரல் லாக்கிங், டாப் வேரியன்ட் மாடலில் சுஸூகி கனெக்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இந்த காரின் இன்ஜின் அதே பழைய மாடலில் உள்ள ஆப்ஷனே வழங்கப்பட்டுள்ளது. இதில் 1.5 லிட்டர் கே15 சி ஸ்மார்ட் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 103 பிஎஸ் பவரையும், 139 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்ப்டு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களி்ல கிடைக்கிறது.

இந்த காரில் சிஎன்ஜி வெர்ஷன் வேறு விற்பவனையில் உள்ளது. சிஎன்ஜியில் இந்த கார் இயங்கும் போது 87 பிஎஸ் பவரையும், 121.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர் ஆப்ஷனவ் உடன் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இந்த கார் சிஎன்ஜியில் ஒரு கிலோக்கு 26.11 கி.மீ மைலேஜ் தரும் என தெரவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குடும்பங்களுடன் பயணிக்கும் காரை களம் இறக்கும் நிலையில் இந்த எர்டிகா கார் மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்று விற்பனையாகி வருகிறது. இந்த கார் அப்டேட் செய்யப்பட்டால் விற்பனவை மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 20, 2025, 14:45 [IST]
English summary
Maruti suzuki 2025 new ertiga reached showroom watch video
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X