25 வருஷமா யூஸ் பண்ணுற அந்த ஓனரை பார்த்தே ஆகனும்!! மாருதி காரை சரியா வெச்சிக்கிட்டா உசுரையே கொடுக்கும்!
மாருதி 800 (Maruti 800) காரை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவுக்கு 1980, 90 சமயங்களில் இந்தியா முழுக்க மிக பிரபலமாக இருந்த கார். கடந்த பல தசாப்தங்களாக விற்பனையில் ஆதிக்கம் செலுத்திவந்த இந்துஸ்தான் அம்பாசடாருக்கு (Hindustan Ambassador) முடிவுரை எழுதியது மட்டுமில்லாமல், இப்போது இன்றைய கால மாடர்ன் உலகிலும் மாருதி 800 கார் வேறு உருவத்தில் தொடர்ந்து விற்பனையில் இருப்பதுதான் இதில் ஆச்சிரியமான விஷயம் ஆகும். மாருதி 800 காரின் பெயரில் உள்ள 800 என்பது அதில் பொருத்தப்படும் 800சிசி பெட்ரோல் என்ஜினை குறிக்கிறது.
கார்கள் என்றாலே லாரிகளுக்கு இணையாக பவர்ஃபுல்லான என்ஜினில்தான் இயங்கக்கூடியவை என்கிற நிலைமையை மாற்றி, அப்படியெல்லாம் இல்லை பைக் என்ஜின்களை காட்டிலும் சற்று பெரியதான என்ஜினிலேயே இயங்க வைக்க முடியும், அதன் மூலம் குறைந்த விலையில் காரை உருவாக்கி எல்லாராலும் வாங்க வைக்க முடியும் என யோசித்து அதனை மாருதி சுஸுகி நிறுவனம் நிகழ்த்தியும் காட்டியது.
அதற்கு மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு கிடைத்த வெற்றியாகவே இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக மாருதி சுஸுகி முதலிட அரியணையில் உள்ளது. மாருதி 800 காரின் அமோக வெற்றிக்கு பின், அந்த காரின் என்ஜினின் அளவை பெரியதாக்க மாருதி சுஸுகி முடிவு செய்தது. அதன்படி, 1000சிசி பெட்ரோல் என்ஜினை அறிமுகம் செய்தது.
இது காரின் பெயருக்கு பொருந்தாமல் போவதால், மாருதி 800 காரின் பெயர், மாருதி ஆல்டோ (Alto) என மாற்றப்பட்டது. அதுதான், மிக நீண்ட வருட ஆல்டோ கார்கள் வரலாற்றிற்கான ஆரம்பமாக அமைந்தது. சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் 2000 செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் தலைமுறை மாருதி ஆல்டோ காரை இங்கு ஒருவர் இப்போதும் பயன்படுத்தி வருகிறார்.
அதுவும் கண்ணை கவரக்கூடிய மஞ்சள் நிறத்தில். இந்த மஞ்சள் நிறத்தை சமீபத்தில்தான் இந்த நபர் தனது இந்த 25 வருட பழைய ஆல்டோ காருக்கு வழங்கியுள்ளார். மேலும், புதிய பெயிண்ட் உடன் சேர்த்து காரில் பல்வேறு மாடிஃபிகேஷன்களும் புதியதாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், 25 வருட பழைய கார் என்பதை மறக்கடிக்கும் அளவிற்கு பார்ப்பதற்கு பளபளப்பானதாக கார் காட்சியளிக்கிறது.
இந்த குறிப்பிட்ட ஆல்டோ காருக்கு அதன் உரிமையாளர் 'ஆல்டோ ஸ்போர்ட்' என பெயர் வைத்துள்ளார். இந்த மாடிஃபை செய்யப்பட்ட ஆல்டோ கார் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காட்சித்தருபவர், காரின் உரிமையாளர் கிடையாது. இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ள மஞ்சள் நிறமானது, 'கனாரி மஞ்சள்' (Canary Yellow) என அழைக்கப்படுகிறது.
இந்த பிரத்யேகமான மஞ்சள் நிறத்தில் இந்த ஆல்டோ காரில் நீங்கள் பார்க்கும் 13-இன்ச் அலாய் சக்கரங்கள் ஆல்டோ கார்களில் பொருத்தப்படுபவை கிடையாது. இந்த சக்கரங்களை 2000ஆம் காலக்கட்டத்தில் விற்பனையில் இருந்த பழைய ஜென்ரேஷன் பலேனோ செடான் (Baleno Sedan) காரில் இருந்து எடுத்து பொருத்தியுள்ளனர்.
அதேபோல், முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையே காரின் பக்கவாட்டின் அடிப்பகுதியில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள பேனல்கள் 10 வருடங்களுக்கு முன்பு வரையில் விற்பனையில் இருந்த மாருதி சுஸுகி ஸ்டிங்ரே (Stingray) காரில் இருந்து பெறப்பட்டுள்ளது. காரின் பின்பக்கத்தில் ஸ்பாய்லர் (Spoiler), இன்றைய கால ஆல்டோ கே10 காரில் இருந்து பெறப்பட்டுள்ளது. ஆல்டோ கார் 800சிசி என்ஜின் உடனும் விற்பனை செய்யப்பட்டது. இந்த காரில் இப்போது இருப்பதும் அதே பழைய 800சிசி என்ஜின் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 25 வருடங்களாக அதே என்ஜின் பயன்படுத்தப்பட்டு வருவதில் இருந்து மாருதி சுஸுகி தயாரிப்பின் தரத்தையும், இந்த காரை பயன்படுத்தி வருபவரின் கவனிப்பையும் அறிய முடிகிறது. 25 வருடங்களாகி விட்ட போதிலும், மறுபடியும் கார் சர்வீஸ் செய்யப்பட்டுள்ளதால், இன்னும் சில வருடங்களுக்கு இந்த காரை தொடர்ந்து பயன்படுத்த இதன் உரிமையாளர் திட்டமிட்டுள்ளார் என்பதையும் அறிய முடிகிறது. ஆனால், 15 வருடங்களுக்கு மேல் பழைய காரை பயன்படுத்த வேண்டாம் என்பது மத்திய அரசின் பரிந்துரைப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications










