34 கிமீ மைலேஜ்! புதிய விலை வெறும் 3.70 லட்சம்தான்! இனி ஓட்டி பழகறதுக்கு கூட புது காரை வாங்கலாமாட்ட இருக்கு!
ஜிஎஸ்டி (GST) வரிகளை மத்திய அரசு சமீபத்தில் குறைத்தது. புதிய ஜிஎஸ்டி வரிகள் வரும் செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளன. ஜிஎஸ்டி வரிகளை மத்திய அரசு பெரும் அளவில் குறைத்திருப்பதால், பல்வேறு பொருட்களின் விலை குறையவுள்ளது. இதில், கார்களின் விலையும் அடங்கும்.
ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வர இன்னும் சரியாக 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கார்களின் விலை எவ்வளவு குறையவுள்ளது? என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றன. இந்த வரிசையில் நாட்டின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனமும் தங்களது கார்களின் விலை எவ்வளவு குறைகிறது? என்பதை அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்த செய்தியில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) காரின் விலை எவ்வளவு குறைகிறது? என்பதை பார்க்கலாம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.23 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
ஆனால் காடிவாடி தளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி பார்த்தால், இனி மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 3.70 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கும். அதாவது மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 53 ஆயிரம் ரூபாய் குறைகிறது.

ஆனால் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை எவ்வளவு குறைகிறது? என்ற தகவல் மட்டுமே நமக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்துள்ளது. இந்த காரின் எஞ்சிய வேரியண்ட்களின் அதிகாரப்பூர்வமான புதிய விலை பட்டியல் இன்னும் கிடைக்கவில்லை.
இருப்பினும் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விலை அதிகபட்சமாக 1,07,600 ரூபாய் வரை குறையவுள்ளதாக காடிவாடி தளம் கூறியுள்ளது. எனவே மற்ற வேரியண்ட்களின் விலையும், வெகுவாக குறையும் என நாம் உறுதியாக நம்பலாம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் டாப் வேரியண்ட்டின் விலை 6.21 லட்ச ரூபாயாக உள்ளது.
அனேகமாக இந்த வேரியண்ட்டின் விலைதான் 1,07,600 ரூபாய் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதை உறுதி செய்ய வேரியண்ட் வாரியான முழு அதிகாரப்பூர்வ விலை பட்டியல் வெளியாகும் வரை நாம் காத்திருப்பது சிறந்தது. இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள விலைகள் அனைத்து எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் மிகவும் விலை குறைவானது என்பதுடன், அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாகவும் உள்ளது. ஆல்டோ கே10 காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு அதிகபட்சமாக 33.40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது என மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பொதுவாக முதல் முறையாக கார் வாங்குபவர்கள் யூஸ்டு கார்களைதான் பெரும்பாலும் வாங்குவார்கள். ஆனால் தற்போது விலை வெகுவாக குறைக்கப்பட்டுள்ள காரணத்தால், முதல் முறையாக கார் வாங்குபவர்கள் புத்தம் புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரை கூட வாங்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.
விலை மிகவும் குறைவு என்பதுடன், அதிக மைலேஜ் தரக்கூடியதாக உள்ளது என்பது மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் ஆகும். இது போன்ற காரணங்களால், இனி வரும் மாதங்களில், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.


Click it and Unblock the Notifications








