6 ஏர்பேக்கோட 34 கிமீ மைலேஜை வாரி வழங்கும் கார்! வெறும் 4 லட்சம்தானா! அடிமாட்டு விலையில் விக்கறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு புதிய காரை வாங்க வேண்டும் என்றால், அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காராகதான் (Maruti Suzuki Alto K10) இருக்கும். இது விலை குறைவான கார் என்பதுடன், அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய ஒன்றாகவும் இருக்கிறது. இருப்பினும் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விற்பனை மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இது தெரிய வந்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9,043 ஆல்டோ கே10 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது,நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம், வெறும் 5,606 ஆக சரிவடைந்துள்ளது. இது 38 சதவீத வீழ்ச்சி ஆகும்.

Maruti Suzuki Alto K10

இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில் (Top 10 Hatchbacks), மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காருக்கு, 5வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் முதல் 3 இடங்களையும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள்தான் பிடித்துள்ளன.

அவை முறையே மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift), மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) மற்றும் மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) ஆகியவை ஆகும். 4வது இடத்தில் டாடா டியாகோ (Tata Tiago) இருக்கிறது. இந்த வரிசையில் 5வது இடத்தை மாருதி சுஸுகி ஆல்டோ கே10 பிடித்துள்ளது.

Maruti Alto K10

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரானது, கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டால் மட்டுமல்லாது, நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டாலும், விற்பனையில் கடுமையான வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 9,867 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 5,606 ஆக சரிவடைந்துள்ளது. இந்த வகையில் பார்த்தால், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார், 43.18 சதவீத வீழ்ச்சி ஆகும். இந்தியாவில் தற்போது மிகவும் விலை குறைவான ஹேட்ச்பேக் ரக கார்களை வாங்குவதை பலரும் தவிர்க்க தொடங்கியுள்ளனர்.

அதற்கு பதிலாக சற்று விலை உயர்ந்த எஸ்யூவி ரக கார்களை வாங்குவதில் இந்திய வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் வீழ்ச்சிக்கு, இந்த 'டிரெண்ட்' மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் (STD (O)) விலை வெறும் 4.23 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் (VXI (O) CNG) விலையும் கூட வெறும் 6.21 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி மாருதி சுஸுகி ஆல்டோ கே10 விலை குறைவானது மட்டுமல்ல. கூடவே நல்ல மைலேஜூம் வழங்க கூடியது. இந்த காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.39 கிலோ மீட்டர் மைலேஜையும், பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.90 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்குகின்றன.

இவையே நல்ல மைலேஜ்தான். எனினும் இன்னும் அதிக மைலேஜ் வேண்டும் என நீங்கள் விரும்பினால், சிஎன்ஜி வேரியண்ட்களை தேர்வு செய்யலாம். ஏனெனில் அவை ஒரு கிலோவிற்கு 33.40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன. இவை அனைத்தும் அராய் மைலேஜ் (ARAI Mileage) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Take a Poll

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் முன்பு பாதுகாப்பு இல்லாதது என விமர்சிக்கப்பட்டது. இந்த குறையை போக்கும் வகையில், ஆல்டோ கே10 காரின், ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை, அனைத்து வேரியண்ட்களிலும், மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்டாக வழங்க தொடங்கியுள்ளது.

இந்த மிக முக்கியமான அப்டேட் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விற்பனை எண்ணிக்கையை உயர்த்த உதவுமா? என்பதை நாம் கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் (Renault Kwid) மற்றும் டாடா டியாகோ போன்ற கார்களுக்கு எல்லாம் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 20, 2025, 12:33 [IST]
English summary
Maruti suzuki alto k10 sales report april 2025 43 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+