வெறும் 4 லட்சத்துக்கு புது காரா! 34 கிமீ மைலேஜ் தருது! டாக்ஸில போறதுக்கு பதில் பேசாம இதை சொந்தமா வாங்கீரலாம்!

இந்திய வாடிக்கையாளர்கள் பொதுவாக மிகவும் குறைவான விலையில் (Price) கிடைக்கும் கார்களை வாங்குவதற்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். கூடவே நல்ல மைலேஜ் (Mileage)தருகிறதா? என்பதையும் பார்ப்பார்கள். பெரும்பாலும் ஹேட்ச்பேக் ரக கார்கள்தான் (Hatchback Cars), வாடிக்கையாளர்களின் இந்த 2 எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும்.

ஆனால் சமீப காலமாக இந்தியாவை சேர்ந்த கார் வாடிக்கையாளர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக மிகவும் குறைவான விலையில் கிடைக்கும், அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஹேட்ச்பேக் ரக கார்களின் விற்பனை, இந்திய சந்தையில் சரிவை சந்திக்க தொடங்கியுள்ளது.

Maruti Suzuki Alto K10 Interior

இதற்கு மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) ஒரு உதாரணம். நடப்பு 2025ம் ஆண்டின் ஜனவரி-மே வரையிலான 5 மாதங்களில், மாருதி சுஸுகி நிறுவனம், இந்திய சந்தையில் 40,336 ஆல்டோ கே10 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

நடப்பு 2025ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 11,352 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதன் பின் வந்த பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை குறைந்து வெறும் 8,541 ஆக மாறியது. அதை தொடர்ந்து வந்த மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை சற்றே உயர்ந்து 9,867 ஆக மாறியது.

Maruti Suzuki Alto K10

ஆனால் இதற்கு பிறகு, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விற்பனை எண்ணிக்கை மீண்டும் சரிவை சந்திக்க தொடங்கியது. அதாவது ஏப்ரல் மாதத்தில் 5,606 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்களும், மே மாதத்தில் 4,970 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்களும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆக மொத்தத்தில் நடப்பு 2025ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் வெறும் 40,336 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இத்தனைக்கும் இது மிகவும் குறைவான விலையில் கிடைக்க கூடிய, அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்கும் கார்களில் ஒன்றாகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.23 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. மறுபக்கம் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 6.21 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். எனவே இந்திய சந்தையில் ஒரு விலை குறைவான காரை வாங்க வேண்டும் என நினைத்தால், அவர்களுக்கு மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கிறது. அதேபோல் அதிக மைலேஜ் வேண்டும் என நினைக்க கூடியவர்களுக்கும் இது நல்ல ஆப்ஷன்தான்.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் பெட்ரோல்/மேனுவல் இன்ஜின் ஆப்ஷன் ஒரு லிட்டருக்கு 24.39 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. அதே நேரத்தில் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் இன்ஜின் ஆப்ஷன் ஒரு லிட்டருக்கு 24.90 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. இதை விட அதிக மைலேஜ் வேண்டும் என நினைத்தால், சிஎன்ஜி/மேனுவல் இன்ஜின் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

இதன் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 33.85 கிலோ மீட்டராக இருக்கிறது. இவை அனைத்தும் அராய் மைலேஜ் (ARAI Mileage) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. விலை குறைவானது மற்றும் அதிக மைலேஜ் வழங்க கூடியது என்பதுடன், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரில், ஏராளமான வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன.

இதில், ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் 6 ஏர்பேக்குகள் மிகவும் முக்கியமானதாகும். அத்துடன் 17.78 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்ற வசதிகளும் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரில் வழங்கப்படுகின்றன. இந்த வசதிகள் வேரியண்ட்களை பொறுத்து மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார், வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த ஒரு தயாரிப்பு ஆகும். ஆனால் இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது எஸ்யூவி ரக கார்களை (SUV Cars) வாங்குவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக மைக்ரோ எஸ்யூவி ரக கார்கள், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்கள் மற்றும் மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. மாருதி சுஸுகி ஆல்டோ கே10 போன்ற விலை குறைவான கார்களின் விற்பனையில் ஏற்பட்டு வரும் சரிவிற்கு, இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 3, 2025, 17:10 [IST]
English summary
Maruti suzuki alto k10 sales report january may 2025 40336 units sold
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+