34 கிமீ மைலேஜ்! வெறும் நாலே லட்சத்துக்கு புது காரா! இனி பஸ், ட்ரெயின்ல போறதுக்கு பதில் இத சொந்தமா வாங்கீரலாம்
இந்திய சந்தையில் மிகவும் விலை குறைவான ஹேட்ச்பேக் ரக கார்களின் விற்பனை தற்போது மந்தமாக உள்ளது. இதற்கு மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) காரும் விதிவிலக்கு அல்ல. இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்றாகும்.
ஆனால் சமீப காலமாகவே மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விற்பனை மந்தமாகதான் இருந்து வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதமும், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் விற்பனையில் பெரிதாக சோபிக்கவில்லை. AUTO PUNDITZ தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது நமக்கு தெரிய வந்துள்ளது.

இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் வெறும் 5,910 ஆல்டோ கே10 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 7,353 ஆக இருந்தது.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில், 1,443 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 20 சதவீத வீழ்ச்சி ஆகும். இத்தனைக்கும் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மிகவும் விலை குறைவானது ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.23 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் டிசைனை (Design) பொறுத்தவரையில், தேன்கூடு வடிவ க்ரில் அமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் வழங்கப்படுகின்றன. வசதிகளை (Features) பொறுத்தவரையில், இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் 6 ஏர்பேக்குகள் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
அத்துடன் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் வசதியும் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் ஹார்டெக்ட் பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரில், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட வசதிகளும் கொடுக்கப்படுகின்றன.
மற்ற வசதிகளை பொறுத்தவரையில், ஸ்மார்ட்போன் நேவிகேஷன் உடன் கூடிய ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளன. அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார், சில்வர், க்ரே, ரெட், ப்ளூ, கோல்டு, ஒயிட் மற்றும் பிளாக் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் (Colour Options) கிடைக்கிறது.
அத்துடன் இது சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய கார்களில் ஒன்றாகும். இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.40 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மைலேஜ் ஆகும். கிட்டத்தட்ட இதே அளவிற்கான மைலேஜ் கிடைப்பதாக இதன் உரிமையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போது விலை குறைவான ஹேட்ச்பேக் ரக கார்கள், வாடிக்கையாளர்களை பெரிதாக கவர்வதில்லை. மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் வீழ்ச்சிக்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். இருப்பினும் மிகவும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி ஆல்டோ கே10 நல்ல ஆப்ஷன்தான் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








