வெறும் நாலே லட்சம்தான்! 34 கிமீ மைலேஜை வாரி வழங்கும் இந்த கார்ல 6 ஏர்பேக் வேற இருக்கா! கண்ண மூடிட்டு வாங்கலாம்

மிகவும் குறைவான விலையில் ஒரு புதிய காரை வாங்க வேண்டும் என்றால், அனைவரின் மனதிற்கும் முதலில் நினைவிற்கு வருவது மாருதி சுஸுகி ஆல்டோ கே10தான் (Maruti Suzuki Alto K10). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த இந்த கார், வெறும் 4.23 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையிலேயே கிடைக்கிறது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 6.21 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இவ்வளவு விலை குறைவான காராக இருந்தாலும் கூட, இதில் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன.

Maruti Alto K10 Interior

அதாவது ஆரம்ப நிலை வேரியண்ட்டில் இருந்து டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும் உங்களுக்கு 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டிருக்கும். ஆல்டோ கே10 காரின் பாதுகாப்பை உயர்த்துவதற்காக மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் என்ற இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

விலை மற்றும் பாதுகாப்பில் மட்டுமின்றி, மைலேஜிலும் (Mileage) மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தி விடும். இந்த காரின் பெட்ரோல் - மேனுவல் வேரியண்ட்களின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 24.39 கிலோ மீட்டர் ஆகும். அதேசமயம் பெட்ரோல் - ஏஜிஎஸ் வேரியண்ட்களின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 24.90 கிலோ மீட்டராக இருக்கிறது.

Maruti Alto K10

இவையே சிறப்பான மைலேஜ்தான். ஆனால் இன்னும் அதிக மைலேஜ் வேண்டும் என நீங்கள் விரும்பினால், உங்களுக்கு என்றே இருக்கிறது சிஎன்ஜி வேரியண்ட்கள். மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. இவை அனைத்துமே அராய் மைலேஜ் (ARAI Mileage) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் என்ன பயன்? மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் விற்பனையில் மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நடப்பு 2025ம் ஆண்டு மே மாதத்தில் வெறும் 4,970 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கை, கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 7,675 ஆக இருந்தது.

இது 35 சதவீத வீழ்ச்சி ஆகும். கடந்த 2024ம் ஆண்டின் மே மாதத்துடன் ஒப்பிட்டால்தான் வீழ்ச்சி என்றால், நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டாலும், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 விற்பனையில் வீழ்ச்சியையே சந்தித்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5,606 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் அதன் பின்னர் வந்த மே மாதம் இந்த எண்ணிக்கை, நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, வெறும் 4,970 ஆக சரிவடைந்துள்ளது. இந்த வகையில் பார்த்தால், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விற்பனை 11.34 சதவீதம் என்கிற அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது மிகவும் விலை குறைவான சிறிய கார்களை வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டுவதில்லை. வாடிக்கையாளர்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விற்பனையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 12, 2025, 23:55 [IST]
English summary
Maruti suzuki alto k10 sales report may 2025 35 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+