34 கிமீ மைலேஜ்! வெறும் 3.70 லட்சத்துக்கு புது கார்! இதுக்கு மேலயும் வெயில், மழைல கஷ்டப்பட்டு பைக்ல போகணுமா?

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு முழுமையாக கால் நூற்றாண்டு காலம் கடந்து விட்டது. இடைப்பட்ட இந்த 25 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4.7 மில்லியன் (47 லட்சம்) மாருதி சுஸுகி ஆல்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார்களில் ஒன்று என்ற பெருமை மாருதி சுஸுகி ஆல்டோவிற்கு உண்டு. எனவே மாருதி சுஸுகி நிறுவனத்தின் வரலாற்றில் மட்டுமல்லாது, இந்திய ஆட்டோமொபைல் துறை வரலாற்றிலேயே மாருதி சுஸுகி ஆல்டோ கார் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.

Maruti Suzuki Alto K10 Interior

இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இருப்பது மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) கார் ஆகும். இதன் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் 10,600 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 7,467 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 3,133 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 41.96 சதவீத வளர்ச்சி ஆகும்.

Maruti Suzuki Alto K10

வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும் கூட, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் விற்பனையில் மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சியையே பதிவு செய்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6,210 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் அதன்பின் வந்த நவம்பர் மாதத்தில், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், 10,600 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் பார்த்தால், 4,390 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 70.69 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விலை வெறும் 3.70 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 5.45 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.39 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. அதே நேரத்தில் இந்த காரின் பெட்ரோல்/ஏஜிஎஸ் (ஆட்டோமேட்டிக்) வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.90 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன.

இன்னும் அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின், சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட்களை தேர்வு செய்யலாம். ஏனெனில் அவற்றின் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 33.40 கிலோ மீட்டராக உள்ளது. இவை மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.

மிகவும் விலை குறைவானது மற்றும் அதிக மைலேஜ் வழங்க கூடியது ஆகிய சிறப்பம்சங்களுடன், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், இபிடி உடன் ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features) மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் ரெனால்ட் க்விட் (Renault Kwid) போன்ற கார்களுக்கு எல்லாம் மாருதி சுஸுகி ஆல்டோ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. பைக்கில் இருந்து அப்டேட் ஆகி முதல் முறையாக கார் வாங்குபவர்களும், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரை பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 13, 2025, 15:08 [IST]
English summary
Maruti suzuki alto k10 sales report november 2025 70 69 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+