34 கிமீ மைலேஜ்! ஆனா விலை முழுசா 4 லட்சம் கூட இல்ல! பைக் வாங்றதுக்கு பதிலா இந்த காரை வாங்கீர வேண்டியதுதான்!
இந்தியாவில் மாருதி சுஸுகி ஆல்டோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 25 வருடங்கள் கடந்து விட்டன. இந்த கால் நூற்றாண்டு காலத்தில், பல்வேறு அப்டேட்களை மாருதி சுஸுகி ஆல்டோ பெற்று விட்டது. தற்போது விற்பனையில் இருந்து வருவது மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) ஆகும்.
இதன் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6,210 ஆல்டோ கே10 கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8,548 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 2,338 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 27 சதவீத வீழ்ச்சி ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் ஆரம்ப விலை வெறும் 3.70 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 5.45 லட்ச ரூபாயாக மட்டும்தான் இருக்கிறது. இவை மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 விலை குறைவானது என்பதுடன், அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய கார்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குறைவான விலை, நிறைவான மைலேஜ் என்ற போதிலும் கூட, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் விற்பனையில் சரிவை சந்தித்திருப்பதற்கு காரணம் இருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்கள் தற்போதெல்லாம் மிகவும் விலை குறைவான ஹேட்ச்பேக் ரக கார்களை வாங்குவதை தவிர்க்கின்றனர். அதற்கு பதில், சற்று விலை உயர்ந்த எஸ்யூவி ரக கார்களை வாங்குவதையே இந்திய வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் சரிவிற்கு இது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். விற்பனையில் சரிவை சந்தித்திருந்தாலும் கூட, குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மிகச்சிறந்த ஆப்ஷன் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகள் எல்லாம், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்கள் ஆகும். இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago) போன்ற கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








