ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த கார்! இப்ப ஷோரூம் வாசல்ல நின்னு கூவி கூவி விக்கற அளவுக்கு நிலைமை மோசமாயிருச்சு!

இந்திய சந்தையில் முன்பெல்லாம், மிகவும் விலை குறைவான மற்றும் அதிக மைலேஜ் வழங்க கூடிய கார்களின் விற்பனை சிறப்பாக இருக்கும். ஆனால் தற்போதெல்லாம் மிகவும் விலை குறைவான கார்களை வாடிக்கையாளர்கள் சீண்டுவதில்லை. அத்துடன் மைலேஜிற்கும் நிறைய பேர் முக்கியத்துவம் தருவது கிடையாது.

அதற்கு பதிலாக பிரீமியம் வசதிகள் நிரம்பிய எஸ்யூவி (SUV) ரக கார்களைதான், இந்திய வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர். இதன் காரணமாக இந்திய சந்தையில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பல்வேறு விலை குறைவான கார்களின் விற்பனை தற்போது 'டல்' அடித்து கொண்டுள்ளது.

Maruti Suzuki Alto K10 Interior

இதற்கு மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) ஒரு உதாரணம். தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார், கடந்த 2010ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆகும். ஆரம்பத்தில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விற்பனை சிறப்பாகதான் இருந்தது.

ஆனால் நாங்கள் மேலே குறிப்பிட்டது உள்பட பல்வேறு காரணங்களால், சமீப காலமாக மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விற்பனை, மிகவும் மந்தமாக உள்ளது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல. மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

Maruti Suzuki Alto K10

இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மாருதி சுஸுகி நிறுவனம் 5,434 ஆல்டோ கே10 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8,655 ஆக இருந்தது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 3,221 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 37 சதவீத வீழ்ச்சி ஆகும். இருப்பினும் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பரில் அதிகமாக விற்பனையான டாப் 10 ஹேட்ச்பேக்குகளின் பட்டியலில் (Top 10 Hatchbacks September 2025), மாருதி சுஸுகி ஆல்டோ கே10, 5வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில், முதல் 4 இடங்களில் முறையே, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், மாருதி சுஸுகி வேகன் ஆர், மாருதி சுஸுகி பலேனோ மற்றும் டாடா டியாகோ ஆகிய கார்கள் உள்ளன.

இந்த வரிசையில் 5வது இடம் பிடித்துள்ள மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் ஆரம்ப விலை தற்போதைய நிலையில் வெறும் 3.70 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 5.45 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. எனவே மிகவும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 மிகச்சிறந்த ஆப்ஷன் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார், அளவில் சிறியது என்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் எளிதாக ஓட்ட முடியும். அத்துடன் இந்த காரின் கேபின் தாராளமான இடவசதியுடன் உள்ளது. மேலும் இந்த காரின் 214 லிட்டர் பூட் ஸ்பேஸ், லக்கேஜ்களை கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும்.

அத்துடன் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளும், மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரை வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மாற்றுகின்றன. இனி வரும் மாதங்களில், இந்த காரின் விற்பனை உயருமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, October 20, 2025, 12:16 [IST]
English summary
Maruti suzuki alto k10 sales report september 2025 37 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+