பைக் வாங்குறதுக்கு பதிலா மாருதி கார் வாங்கிட்டு போய்டலாம்! 1.10 லட்ச ரூபா வரை விலையை குறைச்சிட்டாங்க!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) திட்டத்திற்கு ஏற்ப தனது கார்களின் விலைகளை குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், இதேபோல் சூப்பரான இன்னொரு விஷயத்தையும் மாருதி சுஸுகி அறிவித்துள்ளது. அவை என்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) சமீபத்தில் குறிப்பிட்ட சில பொருட்களுக்கான ஜிஎஸ்டியில் மாற்றங்களை செய்து அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, விலை குறைவான கார்களின் விலைகள் பெரிய அளவில் குறைய உள்ள நிலையில், அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனம் தனது கார்களுக்கு பண்டிகை கால சலுகைகளையும் அறிவித்துள்ளது.

maruti suzuki cars price cut

ஜிஎஸ்டி 2.0 வரிக்குறைப்பு மற்றும் பண்டிகைக் கால சலுகைகள் காரணமாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் அதிகபட்சமாக ரூ. 1.73 லட்சம் வரை விலை குறைப்பைப் பெற்றுள்ளது. சந்தை முழுவதும் கார் விலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில், மாருதி சுஸுகி அரேனா (Arena) ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான கார் மாடல்கள் குறிப்பிடத்தக்க பலன்களை அடைந்துள்ளன.

சிறிய கார்களுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டதால், பிரபலமான ஹேட்ச்பேக்குகள் (Hatchbacks), செடான்கள் (Sedans) மற்றும் காம்பாக்ட் எஸ்யூவிகள் (Compact SUVs) கவனிக்கத்தக்க அளவிற்கு மலிவாகியுள்ளன. மாருதியின் தொடக்க நிலை ஹேட்ச்பேக்கான ஆல்டோ கே10 (Alto K10) காரின் அனைத்து வகைகளும் இப்போது குறைந்த விலையில் கிடைக்கின்றன.

maruti suzuki cars price cut

உதாரணமாக, ஆல்டோ கே10 VXI+ AGS வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) முன்பு ரூ.6.09 லட்சமாக இருந்தது. தற்போது அது ரூ.5.57 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு ரூ.74,000-க்கும் அதிகமான நிகர ஆன்-ரோடு பலனை வழங்குகிறது. பண்டிகை மற்றும் எக்ஸ்சேஞ்ச் (Exchange) சலுகைகளுடன் சேர்த்து, ரூ.1.40 லட்சத்திற்கும் அதிகமான ஒட்டுமொத்தப் பலனைப் பெறலாம்.

ஆல்டோ கே10-ன் சிஎன்ஜி (CNG) வேரியண்ட்டுகளும் ரூ.1.30 லட்சத்திற்கும் அதிகமான சேமிப்பைப் பெற்றுள்ளன. மாருதியின் எஸ்-பிரஸ்ஸோ (S-Presso) காரும் ஜிஎஸ்டி 2.0-வால் கணிசமாகப் பயனடைந்துள்ளது. இந்த காரின் VXI+ AGS வேரியண்ட்டின் முந்தைய விலை ரூ.6 லட்சம், இப்போது ரூ.5.49 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சேமிப்பு மற்றும் பண்டிகைக் காலச் சலுகைகளைச் சேர்த்தால், வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட ரூ.1.34 லட்சம் வரை பலன் பெறலாம்.

maruti suzuki cars price cut

சிறிய கார் பிரிவில் அதிகம் விற்பனையாகும் வேகன் ஆர் (WagonR) மற்றும் செலிரியோ (Celerio) ஆகிய மாடல்களும் இதேபோன்ற சலுகைகளைப் பெற்றுள்ளன. வேகன் ஆர் ZXI+ AGS-ன் விலை முன்பு ரூ.7.49 லட்சமாக இருந்தது. தற்போது அது ரூ.6.85 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் ரூ.1.51 லட்சம் வரையில் பலனை மிச்சப்படுத்தலாம்.

செலிரியோ ZXI+ AGS-ன் விலை ரூ.7.37 லட்சத்திலிருந்து ரூ.6.74 லட்சமாகக் குறைந்துள்ளது. கூடுதல் பண்டிகைக் காலச் சலுகைகளுடன், வாடிக்கையாளர்கள் ரூ.1.45 லட்சம் வரை சேமிக்கலாம். ஈகோ (Eeco) மற்றும் ஸ்விஃப்ட் (Swift) போன்ற மற்ற அரீனா மாடல்களும் குறிப்பிடத்தக்க விலை குறைப்பைப் பதிவு செய்துள்ளன.

maruti suzuki cars price cut

ஈகோ 5-சீட்டர் AC வாகனம் கிட்டத்தட்ட ரூ.1.19 லட்சம் வரை மொத்தப் பலனைப் பெறுகிறது. புதிய ஸ்விஃப்ட் ZXI+ AGS ஹேட்ச்பேக் பிரிவில் ரூ.1.73 லட்சத்திற்கும் அதிகமான மிகப்பெரிய சேமிப்பை வழங்குகிறது. டிசையர் (Dzire) செடான் மற்றும் எர்டிகா (Ertiga) எம்பிவி போன்ற உயர்நிலை கார் மாடல்களும் ஜிஎஸ்டி பலனைப் பெற்றுள்ளன.

டிசையர் ZXI+ AGS-ன் விலை முன்பு ரூ.10.19 லட்சமாக இருந்தது. இப்போது அது ரூ.9.32 லட்சத்திற்கு கிடைக்கிறது. இது ரூ.1.16 லட்சத்திற்கும் அதிகமான மொத்தப் பலனை அளிக்கிறது. எம்பிவி பிரிவில் தொடர்ந்து அதிகம் விற்பனையாகும் எர்டிகா, ZXI+ ஆட்டோமேட்டிக் போன்ற உயர் வேரியண்ட்டுகளில் சுமார் ரூ.79,000 கூட்டுப் பலனை வழங்குகிறது.

Model & Variant New Price (Direct GST 2.0 Benefit) Festive + Exchange Offers Total Benefit
Alto K10 VXI+ AGS Rs. 5,57,527 (Rs. 74,312) Rs. 66,000 Rs. 1,40,312
Alto K10 CNG VXI Rs. 5,67,590 (Rs. 71,401) Rs. 61,000 Rs. 1,32,401
S-Presso VXI+ AGS Rs. 5,49,295 (Rs. 73,214) Rs. 61,000 Rs. 1,34,214
Wagon R ZXI+ AGS Rs. 6,85,589 (Rs. 81,783) Rs. 70,000 Rs. 1,51,783
Celerio ZXI+ AGS Rs. 6,74,155 (Rs. 80,419) Rs. 65,000 Rs. 1,45,419
Eeco 5 STR AC Rs. 5,53,869 (Rs. 73,824) Rs. 45,000 Rs. 1,18,824
Swift ZXI+ AGS Rs. 8,68,535 (Rs. 1,03,606) Rs. 70,000 Rs. 1,73,606
Dzire ZXI+ AGS Rs. 9,32,109 (Rs. 1,11,190) Rs. 5,000 Rs. 1,16,190
Ertiga ZXI+ 1.5L AT Rs. 12,94,276 (Rs. 71,925) Rs. 7,500 Rs. 79,425
Brezza ZXI+ 1.5L AT Rs. 13,49,793 (Rs. 75,010) Rs. 55,000 Rs. 1,20,010

சமீபத்திய ஆண்டுகளில் மாருதியில் அதிகம் விற்பனையாகும் தயாரிப்புகளில் ஒன்றான பிரெஸ்ஸா (Brezza) காம்பாக்ட் எஸ்யூவின் காரின் ZXI+ ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் விலை முன்பு ரூ.13.98 லட்சமாக இருந்தது. இப்போது அது ரூ.13.49 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சேமிப்பு மற்றும் பண்டிகைக் காலச் சலுகைகளுடன், வாடிக்கையாளர்கள் ரூ.1.20 லட்சம் வரை சேமிக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலைகளும் தற்காலிகமானவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, சில மாதங்கள் கழித்து இவற்றில் மீண்டும் அதிகரிப்புகள் கொண்டுவரப்படலாம். இருப்பினும், செப்.22ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள இந்த விலை குறைப்பினால் மாருதி சுஸுகி கார்களின் விற்பனை அதிகரிக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 9, 2025, 10:42 [IST]
English summary
Maruti suzuki announced price cut for its cars following gst 2 point zero
மேலும்... #maruti suzuki #price cut #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X