சொந்த செலவில் சூன்யம் வைத்து கொள்ளும் மாருதி.. குடும்பத்தோட போற காராச்சே.. இதுல போய் இப்படி பண்ணிட்டாங்களே!
இந்தியாவில் அதிக இருக்கை வசதி உடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga)-வும் ஒன்றாகும். இது ஓர் எம்பிவி (MPV) ரக கார் மாடல் ஆகும். இதன் அதிக இட வசதி மற்றும் பெரிய உருவம் காரணமாக இந்தியாவில் குடும்பஸ்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஒரே நேரத்தில் இந்த காரில் 7 பேர் வரை தாராளமாக அமர்ந்து அமர்ந்து பயணிக்க முடியும்.
இத்தகைய காரிலேயே யாரும் விரும்பாத ஓர் மாற்றத்தை மாருதி சுஸுகி நிறுவனம் செய்திருக்கின்றது. அதன் விலைகளையே அந்நிறுவனம் தற்போது உயர்த்தி இருக்கின்றது. ரூ. 15 ஆயிரம் வரை இதன் விலையில் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. ஆரம்ப நிலை வேரியண்டான எல்எக்ஸ்ஐ (ஓ) (LXi (O))-வின் விலையிலேயே இவ்வளவு பெரிய மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது மாருதி சுஸுகி எர்டிகா கார் விரும்பிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. பிப்ரவரி முதல் மாருதி சஸுகி நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகள் சிலவற்றின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பையே அது தற்போது நிறைவேற்றி இருக்கின்றது. மற்ற அனைத்து வேரியண்டுகளின் விலையிலும் ரூ. 10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கின்றன.
இதனால், தற்போது இந்த மூன்று வரிசை இருக்கை அமைப்பைக் கொண்ட எம்பிவி காரின் ஆரம்ப விலை ரூ. 8.84 லட்சமாக மாறியிருக்கின்றது. இந்த கார் மாடலின் அதிகபட்ச விலை ரூ. 13.13 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்கள் நடப்பாண்டு தொடங்கிய உடன் விலை உயர்வை செய்ய ஆரம்பித்துவிட்டனர். மாருதி சுஸுகி நிறுவனம் சற்றே தாமதமாக பிப்ரவரி மாதத்தில் இருந்து அதன் கார்களின் விலையை உயர்த்தி இருக்கின்றது. இருப்பினும், இது மாருதி சுஸுகியின் வாடிக்கையாளர்கள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.
விலை ஏற்றத்தைச் செய்து மாருதி சுஸுகி நிறுவனம் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டதாக பலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த காரின் விற்பனையில் லேசான பாதிப்பைகூட இந்த விலை உயர்வு ஏற்படுத்தாது என நம்பப்படுகின்றது. மாருதி சுஸுகி மட்டுமல்ல அதன் போட்டி நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்தி இருக்கின்றன.
இதை வைத்தே விற்பனையில் எர்டிகா பாதிப்பைச் சந்திக்காது என கூறப்படுகின்றது. இந்தியாவில் எர்டிகா பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டு விதமான ஆப்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஸ்மார்ட் ஹைபிரிட் டெக்னாலஜியும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுவே அந்த காரை அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக மாற்றி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் மாடலின் பெட்ரோல் வெர்ஷன் லிட்டர் ஒன்றிற்கு 20.51 கிமீ வரையிலும், சிஎன்ஜி வெர்ஷன் கிலோ ஒன்றிற்கு 26.11 கிமீ வரையிலும் மைலேஜை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த அதிக மைலேஜ் தரும் திறனும், 7 சீட்டர் வசதியுமே இந்த காரை இப்போதும் டிரெண்டில் உள்ள காராக வைத்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








