ஒருத்தர் விடாம எல்லாரும் மாருதி சுஸுகி காரை தான் வாங்க போறாங்க! சென்னையில் வசிப்பவர்களுக்கு ஓர் குட் நியூஸ்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க் உள்ளதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் மாருதி சுஸுகி கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு சென்னை ஆனது ஓர் முக்கியமான சந்தை ஆகும்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மாருதி சுஸுகியின் அரேனா (Arena) மற்றும் நெக்ஸா (Nexa) டீலர்ஷிப் ஷோரூம்கள் உள்ளன. அரேனா ஆனது விலை குறைவான மாருதி சுஸுகி கார்களை விற்பனை செய்யும் ஷோரூம் ஆகவும், நெக்ஸா ஆனது விலையுயர்ந்த மாருதி சுஸுகி கார்களை விற்பனை செய்யும் ஷோரூம் ஆகவும் விளங்குகின்றன.

அவ்வாறு, சென்னையில் அண்ணா நகரில் உள்ள மாருதி சுஸுகி அரேனா டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றிற்கு சமீபத்தில் நாங்கள் சென்றிருந்தோம். அப்போது அந்த ஷோரூமில் அறிவிக்கப்பட்டு இருந்த கார் சலுகைகளை பார்த்து ஆச்சிரியப்பட்டு போனோம். அதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
ஒரே கார் நிறுவனத்தின் உதவியுடன் செயல்பட்டாலும், ஒவ்வொரு கார் டீலர்ஷிப் ஷோரூம்களும் தனித்தனி நபர்களின் கீழ் செயல்படுகின்றன என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். இதனாலேயே, தங்களது ஷோரூமை நோக்கி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியாக தங்களது ஷோரூம் அளவில் சலுகைகளை அறிவிக்கின்றன. அதாவது, அந்த ஷோரூம் அறிவிக்கும் சலுகைகளை ஒரே பிராண்ட் ஷோரூம் ஆக இருந்தாலும் மற்ற ஷோரூம்களில் பெற முடியாது.

அந்த வகையில், இந்த 2025 டிசம்பர் மாதத்தை முன்னிட்டு சென்னை அண்ணா நகரில் உள்ள மாருதி சுஸுகியின் அரேனா டீலர்ஷிப் ஷோரூமில் அதிகப்பட்சமாக ரூ.79,240 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 9 விலை குறைவான மாருதி சுஸுகி கார்கள் இதன்படி சலுகைகளை பெறுகின்றன.
அதிகப்பட்ச ரூ.79,240 சலுகை ஆனது மாருதி சுஸுகியின் நிமிர்ந்த உயரமான ஹேட்ச்பேக் காரான வேகன்ஆர் (WagonR) மாடலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது இல்லாமல், ஜிஎஸ்டி (GST) குறைப்பு மற்றும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் விலை குறைப்பு மூலம் 1 லட்சத்து 1,950 வரையிலான பணத்தை வேகன்ஆர் காரில் மிச்சப்படுத்தலாம்.

ஆக, வேகன்ஆர் காரை சென்னையின் இந்த குறிப்பிட்ட ஷோரூமில் வாங்குவதன் மூலம் அதிகப்பட்சமாக சுமார் ரூ.1,81,190 வரையில் சேமிக்கலாம் என இந்த அண்ணா நகர் அரேனா ஷோரூமுக்கு வெளியே பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மற்றும் மாருதி சுஸுகியின் விலை குறைப்பு மூலம் அதிக பணத்தை மிச்சப்படுத்தும் கார் என்றால், அது டிசையர் (Dzire) ஆகும்.
இந்த வகையில் மட்டுமே டிசையர் காருக்கு இந்த அளவிற்கு சலுகை என்றால், இது இல்லாமல் டிசம்பர் மாத சலுகையாக ரூ.3,000 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட சென்னை அரேனா ஷோரூமில் மிகவும் குறைவான சலுகையாக ரூ.3,000ஐ டிசையர் பெற்றுள்ளது. வேகன்ஆர் காருக்கு அடுத்து அதிகப்படியான சலுகையாக இந்த ஷோரூமில் ஸ்விஃப்ட் (Swift) காருக்கு ரூ.76,761 வரையிலும், செலேரியோ (Celerio) காருக்கு ரூ.65,500 வரையிலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த குறிப்பிட்ட சென்னை அண்ணாநகர் டீலர்ஷிப் ஷோரூமில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளில் பணம் தள்ளுபடிகள், பழைய வாகனங்களை மாற்றிக்கொள்ளும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், பழைய காரை முறையாக அழித்து அதற்கான சான்றிதழை பெற்று வருபவர்களுக்கு போனஸ்கள் போன்றவை அடங்கும். மேலும், குறிப்பிட்ட கார் மாடல் மற்றும் அதன் வேரியண்ட்டைப் பொறுத்து, கார்ப்பரேட் மற்றும் கிராமப்புற திட்டங்களும் கிடைக்கலாம்.
ஆதலால் காரை வாங்குவோர், முன்பதிவு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட மாருதி சுஸுகி டீலரிடம் இந்த சலுகை விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், வருட இறுதியில் பழைய ஸ்டாக்குகளை விற்று முடிக்க மற்ற மாருதி சுஸுகி டீலர்ஷிப் ஷோரூம்களும் சலுகைகளை அறிவிப்பதற்கு வாய்ப்புள்ளதால், அருகில் உள்ள மாருதி சுஸுகி ஷோரூமையும் தொடர்பு கொண்டு சலுகைகள் ஏதேனும் புதியதாக அறிவிக்கப்பட்டு உள்ளதா என கேட்டறியலாம்.


Click it and Unblock the Notifications









