இனி சோப்பு டப்பான்னு கிண்டல் பண்ண முடியாது! ஆப்போசிட்ல எமனே வந்தாலும் மாருதி கார்கள் உங்க உசுர காப்பாத்தும்!

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) இருந்து வருகிறது. இதற்கு சரியான விலை நிர்ணயம், சிறப்பான மைலேஜ், பிரம்மாண்டமான சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் என ஏகப்பட்ட காரணங்களை கூற முடியும். ஆனால் பாதுகாப்பு விஷயத்தில் மட்டும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தன.

எனவே தங்களுடைய கார்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் விஷயத்தில் மாருதி சுஸுகி தற்போது நிறுவனம் தனி கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக அனைத்து கார்களின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளை வழங்கும் முயற்சியை மாருதி சுஸுகி நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

Maruti Suzuki Baleno Airbags

தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஏராளமான கார்களில் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் விடுபட்டுள்ள கார்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளை அறிமுகம் செய்யும் பணிகளை மாருதி சுஸுகி நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனத்தின் 2 கார்களில் தற்போது ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில், மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) ஒன்றாகும். இந்த புதிய அப்டேட் காரணமாக, இனி மாருதி சுஸுகி பலேனோ காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வசதி இருக்கும். இதன் காரணமாக மாருதி சுஸு பலேனோ காரின் விலை 0.50 சதவீதம் உயர்ந்துள்ளது.

Maruti Suzuki Ertiga

தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பலேனோ கார் 6.70-9.92 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ஆனால் இனிமேல் இந்த கார் 6.73-9.96 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும். மாருதி சுஸுகி பலேனோ காரில், 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வசதியை பெற்றுள்ள மற்றொரு கார், மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) ஆகும். இந்த புதிய அப்டேட் காரணமாக மாருதி சுஸுகி எர்டிகா காரின் அனைத்து வேரியண்ட்களிலும் இனி 6 ஏர்பேக்குகள் வசதியை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

இதன் காரணமாக மாருதி சுஸுகி எர்டிகா காரின் விலை 1.4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா கார் 8.96-13.25 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இனிமேல் 9.09-13.44 லட்ச ரூபாய் என்ற விலையில் மாருதி சுஸுகி எர்டிகா விற்பனை செய்யப்படும்.

இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். மாருதி சுஸுகி எர்டிகா காரில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள 7 சீட்டர் கார்களில் ஒன்றாகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி பலேனோ மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா ஆகிய 2 கார்களும் ஏற்கனவே மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையைதான் பதிவு செய்து வருகின்றன. இந்த சூழலில்தான் தற்போது இந்த 2 கார்களின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இது இந்த 2 கார்களின் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க உதவி செய்யும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 17, 2025, 23:03 [IST]
English summary
Maruti suzuki baleno ertiga get 6 airbags as standard check all details here
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+