31 கிமீ போக வெறும் 83 ரூபாதான் செலவாகுமா! விலை குறைவான காரை வாங்கி போட்றதுக்கு ஷோரூமுக்கு படையெடுக்கும் மக்கள்

இந்திய சந்தையில் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு (Premium Hatchback Cars) தனி டிமாண்ட் உள்ளது. ஹூண்டாய் ஐ20 (Hyundai i20), டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) என ஏராளமான பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்கள் இருந்தாலும் கூட, இந்த செக்மெண்ட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டிருப்பது என்னவோ மாருதி சுஸுகி பலேனோதான் (Maruti Suzuki Baleno). நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் கூட, இந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆதிக்கம் தொடர்ந்துள்ளது.

நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15,480 மாருதி சுஸுகி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17,517 ஆக இருந்தது. இது 12 சதவீத வீழ்ச்சி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Maruti Suzuki Baleno

இருப்பினும் இந்திய சந்தையில் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars), மாருதி சுஸுகி பலேனோ 5வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 4 இடங்களில் முறையே மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ், மாருதி சுஸுகி வேகன் ஆர், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகிய கார்கள் இருக்கின்றன.

5வது இடத்தில் மாருதி சுஸுகி பலேனோ உள்ள நிலையில், 6, 7, 8, 9 மற்றும் 10வது இடங்களில் முறையே மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி டிசையர் மற்றும் டாடா பன்ச் ஆகிய கார்கள் உள்ளன.

Tata Altroz

அதாவது மாருதி சுஸுகி பலேனோ காரின் நேரடி போட்டி மாடல்களான ஹூண்டாய் ஐ20, டொயோட்டா க்ளான்சா மற்றும் டாடா அல்ட்ராஸ் ஆகிய கார்களுக்கு டாப் 10 பட்டியலில் இடமே இல்லை. இதன் மூலம் மீண்டும் ஒரு முறை மாருதி சுஸுகி பலேனோ, பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டான சிக்மா 6.70 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டான ஆல்பா ஏஜிஎஸ் 9.92 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மாருதி சுஸுகி பலேனோ காரை வாடிக்கையாளர்கள் கருதுவதால்தான், இந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி பலேனோ முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி பலேனோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக இருக்கின்றன. கோவையில் இன்றைய நிலவரப்படி (மார்ச் 10) ஒரு கிலோ சிஎன்ஜி 83 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி பார்த்தால் வெறும் 83 ரூபாய் செலவில் 30.61 கிலோ மீட்டர் பயணம் செய்ய முடியும். அதாவது ஒரு கிலோ மீட்டர் பயணம் செய்ய சுமாராக வெறும் 2.71 ரூபாய் மட்டுமே செலவாகும். நல்ல மைலேஜ், இயக்குவதற்கு குறைவான செலவு மற்றும் சரியான விலை நிர்ணயம் ஆகிய அம்சங்கள் எல்லாம் ஒருங்கிணைந்துதான், மாருதி சுஸுகி பலேனோவை வெற்றிகரமான தயாரிப்பாக மாற்றியுள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, March 10, 2025, 22:49 [IST]
English summary
Maruti suzuki baleno premium hatchback sales report february 2025 12 per cent down
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+