ஹூண்டாயை குலை நடுங்க வைக்கும் மாருதி கார்! 31 கிமீ மைலேஜை வாரி வழங்குது! ஆனா விலை உண்மையா இவ்ளோதானா!
இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில்தான் மாருதி சுஸுகி பலேனோ முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதற்குள்ளாகவே 15 லட்சத்திற்கும் அதிகமான மாருதி சுஸுகி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டன. இத்தனைக்கும் இது கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாத இறுதி வரையிலான நிலவரம் ஆகும். 15 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை மாருதி சுஸுகி பலேனோ கடந்து தற்போது கிட்டத்தட்ட ஒரு வருடமாகி விட்டது.
எனவே ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) காரின் நேரடி போட்டி மாடலான மாருதி சுஸுகி பலேனோ காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை தற்போது மேலும் உயர்ந்திருக்கும். மாருதி சுஸுகி பலேனோ கார் ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருவதால்தான், இவ்வளவு பிரம்மாண்டமான மைல்கல்களை எல்லாம் எட்ட முடிகிறது.

இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் மாருதி சுஸுகி பலேனோ கார் மிகச்சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. மாருதி சுஸுகி பலேனோ காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் 13,180 மாருதி சுஸுகி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 12,357 மாருதி சுஸுகி பலேனோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது மார்ச் உடன் ஒப்பிடும்போது ஏப்ரலில் 823 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த வளர்ச்சியின் மூலமாக நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars), மாருதி சுஸுகி பலேனோ 10வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 9வது இடத்தில் இருப்பது மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) ஆகும்.
இந்த 2 கார்களுக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 233 யூனிட்கள் மட்டுமே. அதாவது மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான விற்பனை எண்ணிக்கை 13,413 ஆகும். எனவே மாருதி சுஸுகி பலேனோ நூலிழையில் 9வது இடத்தை தவற விட்டுள்ளது எனலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா பிரீமியம் டீலர்ஷிப்கள் மூலமாகவே பலேனோ கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் 8 கார்கள் நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதில், மிகவும் அதிகமாக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி பலேனோ திகழ்கிறது.
இதற்கு காரணம் அதன் விலை நிர்ணயம் மற்றும் மைலேஜ் இரண்டும்தான் என நாங்கள் கருதுகிறோம். மாருதி சுஸுகி பலேனோ காரின் விலை வெறும் 6.70 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். அதே நேரத்தில் இதன் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக இருக்கின்றன.
இவற்றுடன் மாருதி சுஸுகி பலேனோ காரில், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுவதும் அதன் பலமாக உள்ளது. ஆனால் மாருதி சுஸுகி பலேனோ காரில் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுவதில்லை என்பது ஒரு குறை. அதாவது அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுவதில்லை.
மாருதி சுஸுகி பலேனோ காரின் டாப் வேரியண்ட்களில் மட்டுமே 6 ஏர்பேக்குகள் வசதி வழங்கப்படுகிறது. ஆனால் ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டால், இன்னும் நன்றாக இருக்கும். இது நடக்கும்பட்சத்தில் மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








